நெல்லி மரம் வாசலில் வைக்கலாமா? சின்ன நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்த்தால் சொத்து சேருமாமே.. வாவ்
வீட்டில் சில வகையான மரங்களை வளர்க்கக் கூடாது என்பார்கள்.. அந்தவகையில் நெல்லிக்காய் மரங்களை வீட்டு வாசலில் வைக்கலாமா? வைக்க கூடாதா? இதுகுறித்து ஆன்மீகம் சொல்வதென்ன? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சிலர் சொல்கிறார்கள்.. ஒரே ஒரு மரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டில் நட்டு வைத்தால் மரத்தில் காய்கள் காய்க்காது. இந்த மரத்துடன் சேர்த்து இன்னொரு மரமும் நட்டு வைக்கும்போதுதான் அதில் காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.
Spirituality Amla tree Gooseberry tree
புளிப்புத்தன்மை: அதிலும், புளிப்பு தன்மையுள்ள மரங்களுக்கு அடியில் மற்ற செடிகள் முளைப்பதில்லை. அதுபோலவே பெரிய நெல்லிக்காய் மரத்திற்கு பக்கத்தில் செடிகளும் முளைக்காது என்பார்கள்.. குறிப்பாக, புளியமரம், பெரிய நெல்லிக்காய் மரம் போன்றவை அமிலத்தன்மை கொண்டுள்ளதால் தேனீக்களும், வண்டுகளும்கூட இந்த மரங்களில் வந்து அமர்வதில்லையாம். இதனால் எளிதாக மகரந்த சேர்க்கையும் நடைபெறுவதில்லை.. இதன்காரணமாக பெரிய நெல்லிக்காய் மரத்தில், காய்களும் காய்க்காமல் போய் விடுகின்றன.
இதுவே நெல்லிக்காய் மரம் தோட்டத்தில் இருந்தால், அதிக பூச்சிகள் வந்து மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற உதவுகிறது... காய்களும் தோட்டத்தில் அதிகமாக காய்க்கிறது என்பார்கள்.
லட்சுமி கடாட்சம்: எனினும், நெல்லிக்காய் மரங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. அதனால், சிறிய செடியாக வாங்கி வைத்து வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.. இந்த மரம் வளர, வளர வீட்டின் செல்வமும் வளரும் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது... அதுமட்டுமல்ல, நெல்லி மரத்தை வளர்த்து வருவதால், வீட்டிலுள்ள துர்சக்திகளும், கண் திருஷ்டிகளும் விலகும்.. எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிலிருந்து வெளியேறும்..
முக்கியமாக வறுமை வீட்டிலிரந்து வெளியேறி, பணம், சொத்துக்கள் வந்து சேரும். பதவி உயர்வு போன்றவை கிடைத்து, சமூக அந்தஸ்து கிடைக்கும். நெல்லி மரத்தை வைக்க முடியாதவர்கள், நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.. நிதி நெருக்கடிகள் இதனால் மெல்ல மெல்ல தீரும்.. தொழிலில் தடங்கல் இருந்தாலும் அவை விலகிவிடுமாம்.
ஆரோக்கியம்: அதுமட்டுமல்ல, திருமகளான லட்சுமிதேவியின் வடிவமான நெல்லி மரம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லி மரத்தின் உயர்வைப் பற்றி, "அகத்தியர் குணபாடம்" என்ற நூலிலும் விரிவாகக சொல்லப்பட்டுள்ளது.. எனவே உயர்வை தரக்கூடிய சிறிய நெல்லிமரம், வீட்டு வாசலில் தாராளமாக இருக்கலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment