jaga flash news

Saturday, 10 April 2021

உடலில் தேங்கும் கழிவுகள் நீக்குதல்

உடலில் தேங்கும் கழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் கழிவுகளை வெளியேற்றும் நீக்குதல் பணியைப் பற்றி புரிந்துகொள்ள இயலாது.

எனவே நம்மையும் அறியாமல் நமது உடலில் தேங்கும் கழிவுகள் என்பது மிகவும் கொடியது.

அவைகள் பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 

* உடலில் தேங்கும் கழிவுகள் *

1. உப்பு

2. புளி

3. வெள்ளை சர்க்கரை

4. வெங்காயம், பூண்டு

5. ஆங்கில மருந்து

6. கெமிக்கல் உணவு

7. உருளைக்கிழங்கு

8. அசைவ கொழுப்பு

9. பால் பதார்த்தங்கள்

10. பச்சை, வர மிளகாய்

11. ரீபைண்டு ஆயில்

12. மைதா, முட்டை

மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால்தான் "நோய்" என்று பெயரிடப்பட்டுள்ள உடல் உபாதைகள் மனிதனுக்கு ஆரம்பமாகிறது.

சரி, இந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா? என்றால் நிச்சயம் முடியும். 

இயற்கையான முறையில் விளைவிக்கபட்டு நாம் அன்றாடம்  பயன்படுத்தும் நாட்டு காய்கறிகளுக்கு அந்த மகத்துவம் உண்டு. 

*எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *

உப்பை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.

புளி அதிகம் எடுப்பதால் "உடல் தளர்ச்சி" வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு.... ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு... தினமும் காலை 200 கிராம் வெண்பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.

வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நச்சுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.

கடைகளிலும், இதர இடங்களிலும் விற்கும் பாக்கெட்டுகளில் உள்ள செயற்கை வேதிக்கலவைகள் கொண்ட உணவுப்பொருட்கள் மற்றும் முக்கியமாக அரிசி உட்பட உணவுகளில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு.... இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதை மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் (தோலுடன்) ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், கல்உப்பு சேர்த்து பருகவும்.

உருளைக்கிழங்கு உட்பட்ட கிழங்கு வகைகள் மற்றும் இதர உணவு வகைகளால், குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய்(பரங்கிகாய் எனப்படும் மஞ்சள் பூசனிக்காய்) மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் "விதைகள்" ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.

நார்சத்தே இல்லாத அசைவ உணவானது, குடலில் ஒட்டிக்கொண்டு வராமல் இறுகி கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.

அதிகமாக பால், தயிர், மோர், பால் மற்றும் இதர பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை உணவுக்கு பின் முற்றிய முருங்கை விதை இரண்டை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பினை  15 நிமிடம் சப்பி விட்டு, இறுதியில் மென்று முழுங்கவும்.

பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டையும் உபயோகித்ததால் ஏற்பட்ட இழப்பை மாற்றி, மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி

ஒரு வாரத்திற்கு... தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் அளவு கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து சாப்பிடவும்.

மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொறுமையாக, நிறுத்தி நிதானமாக சப்பி, சப்பி குடிக்கவும

No comments:

Post a Comment