jaga flash news

Thursday, 7 January 2021

குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்



குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்.

தினமும் ராசி பலன் பார்த்து இன்றைய நாள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆசைபடுகிறறோம்.

தினசரி பத்திரிக்கையில் ராசி பலன் பகுதியிலோ அல்லது காலண்டரிலோ குளிகை என்ற பகுதி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ராகு காலம், எம கண்டம் தெரிந்த அளவு குளிகை பற்றி பலருக்கு தெரிவதில்லை.

வார நாட்கள் 7 

நவகிரகங்கள் 9 

ராகு, கேதுவை தவிர மற்ற கிரகங்களின் நாட்கள் தினமும் ஒவ்வொரு நாள் உண்டு.

இன்று புதன் கிழழை .புதனின் ஆதிக்க நாள்.

ஆனால் ராகு, கேதுவிற்கு தினசரி 
1 1/2 மணி நேரம் ராகு காலம், எம கண்டமாக பிரித்து கொடுக்கப்படுகிறது.

ஆனால் குளிகை யார்?

குளிகன் சனி, ஜேஸ்டா தேவியின் புதல்வன்.

ராகு, கேதுவை போல் நாட்கள் தினமும் 1 1/2 மணி நேரம் இவருக்கும் பிரித்துகொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் செய்யும் கெடு செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் அசுப காரியங்களை தவிர்ப்பபது நல்லது.

ஆனால் எந்த  நல்ல செயல் செய்தாலும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

குறிப்பாக கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும்.

சுப செயலான நகை வாங்குவது,தொழில் தொடங்குவது, நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகளை தாராளமாக செய்யலாம்.

அது போல் கடன் வாங்குவது, பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கிழமைகள் பகல் பொழுது ;இரவுப் பொழுது

ஞாயிறு 03.00 04.30;     09.00 10.30

திங்கள் 01.30 03.00;     07.30 09.00

செவ்வாய் 12.00 01.30;  12.00 01.30

புதன் 10.30 12.00;            03.00 04.30

வியாழன் 09.00 10.30;     01.30 03.00

வெள்ளி 07.30 09.00;       12.00 01.30

சனி 06.00 07.30;              10.30 12.00

மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி முன்னேற்றம் பெறுங்கள்.

குறிப்பாக கடன் அதிகமிருப்பபவர்கள் செவ்வாய் கிழழை 12 To 1.30 குளிகை நேரம் இருந்தாலும்,அதிலும் குறிப்பாக 1 To 1.30 வரை செவ்வாய் ஹோரையில் குளிகை நேரம்.

இந்த 1/2 மணி நேரத்தில் கடனை கொடுத்து பாருங்கள்.கடன் விரைவாக குறைவதை அனுபவித்தில் உணரலாம்.


2 comments:

  1. அய்யா....! வெ.சாமி..அவர்களுக்கு... ஜான்ஸிகண்ணனின் 2021−ஆம் வருடத்திய பொங்கல் நல்வாழ்த்துகள். தங்களின் ஆசிக்காக பதம் பணிந்து வீழ்கிறேன்...அய்யா. என்னை ஆசீர்வதியுங்கள்.

    ReplyDelete
  2. Fri. 16 June, 2023 at 7.49 am.

    குளிகை :

    ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகப் பலன்கள் அறிய ராசிக் கட்டத்தில், லக்னம், கிரக ஸ்புடம் செய்து பிரதான கிரகங்களை குறிப்பது முக்கியமாகிறது. அந்த கிரகங்களின் அமைப்புக்கேற்ப தான் பலன்கள் நடைபெறும்.

    அந்த பிரதான கிரகங்களுக்கு புதல்வர்கள் உள்ளனர். அவர்கள் தான் "உபகிரகங்கள்" எனப்படுவர்.

    அவர்களும் தம் தந்தையைப் போன்றே ராசிகளில் இடம் பெற்று பலன்களை நிர்ணயிப்பதில் பங்கு ஏற்கின்றனர்.

    அவர்கள்.....

    பிரதான கிரகம் : உபகிரகம்
    -------------------------- --------------------------

    சூரியன் : காலன்
    சந்திரன் : பரிவேடன்
    செவ்வாய் : தூமன்
    புதன் : அர்த்த பிரகாரன்
    குரு : எம கண்டன்
    சுக்கிரன் : இந்திர தனுசு
    சனி : குளிகன்
    ராகு : விதிபாதன்
    கேது : தூம கேது

    மேற்கூறப்பட்ட உபகிரகங்கள் நல்லவர்கள் இல்லை.

    ஜீவ இம்சை, கொலை புரிதல், மரண தண்டனை போன்ற கொடூரச் செயல்களுக் குக் காரகர்கள். சுபங்களைக் கொடுக்க மாட்டார்கள். கெடுக்க வல்லவர்கள்.

    எனினும், குளிகன் மட்டும் தானிருக்கும் ஸ்தானத்தில் தனக்கே இயல்பான தீய குணத்தை வியாபிக்கச் செய்வான்.

    மற்றவர்கள் அவ்வாறின்றி, காலத்தை கொஞ்சம் அனுசரித்து நற்பலன்களைக் கூட அளிப்பார்கள்.

    உபகிரகங்களை அவர்களின் தன்மைக்கு ஏற்ப குளிகாதிர், தூமாதியர் என இரு பிரிவுகளாகப் பிரித்துக் கூறுவர்.

    குளிகன், எமகண்டன், அர்த்த பிரகாரன், காலன் இந்த நால்வரும் "குளிகாதியர்" என்பார்கள்.

    இந்தக் காலன் என்பவனையே "காலநேமி" என்பர்.

    பரிவேடன், இந்திர தனுசு, தூமன், தூமகேது, விதிபாதன் இந்த ஐவரையும்...தூமாதியர் என்பார்கள்.

    இவர்ககளில் பிரதான கிரகங்களுக்கு இருப்பது போன்று, ஆட்சி வீடுகள் குளிகாதியர்களுக்கும் உண்டு.


    குளிகனுக்கு கும்பமும்....
    எமகண்டனுக்கு தனுசும்....
    அர்த்த பிரகாரனுக்கு மிதுனமும்
    காலனுக்கு மகரமும் ..... ஆட்சி வீடுகள்.

    உபகிரகங்கள், ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிட்ட காலம் தங்கியிருப்பதில்லை.

    ஒவ்வொரு நாளும் 3 3/4 நாழிகை அதாவது, 1 1/2 மணி நேரம் வீதம் பகல், இரவு நேரங்களில் உதயமாகின்றனர்.

    குளிகாதியர்களுக்கு, பிரதான கிரகங்களுக்கு இருப்பது போன்ற சஞ்சாரப் பாதையும் கிடையாது. அவற்றின் உதய நேரமும் ஒரே சீராக இருப்பதில்லை.

    ஒவ்வொரு கிழமைகளிலும், சூரிய உதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் பின்பும், வெவ்வேறு நேரங்களில் தோன்றுவர்.

    இதுவே குளிகனைப் பற்றிய செய்திகள்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete