புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை
தேர்தல் வந்துவிட்டாலே நம்முடைய எல்லோருடைய விரல்களிலும் இடம்பிடிக்கும் அந்த சிறு நீல நிறக் குறி, வெறும் மை கிடையாது, அது ஒரு நாட்டின் ஜனநாயக நேர்மையை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த அறிவியல் ஆயுதம் என்றே சொல்லலாம்.. ஒருமுறை வாக்களித்தவர் மறுபடியும் வாக்களிப்பதைத் தடுக்கும் இந்த "அழியாத மை"யை, ஆங்கிலத்தில் Indelible Ink என்பார்கள்.. இந்த மை எப்படி செயல்படுகிறது? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தேர்தல் முடிந்ததுமே ஒரு நபர் மீண்டும் ஓட்டு போட முடியாமல் தடுப்பதற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளில் ஒன்று "மறையாத மை ஆகும்.. இந்த மை பொதுவாக வாக்காளரின் வலது கை சுட்டுவிரலில், ஓட்டு பதிவு செய்த உடனே பூசப்படுகிறது..
மேலும் கண்டறிக
இந்த மையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இது சாதாரண தண்ணீரால் கழுவினாலும் அழியாது.. சோப்பு போட்டு கழுவினாலும் அழியாது..
இந்த மையின் முக்கிய அடிப்படை ரசாயனம் "சில்வர் நைட்ரேட்" ஆகும்.. இது தோலின் மேல்தோல் பகுதியுடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்தி, அழியாத கறை உருவாக செய்கிறது.. இப்படியொரு சூப்பர் யோசனை, முதல் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது..
எப்படி மை செயல்படுகிறது
இந்த மை விரலில் வைக்கப்பட்டவுடன், அது தோலில் உள்ள புரதச்சத்துடனும், இயற்கையாக இருக்கும் ஈரப்பதத்துடனும் வினைபுரிகிறது. இந்த வேதிவினையின் விளைவாக, அது தோலில் ஒரு நிரந்தரமான கறையை உருவாக்குகிறது.
இது ஏன் சோப்பு போட்டு கழுவினாலும் போவதில்லை தெரியுமா? ஏனென்றால் இது தோலின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்வது கிடையாது.. மாறாக தோலின் செல்களுக்குள்ளேயே ஊடுருவி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் சோப்பு மட்டுமல்ல, பெட்ரோல் அல்லது எந்த விதமான திரவங்களை கொண்டு தேய்த்தாலும் இந்த கறை நீங்காது.
தோலின் செல்கள் இயற்கையாகவே உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை அப்படியே இருக்கும்.. இப்படி தோலின் செல்கள் உதிர்வதற்கு குறைந்தது சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.. அதுவரை இந்த கறையின் அடையாளம் மறையாது... தோல் இயல்பாக புதிதாக உருவாகும்போது தான் அந்த கறை மெல்ல மெல்ல மறைய துவங்கும்.
மை ஸ்பெஷாலிட்டி
நம்முடைய இந்தியாவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கவும், கள்ள வாக்குகளைத் தடுக்கவும் ஒரு வழிமுறை தேவைப்பட்டது... இதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தீர்வை தேடியபோது, (National Physical Laboratory of India அதாவது தேசிய இயற்பியல் ஆய்வகம் இந்த மையை உருவாக்கியது.
முதன்முதலில் 1962ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் இந்த மை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் இந்த மை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்த மை செய்யும் வேலையையும், வெற்றியையும் பார்த்து, இன்று கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா என உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து இந்த மையை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுத் தேர்தல்களுக்குப் பயன்படுத்துகின்றன.
மை உற்பத்தியின் பின்னணி
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையை தயார் செய்வது மிகப்பெரிய பிராசஸ் ஆகும்..இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான இந்த மையைத் தயாரிக்கும் பிரத்யேக உரிமையை மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Ltd) பெற்றுள்ளது. இது கர்நாடக அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.. பல வருடங்களாகவே இந்திய தேர்தல்களுக்கு தேவையான இந்த சிறப்பு மை இவர்கள் தான் வழங்கி வருகிறார்கள்.
