jaga flash news

Monday, 28 September 2020

வைணவ சோதிடம்...

வைணவ சோதிடம்...

தலைப்பு ஒரு சாரரை குறிப்பது போல் இருந்தாலும், அவரவர் நம்பிக்கை பழக்கவழக்கங்கள் என்று உண்டு தானே அதனை மூலாதாரமாக வைத்தே இந்த பதிவு, சோதிடத்தில் சைவம், வைணவம், ஹிந்து, முஸ்லீம், கிருஸ்துவன் என்கிற ஜாதி, மதம் பாகுபாடு கிடையாது இதை நினைவில் கொள்க, ஆனாலும் வைணவர்கள் எனும் ஹரி பக்தர்கள் சோதிடத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை என் பார்வையில்...

வைணவர்கள் எனும் ஹரி பக்தர்களுக்கு ஆபத்பாந்தவன், அனாதை ரக்க்ஷகன், காப்பது, அழிப்பது, வழிநடத்துவது அனைத்தும் பெருமாளே, இதை ஹரி பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள், இவர்கள் சோதிடம் பார்த்தாலும் அதில் பெருமாளே முன்னிலை பெறுவார், சோதிடம் என்பது நவகிரகம் என்றும் அந்த நவகிரத்தை ஆளுவது ஈசன் என்பதும் நாம் அறிந்ததே, ஆனாலும் ஹரி பக்தர்கள் அனைத்திலும் ஸ்ரீமன் நாராயணனை காண்கிறார்கள் என்றால் மிகையாகாது, இது அவர்களின் பக்தி நெறி, ஏன் ஒருவித ஈடுபாடு என்றாலும் மிகையாகாது, இவர்களின் இந்த பக்திக்கு செவி சாய்த்தே பெருமாள் இதுவரை 9 அவதாரங்கள் எடுத்துளார் என்றாலும் பொருத்தமாகும், ஹரி பக்தர்கள் இவ்வாறு கண்மூடித்தனமாக பக்தியின் வழியே பெருமாளை நம்புவது ஒருவிதத்தில் பார்த்தால் சரியானதே ஏனெனில் காக்கும் தெய்வம் நாராயணன் தானே, ஹரி பக்தர்கள் நவகிரகங்களை ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களாக பார்க்கிறார்கள் அல்லவா அவை யாது என்பதை காண்போம் வாருங்கள்...

ஸ்ரீ ராமாவதாரம்: சூரிய குலத்தில் பிறந்த ரகு குல திலகம் ஸ்ரீ ராமன் கிரகங்களில் சூரியனை பிரதிபலிக்கிறார், ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் தாக்கம் இவரை வழிபடுவதால் எதிர்கொள்ளும் ஆற்றல் கிட்டும்...

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: சந்திர குலத்தில் தோன்றி கோப்பிகை நந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் கிரகங்களில் சந்திரனை குறிக்கிறார், சந்திரனால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை தருகிறார் இவர்...

ஸ்ரீ நரசிம்மாவதாரம்: பக்தனின் துயர் நீக்க ஷனம் நேரத்தில் தன் உக்கிர ரூபத்தில் வெளிப்பட்டார் ஸ்ரீ நரசிம்மர் கிரகங்களில் இந்த அவதாரம் செவ்வாயை குறிக்கிறது, செவ்வாய் தாக்கம் அதிகம் உள்ளவர் வழிபட வேண்டிய கருணாமூர்த்தி, கோபத்திலும் கருணை கொண்ட அவதாரம், ஒன்பது அவதாரங்களில் பக்தனுக்காக அந்த ஹரியே விரும்பி ஏற்ற அவதாரம் ஸ்ரீ நரசிம்மாவதாரம் என்றால் மிகையாகாது, காக்கும் கடவுள் என்பதை மிக வலுவாக உணர்த்திய அவதாரம்...

வாமனாவதாரம்: குரு என்பவர் எவ்வாறு மமதை கொண்ட தன் மாணவனை சோதிப்பார், தண்டிப்பார் என்பதை உலகுக்கு உணர்த்திய அவதாரம் வாமனாவதாரம் கிரகங்களில் குருவை குறிக்கும், இதன் வழியே கருணாமூர்த்தி என்றாலும் தன் சிஷ்யன் தவறு செய்தால் அவனின் மமதையை அடக்க, தண்டிக்க தான் எப்போதும் தவறியதில்லை என்பதை உணர்த்துகிற அவதாரம் வாமனாவதாரம் என்றால் மிகையாகாது...

