jaga flash news

Thursday, 3 September 2020

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் ஐந்து வகைகள்

 தமிழகத்தில்  ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் . இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் ஐந்து வகை இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா..? பழைய ரேஷன் கார்டுகளில் முன் பக்கத்தில் எந்த வைகையைச் சேர்ந்த கார்டு இது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் பச்சை நிற ரேஷன் கார்டு வைத்திருந்தால் அதில் முன் பக்கம் அரிசி என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படி என்றால் அது அரிசி பெறுவதற்கு ஏற்ற ரேஷன் கார்டு ஆகும். அதே போன்று இப்போது புதிதாக நாம் பெற்று வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.


TNPDS இணையதளத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை எப்படி வகையைக் கண்டறிவது www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பயனர் நுழைவு என்ற தெரிவு இருக்கும். அதனைத் தேர்வு செய்த பிறகு நீங்கள் செல்லும் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளர் என்ற இடத்தில் உங்களது ரேஷன் கார்டுக்கு நீங்கள் அளித்த மொபைல் எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை அனுப்பு என்ற தெரிவை தேர்வு செய்யவும்.

கடவுச் சொல் பெறுவது எப்படி உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு 7 இலக்க எண் குறுந்தகவலாக வரும் அதனைக் கீழ் இருக்கும் அங்கிகாரம் என்ற இடத்தில் உள்ளிட்டுப் பதிவு செய் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அதிகபட்ச நேரம் 300 வினாடிகள் வரை எடுக்கும். ஒரு வேலை உங்களுக்குக் கடவுச் சொல் வரவில்லை என்றால் 1967/18004255901 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்

எங்குச் சென்று இணையதளத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை எப்படி வகையைக் கண்டறிவது கடவுச்சொல் உள்ளிட்டு உள் சென்ற பிறகு ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்பதைத் தேர்வு செய்த பிறகு உங்களது ஸ்மார்ட் காரின் விவரங்கள் அனைத்தையும் காண முடியும். அதில் வலது பக்கத்தில் என்எப்எஸ்எ அட்டை வகை என்று குறியிடப்பட்டு இருக்கும். அங்கு உங்களது அட்டை வகை என்ன என்பதை நீங்கள் கண்டறிய முடியும். அங்குக் காண்பிக்கப்படும் அட்டை வகைகளின் விளக்கம் என்னவென்று நாம் அடுத்துப் பார்ப்போம்

PHHRICE குறியீடு PHHRICE என்ற குறியீடு உங்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டைக்கு இருந்தால் அரசி, பருப்பு , எண்ணை உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும்.

PHAA குறியீடு PHAA என்ற குறியீடு உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இருந்தால் 35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

NPHH குறியீடு உங்களது ஸ்மார் ரேஷன் கார்டுகளில் NPHH அல்லது NPHH-L என்று குறிப்பிடபப்ட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்

NPHHS குறியீடு NPHHS என்ற குறியீடு உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இருந்தால் சர்க்கரை மட்டும் கிடைக்கும்.

NPHHNC குறியீடு NPHHNC என்ற குறியீடு இருந்தால் உங்களுக்கு எந்தப் பொருட்களும் கிடைக்கப்படாது. இதனை ஒரு அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை எப்படிப் பிரிக்கப்படுகின்றது ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை அனைத்தும் டிஎன்பிடிஎஸ்(TNPDS) அதிகாரிகள் மூலமாக நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து முடிவு செய்யப்படுகின்றது.


No comments:

Post a Comment