தேர்தல் காலங்களில் கோடிக்கணக்கான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ரசாயனக் கலவை, மிக மிக சீக்ரெட்டாகவே பாதுகாக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் ஏன் இது முக்கியமானது?
வாக்காளர் அடையாள அட்டை முதல் டிஜிட்டல் முறைகள் வரை பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், வாக்குச் சாவடியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, ஒரு நபர் ஏற்கனவே வாக்களித்துவிட்டாரா இல்லையா என்பதை கண்டறிய விரலில் இருக்கும் இந்த அடையாளமே மிக எளிமையான மற்றும் நம்பகமான வழி என்றே சொல்லலாம்.. இது தேர்தல் முறைகேடுகளைத் தடுத்து, "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற ஜனநாயக விதியை உறுதி செய்கிறது...
இந்த சாதாரணமாக தோன்றும் ஊதா நிற மை, ஜனநாயகத்தின் நேர்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய அறிவியல் கருவியாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது..
அந்தவகையில், வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வரும்போது நம்முடைய விரலில் மின்னும் அந்த நீல நிறக் கறை, நாம் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்பதற்கான சான்று மட்டுமே கிடையாது, அது இந்திய அறிவியலின் ஒரு மகத்தான வெற்றியும் கூட...!!!
மிக அருமை அய்யா வெ. சாமி அவர்களே..!
ReplyDeleteWed. 6, May 2026 at 9.44 am.
ReplyDelete*சோதிடம் :*
*போராட்டம் (S T R U G G L E ) :*
சந்திரன்களை கிரகங்களும், கிரகங்களை சூரியன் என்னும் நட்சத்திரங்களும், நட்சத்திரங்களை பால்வெளி கேலச்சிகளும், கேலச்சிகளை பிரபஞ்சமும்... மின்காந்த சக்திகளால் கவர்ந்திழுத்துக் கொண்டு, தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டும் பிரபஞ்சத்தில் உள்ளன.
பூமியானது... 23.5 டிகிரி சாய்ந்து 5 - செயல்களைச் செய்கிறது. அந்த 5 செயல்களானது... *Tilting, Rotating, Spinning, Jumping, Inner Spinning.
இவ்வாறு உலகிலும் ஒருவரை ஒருவர் கவர்ந்து, ஆக்கிரமித்து, வசியம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
உதாரணமாக...
சனநாயக உலகில் அரசியல் தலைவர்களின் கருத்தும், வசியமான குரலும், தோற்றமும், பார்வையும்... பெரும் தொண்டர் கூட்டத்தையும், பெரும்பாலான மக்களின் வாக்குகளையும், பெரும் அதிகார பதவியையும், சுகபோக செல்வத்தையும் தந்துவிடுகிறது. தலைவர்களைச் சுற்றி மக்கள் கூட்டமும் சுழல்கிறது.
பின்னும்.... கவர்ச்சியான டி. வி பத்திரிக்கை, ரேடியோ விளம்பரங்கள் வியாபாரத்தை பெருக்கி, வாடிக்கையாளர்களை *வசியமாக்குகிறது.*
இதைத்தான் அன்று இயேசு சொன்னார்...
கலிலியோ கடற்கரையில் வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுரு மற்றும் அந்திரேயா இருவரிடமும் அங்கு மீன்களைப் பிடிக்காதீர்கள் என்னிடம் வாருங்கள் நான் மனித மீன்களை பிடிப்பவர்களாக உங்களை ஆக்குகிறேன் *(Come with me. I will make you Fisher of men.)* என்றார்.
அதன்படி... இன்றும் உலகின் சகல மூலை முடுக்குகளில் உள்ள 250 கோடிபேர் இயேசுவை வணங்குகின்றனர்.
இவ்வாறு 2000-ஆண்டுகளுக்கு முன்பே புத்தரும், இயேசுவும், நபிகளும்.. மக்களைத் தங்கள் வசியக் கருத்துகளினாலும், தோற்றத்தினாலும், செயல்களாலும், சொல்லாலும், பார்வையாலும், குரலாலும் கவர்ந்தனர.
*மனிதனால் எதையும் சாதிக்க முடியும்* என்ற மனோபலம் வேண்டும். இந்த மனோபலத்தை வளர்க்கவே, சகல மதப்பழக்க வழக்கங்களும் முயலுகின்றன. சில தவறான பழக்கங்களும் தீமைகளும் இருக்கலாம். அதை ஆய்ந்து தடுக்கலாம்.
மதங்கள், விஞ்ஞானங்கள், கம்யூனிசம் போன்ற எல்லாம் விற்கப்பட்டு விட்டன.. என ரஷ்ய பல்ககலைக்கழக கம்யூனிச மாணவர் *ரிக்கோவ்* கூறுகிறார்.
பாருங்க....!
உலகெங்கும் 250 கோடி மனங்கள், ஞாயிறு அன்று கூடி, மனப்பூர்வமாக 1-மணி நேரம், மனித மனோபலத்தை ஒன்றாகக் கூட்டும் பிராத்தனைப் பழக்கமே, *தீய கிரக சக்திகளால் ஏற்படும் தோல்விகளை மறந்து, மன ஊக்கமுடன் தொடர்ந்து முயற்சி செய்ய தூண்டும்.
வள்ளுவர் *நீத்தார் பெருமை* என கூறுவார். அதாவது மறைந்தவர்களின் சாதனைகளை நினைக்க ஒரே நாள் கல்லறைத் திருநாளான நவம்பர் 2-ஆம் நாள். இந்து மதத்தில் திதி என்று மறைந்த மாத திதியில் தனியே வணங்கி வந்தாலும்... ஐப்பசி மாத அமாவாசையே (அக்டோபர், நவம்பரின் தீபாவளி மொத்தக் கல்லறைத் திருநாளாகும்.) இது நீத்தவர்களின் சாதனைகளை மதிக்கச் செய்யும் பழக்கமே.
40- நாள் உபவாசமும், மௌன விரதமும், மனக்கட்டுப் பயிற்சியே தேவ ஊழியம் கட்டாயம் செய் என்பதெல்லாம் மன நிறைவுக்கே. அதாவது *மொத்த சர்வ கிரக பரிகாரம்* இது.
கிரக சக்திகளை தெரிந்த மகான்கள் அன்று போலி தீர்க்கதரிசிகளையும், போலி சோதிடர்களையும், போலி குறி சொல்பவர்களையும், அவர்களின் ஏமாற்று வித்தைகளையும் கண்டு.. மக்கள் மனங்ளை மட்டும் ஒரே தெய்வத்தின் பெயரால், ஒரே நாளில், ஒரே நேரத்தில் சேர்த்து கூட்டுப் பிரார்த்தனை செய்ய வைத்தனர். அன்று வேறு வழியில்லை.
இன்று அவ்வாறில்லை. சோதிடம், மூடப்பழக்கம், மதவியல் முதலியனபற்றி மக்களிடையே *விஞ்ஞான பகுத்தறிவு சிந்தனைகள்* இன்று எழுந்துவிட்டன. (இனி *பல்கலைக்கழக விஞ்ஞான சோதிட ஆய்வுகள்,* உலகில் ஏற்படும்.). பெண்களை காத்து, குடும்பம், சமூகம், நாடு, உலகம் என மாற்றினர்.
2000 வருடங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் ஆக்கிரமித்து சுரண்டி வாழும் யனித இயற்கை பழக்கத்தை அதாவது.. *நட்சத்திர சூரிய கிரக ஈர்ப்பு* போல மாற்றி அன்பு நெறியில் மனித மனங்களை மாற்ற மகான்கள் கண்ட வழியே மத நெறிகள். அதாவது யானையின் மதத்தை அடக்குவதுபோல.
Sivajansikannan40@gmail.com