jaga flash news

Monday, 7 September 2020

ஒற்றைத்_தலைவலி

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
#ஒற்றைத்_தலைவலி 
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

சாதாரணமாக தலைவலி வந்தால் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது சாதாரண தலைவலி போன்று கிடையாது. அதை தாங்கிக் கொள்ளவே முடியாது. இதற்கு காரணம் அதிர்ச்சி, பதட்டம், தேவையற்ற மன உளைச்சல் ஆகியவை காரணமாக இருந்தாலும் இன்னும் சில முக்கியமான விஷயங்களும் அதன் பின்னால் இருக்கின்றன. அது என்ன என்று இங்கே பார்ப்போம்.
 
எப்போது பார்த்தாலும் தலைவலி வந்து கொண்டே இருக்கும். இந்த மாதிரி தலைவலி அடிக்கடி வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதிலும் சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 

இந்த ஒற்றைத் தலைவலி வந்தால் அவ்வளவு சீக்கிரமாக சரியாகாது. மண்டைய பிளக்கிற அளவிற்கு வலி ஏற்படும். நிறைய பேர் இதை சரி செய்ய தலைவலி மாத்திரைகள், தைலம், நீராவி பிடித்தல் என்று எல்லாம் செய்தும் பார்ப்பார்கள். ஆனால் முழுமையான பலன் கிடைக்காது. அதற்குக் காரணம் இந்த ஒற்றைத் தலைவலி எதனால் வந்தது என்று தெரியாமலேயே பொதுவாக வைத்தியம் பார்ப்பது தான் இதில் உள்ள பிரச்சினை. அதுகுறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

​ஊட்டச்சத்து குறைபாடு
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

நிறைய பேருக்கு உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது கூட ஒற்றைத் தலைவலி வரக் காரணமாக அமைகிறது. வைட்டமின் குறைபாடுகள் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமைகின்றன என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இது புரியாமல் தைலம், தலைவலி மாத்திரைகள் போடுவது என ஏதேதோ செய்து கொண்டிருப்பது. ஆனாலும் சரியாகவில்லை என்றும் மீண்டும் தலைவலியை அதிகமாக்கிக் கொள்வது இவை நடந்து கொண்டிருக்கின்றன.

​அறிகுறிகள்
🔶🔶🔶🔶🔶🔶

ஒற்றைத் தலைவலி என்பது நமக்கு ஏற்படும் சாதாரண தலைவலி போன்று கிடையாது. மிகவும் வேதனை மிகுந்தது. சில நேரங்களில் அப்படியே தலையை சம்மட்டியை வைத்து அடிப்பது போன்று இருக்கும்.அப்படியே தலையைக் கழட்டி வைத்து விடலாம் போன்று தோன்றும். அந்தளவுக்கு இதன் வலியும், குத்தலும் அதிகம். இந்த ஒற்றைத் தலைவலியால் சில பேருக்கு குமட்டல், வாந்தி, வெளிச்சம் மற்றும் அதிக சத்தத்தைக் கண்டால் எரிச்சல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

​வைட்டமின் குறைபாடு
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

ஒற்றைத் தலைவலி ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. நிறைய பேருக்கு அவர்கள் தீராத மன அழுத்தத்தில் இருந்தாலோ, பயம், அதிர்ச்சி, டென்ஷன் கூட ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது.

இரவில் அதிக போதுமான தூக்கம் இல்லாமல், அதிக நேரம் விழித்துக் கொண்டு இருந்தால் கூட இந்த ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படி அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் கண்டிப்பாக நீங்கள் அதை கவனிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம் இது உங்கள் உடம்பில் உள்ள வைட்டமின் குறைப்பாட்டின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். தொடர்ச்சியாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவருக்கு விட்டமின் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக வைட்டமின் டி பற்றாக்குறை உடலில் ஏற்படும் பொழுது, இந்த ஒற்றைத் தலைவலி பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கிறது.

​தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

சமீபத்தில் நடந்த ஆய்வின் படி விட்டமின் டி, ரிபோஃளவின் மற்றும் கோஎன்சைம் Q10 போன்ற விட்டமின்களின் குறைபாடுகள் ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணமாக அமைகின்றன. விட்டமின் டி, கோஎன்சைம் Q10 ஆகிய ஊட்டச்சத்துக்களுக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் வைட்டமின் டி, ரிபோஃளவரின் மற்றும் கோஎன்சைம் Q10 குறைவாக இருப்பவர்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்த பிரச்சினை ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

​வீட்டு வைத்தியங்கள்
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

இந்த ஒற்றைத் தலைவலிக்காக மருத்துவர்கள் சில மருந்துகளைப் பரிந்துரை செய்தாலும் இயற்கை வைத்தியங்களான உணவு மருந்து முறை இந்த ஒற்றைத் தலைவலிக்குச் சிறப்பாகக் கை கொடுக்கும் என்று மருத்துவர்களால் பரிந்துரையும் செய்யப்படுகிறது.

​இஞ்சி டீ
🔸🔸🔸🔸

இஞ்சியில் ஒற்றைத் தலைவலியைக் குறைப்பதற்கான மருத்துவ குணங்கள் நிறைய கொண்டுள்ளது. எனவே உங்களுக்கு தலைவலி ஏற்படும் சமயங்களில் ஓரிரு துண்டுகள் இஞ்சியை போட்டு டீ தயாரித்து குடிக்கலாம். குறிப்பாக பால் சேர்க்காமல் பிளாக் டீயில் இஞ்சி சேர்த்துக் குடியுங்கள். எல்லா சமயங்களிலும் இஞ்சி இல்லாவிட்டால் இஞ்சி காப்சியூல் மற்றும் பவுடர் வடிவிலும் கூட கிடைக்கிறது. அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருந்துகளை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இது பாதுகாப்பானது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

​தியானம்
🔹🔹🔹🔹

மனதை ