jaga flash news

Wednesday, 15 January 2025

வீடு, தொழில், திருமண யோகங்களைப் பெற.. செவ்வாய் பகவானுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?


வீடு, தொழில், திருமண யோகங்களைப் பெற.. செவ்வாய் பகவானுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

சென்னை: செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், தைரியம், வேகத்துக்கு காரணமானவராக இருக்கிறார். ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு ஒரு செயலைச் செய்வதற்கான தைரியமும், ஆற்றலும் கைகூடி வரும். செவ்வாய் ஜாதகத்தில் வலுவில்லாமல் இருந்தால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

செவ்வாய் பகவானை தொடர்ந்து மனதார வழிபடுவதும், அதுக்குரிய சில பரிகாரங்களைச் செய்வதும் நற்பலன்களைத் தரும். செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் கிடைப்பதால் உங்களுடைய தொழில், வேலை, திருமண வாழ்க்கையில் அனுகூலத்தைப் பெறுவீர்கள். வீடு, மனை சார்ந்த அனைத்து பொருட்களிலும் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.


நவக்கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார். செய்கின்ற செயலில் அச்சத்தைப் போக்கி தைரியமாக செய்து முடிக்க உதவுபவராக செவ்வாய் திகழ்கிறார். செவ்வாய் பகவானால் அனைத்து விதமான சுப பலன்களும் வாழ்க்கையில் கிடைக்கும். அந்த வகையில், செவ்வாய் கிரகத்தின் சுப பலன்களைப் பெற என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..


செவ்வாய் கிரகத்துக்கு உரிய நிறம் சிவப்பு என்பதால் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் தைரியத்துடன் செயல்படவும், முன்னேறவும் சிவப்பு நிற பொருள்களை பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். செவ்வாய் பகவானுக்கு உரிய சிவப்பு நிறங்களை நீங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய செயல்பாடுகளில் தைரியமும், வேகமும் அதிகரிக்கும். நேர்மறையான காரியங்களால் மகிழ்ச்சி பெருகும். சிவப்பு நிற ஆடைகளை அடிக்கடி பயன்படுத்தி வருவது அனுகூலத்தை தரும்.

அதேபோல, செம்பு பாத்திரம், செப்பு உலோகமும் செவ்வாய் பகவானுக்கானது தான். ரத்தம் தொடர்பான பிரச்னைகள் வருவதைத் தடுக்க செப்பு காப்பை நம் கைகளில் அணிவது நல்லது. செவ்வாய்க்கிழமையன்று தாமிரத்தால் உருவாக்கப்பட்ட பொருட்களை தானமாக வழங்குவது நற்பலன்களைத் தரும். இதனை அணிவதால் உங்களுடைய நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.


செவ்வாய் பகவானுக்குரிய வெல்லத்தை உட்கொள்வதும், தானமாக அளிப்பதும் நல்ல பலன்களை அள்ளித் தரும். இதன் மூலமாக உங்களுடைய உடலில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வேகமாகச் செய்து முடிப்பீர்கள். வெல்லம் மற்றும் சப்பாத்தி சேர்த்து பசுக்களுக்கு கொடுப்பது நல்லது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக உண்ணும் உணவில் வெல்லத்தை சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

செவ்வாய்க்குரிய தானியமாக பார்லி தானியம் உள்ளது. இது சிறப்பான ஆற்றலை வழங்கக் கூடியது என்பதால் பார்லி சாப்பிட்டு வருவதால் உங்களின் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், செழிப்பும் அதிகரிக்கும். பார்லி மாவை தானமாக அளிப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். பெளர்ணமி மற்றும் அமாவாசை நாளில் பார்லி மாவை தானம் கொடுப்பது சிறப்பு.



No comments:

Post a Comment