jaga flash news

Monday, 20 April 2026

இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்..



இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்.. என்னென்ன? தமிழ்நாட்டில் மட்டும் 3 இடம் இருக்குதாம்?

இந்தியர்களாகிய நாம் இந்தியாவில் எந்த இடத்திற்கும், எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு. சில முக்கிய இடங்களுக்கு செல்ல அரசு அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இப்படியான நம் இந்தியாவிற்குள் சில இடங்களுக்கு இந்தியர்களாகிய நமக்கே அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அப்படியான இடம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

சென்னையில் உள்ள ரெட் லாலிபாப் விடுதி இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அந்த விடுதியில் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுவதாகவும் பாஸ்போர்ட் கொடுத்தால் மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.



லட்சக்கணக்கான வெளிநாட்டினரை ஈர்க்கும் சுற்றுலாத்தலம் கோவா. விதவிதமான கடற்கரைக்கு பெயர்போன கோவாவில், சில கடற்கரைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளின் ப்ரைவஸியை பாதுகாக்க இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.


1800-களில் ரஷ்யா அரசால் கட்டப்பட்ட இடம் ரஷ்ய காலனி. கூடங்குளத்தில் அமைத்துள்ள இந்த காலனிக்கு இந்தியர்கள் செல்ல அனுமதியில்லையாம். ரஷ்ய அரசிடம் அனுமதிபெற்ற சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் அமைந்துள்ள ப்ரண்ட்ஸ்லேண்ட் ஹோட்டலுக்கு இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.


அகமதாபாத்தில் அமைத்துள்ள சகுரா ரியோகான் உணவகம் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஃப்ரீ கசோல் கஃபே, இந்தியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அனுமதி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த உணவகம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment