Sunday, 25 December 2022
சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்
Wednesday, 21 December 2022
மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன்மன அழுத்தம் குறைந்துவிடும்குளிர்ந்த நீரில் குளிப்பதால்
Monday, 12 December 2022
கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!
மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது.
உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர்
சுயநலத்துடன் வாழும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவ முடியாது. இவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அப்படி இருக்கும்போது கடவுளை நினைக்க இவர்களுக்கு நேரம் இருக்காது. தான் மட்டும்தான் வாழ வேண்டும் என்று மற்றவர்களின் உடைமைகளை அபகரித்துக்கொள்ளத் தயங்கமாட்டார்கள், அல்லது அடுத்தவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று காரியங்களில் இறங்கிவிடுவாரக்ள். இதுவும் கடவுளுக்கு ஆகாத தீட்டாகும்.
ஆணவம், கர்வம் இருக்கும் மனம் மற்றவர்களை மதிக்காது. உடலால், மனதால் மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கும். அதே போல் மற்றவர்கள் வாழ்வதை, மற்றவர்களுக்கு நல்லது நடந்ததை ஏற்க முடியாது, மற்றவர்களுக்கு கெடுதல் நடக்கவே விரும்புவார்கள் பொறாமை கொண்டவர்கள். இத்தகைய எண்ணம் கடவுளுக்கு பிடிக்காத, தீட்டாக மாறிவிடுகிறது!
விருத்தித் தீட்டு
தீட்டில் நியமங்கள் விருத்தி தீட்டு வரும்போது என்ன என்ன செய்யல்லாம் என்ன என்ன செய்யக்கூடாது
தீட்டில் நியமங்கள்- தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
- தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
- பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
- ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
- ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
- 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
- ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
- நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
- ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
- அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.
- ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
- வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
- விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
- ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.
மற்ற சில கவனிக்கத் தக்கவை- ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
- துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
- தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
- தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
- கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
- கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
- பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
- ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
- தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
- பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
- மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
- சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
- சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
- சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
- தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
- ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
- தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
- தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
- ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
- சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
- சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு
Sunday, 11 December 2022
ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?
ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு? ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?
ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன?
வட மொழி சொல்லான ஷஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும்.
ஷஷ்டாஷ்க தோஷம் என்றால், ஆண் பெண் இராசிக்களின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் உள்ளன என்பதாகும்.
இராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.
ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?
பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்
பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.
இது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.
ஷஷ்டாஷ்டக தோஷம் விதிவிலக்கு
பெண் ராசி பிள்ளை ராசி
மேஷம் கன்னி
தனுசு ரிஷபம்
துலாம் மீனம்
கும்பம் கடகம்
சிம்மம் மகரம்
மிதுனம் விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.
அதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.
ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?
இத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.
மேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.
இந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்
Saturday, 10 December 2022
திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம்
Friday, 11 November 2022
கோதுமை புல் சாறு
கோதுமை புல்- ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கோதுமை புல் தூள் ஒரு ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துணைப் பொருளாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் குளோரோபில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அவற்றின் இயற்கையான வடிவங்களில் கிடைக்கின்றன மற்றும் இயற்கையாகவே உடலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உலகின் முதல் மல்டிவைட்டமின் மற்றும் சூப்பர் உணவு. கோதுமை புல் தூள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, பல நோய்களைத் தடுக்கிறது மற்றும் குணப்படுத்துகிறது. இது கோதுமையின் மிகவும் மென்மையான தளிர்களை பாதுகாப்பாக நீரிழப்பு செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. செயற்கையான மல்டி வைட்டமின்கள், மல்டி மினரல்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான துணைப் பொருளின் வரம்புகளுக்கு விடைக்காக உலகம் கோதுமை புல் தூளை எதிர்நோக்குகிறது.
நன்மைகள்: பாதுகாப்பானது மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. வயதான எதிர்ப்பு உங்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. நச்சுத்தன்மை குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. புற்றுநோய் சிகிச்சையை ஆதரிக்கிறது. இரத்த அணுக்களின் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் மற்றும் ஈறுகளில் இருந்து பாதுகாக்கிறது. உடலின் துர்நாற்றத்தை நீக்கி சுவாசிக்கவும். ஆரோக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
எப்படி எடுத்துக்கொள்வது: 1 டீஸ்பூன் (2 கிராம்.) பால், பழச்சாறு, மோர் அல்லது தண்ணீரில் கலந்து சுவையான கோதுமைப் புல் சாறு, வெறும் வயிற்றில். நீண்ட கால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறதுமேம்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் மற்றும் ஈறுகளில் இருந்து பாதுகாக்கிறது. உடலின் துர்நாற்றத்தை நீக்கி சுவாசிக்கவும். ஆரோக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
Tuesday, 1 November 2022
மணி பிளாண்ட் !!