பரசுராமாவதாரம்: இளமையான வயதில் ஈசனின் பால் பக்தி கொண்டு, தந்தை சொல் தட்டாத பிள்ளை என்பதை நிரூபிக்க பெற்ற தாயை எதிர்த்து, இளமையில் பக்தியே சிறந்தது என்பதை நிரூபித்த அவதாரம் பரசுராமாவதாரம் கிரகங்களில் சுக்கிரனை குறிக்கிறது, எவ்வாறு சுக்கிரன் போககாரகர் ஆயிற்றே என்றால், ஆம் அந்த போகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் பக்தியில் சிந்தனையை செலுத்தி வாழ்ந்துகாட்டினார் நாராயணன் என்றால் மிகையாகாது...

கூர்மாவதாரம்: காக்கும் கடவுளான விஷ்ணு தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காக செய்யும் காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் வழியே ராகு/கேது தோன்ற காரணமான அவதாரம் கூர்மாவதாரம் கிரகங்களில் சனியை குறிக்கும், வராகர் வடிவில் இருக்கும் நாராயணனை வேண்டினால் தன்னை சார்ந்தவர்களை காத்தது போல் தங்களையும் சனியிடம் இருந்து காத்து அமுதம் தந்து ரட்சிப்பார் என்பது ஹரி பக்தர்களின் நம்பிக்கை...

வராக அவதாரம்: பூமாதேவி எனும் பூமி தாய் அரக்கனிடம் சிக்குண்டபோது இந்த அவதாரம் தரித்து 1000 ஆண்டுகள் சண்டையிட்டு பூமியை காத்தார் ஸ்ரீமன் நாராயணன் கிரகங்களில் ராகுவை குறிக்கும் அவதாரம், எவ்வாறு அசுரனை வென்று பூமியை காத்தாரோ அவ்வாறே ராகு எனும் லௌகிக அசுரனை வெல்ல இவரை வழிபடுகிறார்கள் ஹரி பக்தர்கள்...

மச்ச அவதாரம்: உலகமே அழியும் போது வேதங்களையும், ரிஷிகளையும் காக்க பெருமாள் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம், தசாவதாரத்தில் முதல் அவதாரமாகும் கிரகங்களில் கேதுவை குறிக்கும், கேதுவால் ஏற்படும் மன சஞ்சலத்தை களைய இவரை வேண்டினால் தெளியலாம்...

பலராம அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ணரின் அண்ணனாக ஆதிஷேஷனின் அவதாரம் பலராம அவதாரம், இவரை வேண்டினால் குளிகனால் ஏற்படும் தாக்கம் விலகும்...

கல்கி அவதாரம்: தசாவதாரத்தில் நிகழவேண்டிய அவதாரம், தற்போது மாய எனும் ராகுவால் ஆட்கொள்ளப்பட்ட உயிரினத்தை புத்தி எனும் புதனால் தெளியவைக்க விஷ்ணு எடுக்கவிருக்கும் கடைசி அவதாரம் கல்கி அவதாரம் கிரகங்களில் புதனை குறிக்கும், இந்த அவதாரம் நிகழாததால் ஸ்ரீனிவாச பெருமாளை செவித்தால் புதனின் தாக்கத்தை எதிர்கொள்ளலாம்...

குறிப்பு: இங்கே குறிப்பிட்டுள்ள அவதாரங்கள் மற்றும் கிரகங்கள் ஒப்பீடு வரலாற்று நூல்களில் காணப்படும் கதைகளை மையமாக கொண்டதே, அதன் குணாதிசயங்கள் ஒற்றுபோவதால் கிரகங்களாக உருவகப்படுத்தி ஸ்ரீமன் நாராயணன் அவதரித்ததாக ஹரி பக்தர்களின் திடமான நம்பிக்கையே இந்த பதிவின் ஆணிவேர்.

ஓம் நமோ நாராயணாய..!

No comments:

Post a Comment