jaga flash news

Wednesday, 14 April 2021

நடைமுறை ஆன்மீகம்

*🔵🔵🔵🔵🟢🟢🟢🔴🔴🔴🔴நடைமுறை ஆன்மீகம்*🌷🥀🌷🥀🌷🥀🌷🥀🌻🥀🌷🥀
====================

1. காலையில் எவரையும் எழுப்பும்போது வாழ்த்தி எழுப்புங்கள்! மற்ற தவிர்க்க இயலாத கோபதாப சுடுசொற்கள் ஒரு பத்துநிமிடம் கழித்து வைத்துக் கொள்ளுங்கள்!

2. உணவு தயாரிக்கும் போதும் உணவை கட்டிக் கொடுக்கும் போதும் கோபப்படுதல் அபசகுனமாக பேசுதல் தவிர்க்கவும். முடிந்தால் இறைவனின் பேரைச் சொல்லிக் கொண்டே உணவைத் தயாரித்து கட்டிக் கொடுங்கள்! 
கோபதாப எண்ணம் உணவை விஷமாக்கும்! மனதை பாதிக்கும்.

3. குழந்தைகளைத் தூங்கச் சொல்லும்போதும் தீய சொற்களைத் தவிருங்கள். அன்பாக வாழ்த்தி உறங்கச் செய்யுங்கள். எவ்வளவு கோபம் வந்தாலும்!

4. இறைவனின் நாமங்களைச் சொல்லி உறங்கும் பழக்கத்தை நீங்களும் குழந்தைகளும் கடைப்பிடியுங்கள்.

5. பிறர் தூங்கும்போது உரக்க ஒலி எழுப்பாதீர்கள். உறக்கம் ஆன்மா இறையுணர்வில் ஒடுங்கி அமைதிகாணும் நேரம். 

6. எழுப்பும் போது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் நற்சொற்களைச் சொல்லி எழுப்புங்கள். உங்கள் அர்ச்சனைகளை பிறகு வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் தீய அருவருக்கத்தக்க சொற்களை எந்த நேரத்திலும் தவிருங்கள்.
தீய சொற்கள் வீட்டில் அதிர்வலைகளாக சேமிக்கப்பட்டு வீடு களை இழக்கும். ஏதோ ஒரு மன சோர்வு இறுக்கத்தைக் காலப்போக்கில் ஏற்படுத்தும்.

7. காலை அந்திப் பொழுதில் விளக்கேற்றி ஓரிரு துதிகளை உரக்கச் சொல்லுங்கள். எந்த மொழி எந்த கடவுள் என்பது முக்கியமல்ல. கீதை திருவாசகம் சஷ்டி கவசம் குர்ரான் பைபிள் ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

8. பாத்திரங்களைக் கழுவும்போது கோபம் எரிச்சலால் அபரிமிதமான ஓசையுடன் கழுவாதீர்கள். கதவுகளை ஓசையோடு திறக்கவோ மூடவோ செய்யாதீர்கள்.  அந்த தேவையற்ற ஒலி குடும்ப அமைதியை பாதிக்கும்!

9. வாகனங்களை ஓட்டும்போது இன்டிக்கேட்டர் போடாமல் லேன் சேஞ்ச் செய்யாதீர்கள். பல மனங்களின் தேவையற்ற சாபங்களைத் தவிர்க்கலாம்.

10. சட்டென்று தோன்றும் பிறரைப்பற்றிய அபிப்ராயத்தின் பேரில் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். உங்கள் புரிதல் மாறிய பிறகு குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்!🙏🙏

No comments:

Post a Comment