jaga flash news

Thursday, 16 January 2025

அன்ன தோஷம்


அன்ன தோஷம் ஏற்படுவதற்கு சாப்பாட்டில் நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாம்! தவறியும் இனி இந்த தவறை செய்து விடாதீர்கள், வறுமை வந்து சேரும்.

 
அன்னபூரணி கொடுக்கும் சாபம் தான் அன்ன தோஷமாக மாறுகிறது. நாம் அன்னத்தில், அதாவது சாப்பாட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அன்னபூரணியின் கட்டுப்பாட்டிற்கு கீழே செல்லும். ஒரு பருக்கையை கூட வீணாக்காமல் இருப்பவர்கள் உடைய அடுத்த ஏழு சந்ததிகளும் வறுமை இன்றி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அதே போல அதிக அளவு சாப்பாட்டை வீணாக்குபவர்கள் இதற்கு நேர்மாறான பலன்களையும் காண்பார்கள். அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததிகளும் வறுமையில் வாட கூடிய நிலை ஏற்படுமாம். இதையே அன்ன தோஷம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணமும் குறிப்பிட்டு சொல்ல முடியும். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.




ஒருவருக்கு அன்ன தோஷம் ஏற்பட முதலில் அன்னத்தை வீணாக்குவது தான் காரணம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு சமைக்க வேண்டும். அதிகமாக சமைத்து விட்டு பின் அதை சாப்பிட முடியாமல் தூக்கி போட வேண்டிய நிலைமைக்கு சமைக்கக்கூடாது. சாதம் மீந்து விட்டால் அதனை மறு உபயோகம் செய்வது அல்லது வாயுள்ள ஜீவன்களுக்கு உணவிடுவது போன்றவற்றை செய்ய வேண்டும்.


இப்படி செய்யாமல் அன்னத்தை குப்பையில் கொட்டுவது அல்லது சாப்பிட முடியாமல் செய்து விடுவது தோஷத்தை ஏற்படுத்தும். அன்ன தோஷம் ஏற்பட்டால் வறுமை வீட்டில் கட்டாயம் தாண்டவமாடும். நீங்கள் என்னதான் உழைத்தாலும் உழைத்த பணம் உங்களிடம் நிலைக்காமல் போய்விடும் ஆபத்து உண்டு. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது பழமொழி. அன்னத்தை ஒருவருக்கு பசியின் பொழுது தானமாக வழங்குவது என்பது ஏழேழு பிறவிக்கும் புண்ணியத்தை சேர்க்க வல்லது.



நம்முடைய வீட்டில் சாதம் சிறிதளவு மீந்து போனாலும் அதை குப்பையில் கொட்டி விடாமல் தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாள் இரவில் அந்த சாப்பாட்டை நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வையுங்கள். ஒரு சிலர் பாலித்தீன் பைகளில் குப்பையோடு குப்பையாக போட்டு அன்னத்தை வீணாக்குவார்கள். இது மாபெரும் பாவத்தை சேர்க்கும். இதுதான் உங்களுடைய தீராத பிரச்சனைக்கும் காரணமாக அமைந்துவிடும்.


ஒரு கைப்பிடி சாதம் இருந்தாலும் அதனை வீணாக்காமல் பிராணிகளுக்கு வைப்பது நல்லது. அதற்கு பதிலாக கையில் இருக்கும் அன்னத்தை தூக்கி வீசினால் கட்டாயம் பாவம் வந்து சேரும். உங்கள் கைகளால் தூக்கி வீசப்படும் சாதம் அன்ன தோஷத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எந்த கைகளால் சாப்பாட்டை நீங்கள் தூக்கி வீசி விடுகிறீர்களோ! அதே கைகளில் பணம் தாங்காமல் செய்து விடுவாள் அன்னபூரணி தேவி. அன்னபூரணிக்கு அன்னத்தை மட்டுமல்ல, செல்வத்தையும் கொடுக்கும் ஆற்றல் உண்டு.


அன்னபூரணியின் அருள் இருந்தால் தான் வறுமை இல்லாத வாழ்வும் அதன் மூலம் செல்வ செழிப்பும் ஏற்படும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னபூரணியின் படம் வைத்திருப்பது சகல யோகங்களையும் கொடுக்கும். குறிப்பாக பூஜை அறையில் அன்னபூரணியின் சிலைக்கு அரிசி போட்டு வைத்திருப்பது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை பூஜையின் பொழுது அரிசியை மாற்றி வைத்து விடுவது உத்தமமான செயலாகும். அதில் இருந்த பழைய அரிசியை பறவைகளுக்கு மொட்டை மாடியில் தானமாக வையுங்கள். அதை பறவைகள் உண்டால் உங்களுடைய வாழ்க்கை அதிர்ஷ்ட பாதையில் செல்லும்.


No comments:

Post a Comment