வைகுண்ட ஏகாதசி விரதமிருக்கும் முறை என்ன? இரவு கண் விழிப்பது எப்போது? முழு விபரம் இதோ!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு கண்விழிக்க வேண்டுமா இல்லை நாளை கண் விழிக்க வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் வைகுண்ட ஏகாதசி விரதமுறையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது பெருமாளுக்கு உரியது. மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து கிடைக்கும் பலன் கிடைக்கும்.
vaikunta ekadasi vaikunta ekadashi
பெருமாளின் அருளை பெற இந்த விரதம் முக்கியமானது. இதை எப்படி தொடங்கலாம் என்பதை பார்க்கலாம். வைகுண்ட ஏகாதசி . அதற்கு முந்தைய நாள் தசமி திதியாகும். எனவே அன்று முதல் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
உணவை கைவிட்டுவிட்டு விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நாளை அதிகாலை 4 மணிக்கு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழும்.
இதை தரிசனம் செய்த பின்னர் அன்று பகல் முழுவதும் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடர வேண்டும். நாளை இரவு கண் விழித்து பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பாரணை என்றால் 21 காய்கறிகளை கொண்டு உணவு தயாரித்து சாப்பிடுவது.
vaikunta ekadasi vaikunta ekadashi
அடுத்த நாள் துவாதசி திதி முடிவடைகிறது. பாரணையில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும். இன்றைய தினம் இரவு தூங்கலா். நாளைதான் கண் விழிக்க வேண்டும்.
பகலில் தூங்காமல் அன்று இரவு தூங்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதமன்று விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். அல்லது நமோ நாராயண என்றாவது சொல்ல வேண்டும். நாளை காலை திருப்பள்ளிஎழுச்சி பாடி பெருமாளை துயில் எழுப்புவார்கள். அதன் பிறகு உற்சவர் சொர்க்க வாசல் வழியாக காட்சி தந்து கோயிலை வலம் வருவார். திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
No comments:
Post a Comment