jaga flash news

Saturday, 19 September 2020

ஜோதிடப்படி, தன்னம்பிக்கை யாருக்கு தழைத்திருக்கும்?



ஜோதிடப்படி, தன்னம்பிக்கை யாருக்கு தழைத்திருக்கும்?

 தன்னம்பிக்கை என்பது அடுத்தவரிடம் தானமாகப் பெறுவது அல்ல.பெறவும் முடியாது.

 அது  நம்மை நாமே தயார்படுத்தி கொள்ளும் ஒரு அமைப்பாகும்.

 எல்லா செல்வச்செழிப்புகளை பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தினால் ,வாழ்க்கையில் ஒரு நேரம் தடுமாறும் போது ,தன்னம்பிக்கை இல்லையென்றால் ,தலை குப்புற கவிழ்த்து ,தவிடு பொடி ஆக்கிவிடும்.

சரி

 ஒரு ஜாதகத்தில் தன்னம்பிக்கையை எதை வைத்து அறிவது?

 ஒரு ஜாதகத்தில் லக்னமே பிரதானம். லக்னம் ,லக்னாதிபதி ஒரு ஜாதகத்தின் ஆணிவேர்.

 எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னம், லக்னாதிபதி, எந்த நிலையிலும் கெடவே கூடாது.

 ஆத்ம பலத்தையும், மனோபலத்தையும் கொடுக்கக் கூடிய தந்தை,தாயாகிய  சூரியன், சந்திரன் ஒரு ஜாதகத்தில் முற்றிலும் கெடக்கூடாது.

 இதை இங்கே இன்னொரு விஷயமாக கூட எடுத்துக் கொள்ளலாம்.

 வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி.

 தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படிக்கும் பொழுது, படிப்பு ஏறவே இல்லை.

பள்ளி நிர்வாகம் சீட்டை கிழித்து, வீட்டுக்கு அனுப்பியது.

 பாலகனான தாமஸ் ஆல்வா எடிசனின்  பாதையை மாற்றினாள் அவன் தாய்.

 மனித குலம் இருக்கும் வரை ,தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மகத்தான இடமுண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 மந்தமான  தாமஸ் ஆல்வா எடிசன், மாபெரும் விஞ்ஞானி ஆக தாயே காரணம்.

 இது வரலாறு.

தளர்வுறும் போதெல்லாம்,தாய்,தந்தை  தன்னம்பிக்கை கொடுத்து தாங்கிப் பிடிக்க வேண்டும்.

இதற்கு ஜாதகத்தில் சூரியனும் ,சந்திரனும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

 எந்த சூழ்நிலையிலும், நெகட்டிவான,தன்னம்பிக்கையற்ற வார்த்தையை பேசக்கூடாது .

அதற்கு முன் ,ஒவ்வொரு குழந்தையும், ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்கவே இறைவன் தோற்றுவித்து இருக்கிறான் .

அவர்களின் தனித்திறமையை முதலில் ஆராய்ந்து, அதன் வழியிலேயே கொண்டு  செல்ல வேண்டும்.

 மெக்ரத்கிட்ட இருந்து  300 ரண்ணை எதிர்பார்த்தால் முட்டாள் நீ தான்.

 மூணு நிமிஷத்துல முப்பது விக்கெட் எடுக்கணுமா. அதுக்கு அவர் ரெடி.

 அதுதான் அவரவர் தனித்திறமை.

 அதை ஆராய்ந்து கவனிக்கவேண்டும்.

இங்கு  ஒரே திறமையோடு எல்லோரும் பிறப்பதில்லை.

 இங்கு டாக்டருக்குப் படிச்ச தான் வாழ்க்கை ,கலெக்டர் படிச்சாதான் வாழ்க்கை. என்ன கருமம்டா இது.

சரி

 ஜோதிடப்படி ஒருவர் தன்னம்பிக்கை இழக்க காரணம் என்ன?

1. லக்னாதிபதி எனும் கிரகம்  ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மறைந்து ,நீசம் பெற்று அரவு கிரகத்துடன் நெருங்கினால், தன்னம்பிக்கை தலைகீழாய் நின்றால் கூட இருக்காது.

 2.கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.

 3.லக்னாதிபதி அஸ்தமனம் பெற்று சனியுடன் இணைந்தால் சோம்பேறியாகவும் , ராகு கேதுவுடன் இணைந்தால் தன்னம்பிக்கை அற்றும் இருக்கும்.

 4.லக்னத்தில் பாவ கிரகங்கள் வலுவுடன் இருந்தாலும் ,லக்னம், பாவ கிரகங்களால் சூழப்பட்டு இருந்தாலும் தன்னம்பிக்கை தள்ளாடும்.

5. மேற்சொன்ன அமைப்பில் கோசாரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி வரும் கால கட்டங்களில், தன்னம்பிக்கை இழந்தால் ,தடுமாற வைத்துவிடும்.

6. இருள் கிரகமான சனி ,ராசியில் ஜென்ம சனியாக வரும் பொழுது எப்பேர்ப்பட்ட மனிதனையும் ,ஒரு மனிதரையும்  ஒரு ஆட்டு ஆட்டி விடும்.

 காரணம் மனோபலத்தை குறிக்கக்கூடிய சந்திரன் மீது ,இருள் கிரகமான சனி பயணம் செய்வதால் இந்த நிலை ஏற்படுகிறது.

 மேற்கண்ட இடங்கள் பலவீனமாக இருக்கும் ஜாதகர்கள்,தினசரி சூரிய நமஸ்காரத்தையும், பௌர்ணமி விரதத்தையும், உங்கள் லக்னாதிபதியின் அதிதேவதையை தினசரி வணங்கி வாருங்கள். 

மாற்றிமின்றி மாற்றமுண்டு.

 பேச்சு வழக்கில் ஒரு வார்த்தை சொல்வார்கள்.

 பெண்ணுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் .

ஆணுக்கு  நல்ல தாய் ,தந்தை அமைய வேண்டும்

 இங்கு என்ன நடக்கிறது. தனக்கு கிடைக்காத ஒன்று ,தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணி ,தன்னுடைய ஆசைகளை மறைமுகமாக அல்ல , நேரடியாகவே அதன் மீது திணிக்கின்றார்.

இது மாபெரும் தவறு.

உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள் .உற்சாகம் கொடுங்கள்.

 முயற்சி உங்களுடையது. முடிவு இறைவனுடையது.

 எந்த நிலையிலும் தளர்ந்து போக வேண்டாம். இதுவே என் ஆசை.

No comments:

Post a Comment