Wednesday, 19 October 2022
தாய் மொழி vs மாநிலங்கள்
Tuesday, 18 October 2022
காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் ஏப்படி வந்தது
லக்னம் vs தரிசனம்
Saturday, 15 October 2022
உங்க ராசிப்படி நீங்க எப்படி ..
நாம் பிறந்த நட்சத்திரம்தெய்வத்தை வழிபட சிறப்பான நாள்..
அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் மின்னூட்டங்கள்
சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம்
பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!
லக்னம் vs வழிபாடு
Wednesday, 5 October 2022
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் மற்றும் பெயர் கராரணகள்.
Friday, 30 September 2022
பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்...
பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்...
பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது தவறான கூற்றாகும். அப்படி பார்த்தால் நிறைய பேர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.
எப்போதோ, என்றோ, முன்னோர்களோ அல்லது நீங்களோ செய்த பாவம் உங்களையும், உங்களுடைய வம்சத்தையும் பின் தொடர்வதாக கூறப்படுகிறது.
இதில் சில விஷயங்களை செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் உண்டாகிறது அவை என்னென்ன? சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? மேலும் தீயை அணைத்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்மையா? அது என்ன தோஷம்? என்பது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பூமாதேவியின் சாபம்
பத்தில் ஒருவருக்கு கட்டாயம் ஜாதகத்தில் சர்ப்பம் சம்பந்தப்பட்ட சர்ப்ப தோஷங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. இவை ஏன் ஏற்படுகிறது? பொறாமையால் அடுத்தவர்களின் குடியை கெடுப்பது, தம்பதிகளை பிரிப்பது, கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்களை ஏமாற்றுவது, திருடுவது, வைத்தியம் தெரியாமல் பொய் வைத்தியம் செய்வது, வதந்தி பரப்புவது, கலப்படம் செய்வது, சொத்தை அபகரிப்பது, பசு வதை செய்வது, இயற்கையை சீரழிப்பது, நோயை தேவையில்லாமல் பரப்புவது, கோவில் சொத்தின் மீது ஆசைபடுவது, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற விஷயங்கள் செய்பவர்களுக்கு அவர்களுடைய சந்ததியினருக்கும் கூட பாவத்தில் பங்கு கிடைக்கும். அந்த வகையில் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் பின் தொடர்கிறது.
ராகு, கேது ஆகிய இரண்டு பாவ கிரகங்களும் உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இவர்களை வணங்கும் பொழுது செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்கிறது. தீயை அல்லது தீப்பிடித்துள்ள பொருட்களை கீழே தரையில் போட்டு மிதிக்க கூடாது. இவ்வாறு போட்டு மிதிப்பதால் பூமி தோஷம் ஏற்படுகிறது.பூமாதேவியை அவமதிக்கும் செயலாக இவை பார்க்கப்படுவதால் பூமாதேவியின் சாபத்தை பெற்று, அவர்களுக்கு மனை தோஷம் உண்டாகிறது. இதனால் அவர்களுக்கும், அவர்களுடைய வம்சத்திற்கும் பூமி, மனை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு அந்த பாக்கியமே கிடைக்காமல் கூட போகும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது ஜோதிடம்ராகு, கேது தோஷம் ஏற்படுபவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக செய்த பாவங்களும் பின்தொடர்வதாக நம்பப்படுகிறது. இதற்கு காரணம் ராகு, கேது இரண்டும் மனிதனுடைய குரோமோசோம்களின் கலவையாக கருதப்படுகிறது.
23 குரோமோசோம்கள் தாயிடம் இருந்தும், 23 குரோமோசோம் தந்தையிடம் இருந்தும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இந்த 46 குரோமோசோம்களும் உயரம், தோல், தலைமுடி, கண் விழிகள், பேச்சாற்றல், தோற்றம், உடல் எடை, பரம்பரை வியாதி, திறமை ஆகியவற்றை நிர்ணயிக்கிறதுஇவை ராகு, கேது ஆகிய ரெண்டு நிழல் கிரகங்களிடம் சிக்கி 33 ஆண்டுகள் தோஷத்தின் பலன்களை அனுபவித்து பின்னர் நிவர்த்தியாகும் என்கிறது ஜோதிடம், எனவே கூடுமானவரை எவருக்கும் பாவம் செய்யாமல், யாரையும் ஏமாற்றாமல், நல்லவையை மட்டும் செய்து நன்மைகளை அனுபவிப்போம்