jaga flash news

Tuesday, 14 January 2025

இட்லி புசுபுசுன்னு சாஃப்டாக வரும்.



உணவு
பொங்கி நிற்கும் மாவை கலக்காதீங்க மக்களே..! சாஃப்ட் இட்லி சீக்ரட் கூறும் வெங்கடேஷ் பட்
இட்லி சாஃப்டாக வரவேண்டுமா அப்படி என்றால் பொங்கி நிற்கும் மாவை கலைக்காமல் அப்படியே எடுத்து இட்லி ஊற்ற வேண்டும்.

இட்லி
இட்லி மாவு அரைக்கும் முறை


இட்லிக்கு மாவு அரைப்பது என்பது சவாலான ஒன்று தான். அதனாலேயே பலரும் இட்லி மாவு அரைப்பது இல்லை. கடைகளில் மாவு வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் செஃப் வெங்கடேஷ் பட் சொல்வது போல மாவு அரைத்தால் சுவை அருமையாக இருக்கும்.

மாவு அரைக்க தெரியாதவர்கள் கூட இந்த முறையில் மாவு அரைத்தால் நன்றாக இருக்கும். கடினமே இல்லாத வெறும் மூன்று பொருட்களை வைத்து மாவு அரைக்கும் எளிமையான முறை.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு
இட்லி ரவை
உப்பு


செய்முறை

இந்த மூன்று பொருட்களை வைத்தே சுவையான இட்லி மாவு அரைத்து இட்லியும் செய்ய முடியும்.  தோசைக்கும் இட்லிக்கும் ஒரே மாவு வைத்து சுடுவார்கள் அதே போல ஒரே மாவை வைத்து தோசை இட்லி பணியாரம் எல்லாவற்றையும் செய்வது வழக்கம் தான்.

ஆனால்  இப்போ நீங்கள் கொஞ்சம் புதுவிதமாக ட்ரை பண்ணுங்க. இதற்கு உளுந்து,இட்லி ரவை போதுமானது.


உளுந்தை நன்கு கழுவி ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்ன இதை தண்ணீர் இல்லாமல் கிரைண்டரில் சேர்த்து அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.  

எந்த கப்பில் போட்டாலும் ஒரு கப் உளுந்து ரெண்டு கப் இட்லி ரவை எடுக்க வேண்டும்.

பின்னர் உளுந்து அரையும் போது ரவையை நன்கு கழுவி வைக்கவும். கழுவும்போதே அது ஊறிவிடும். பின்னர் உளுந்து நன்கு அரைந்து வந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.


பின்னர் கிரைண்டரில் ரவையை சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். இதற்கும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.


இவை இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்ததும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு மாவையும் சேர்த்து உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடவும்.

 இதனை அப்படியே ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். நன்றாக புளித்து வந்ததும் மாவை கலைக்காமல் எடுத்து இட்லி ஊற்றலாம். இட்லி புசுபுசுன்னு சாஃப்டாக வரும்.


     

No comments:

Post a Comment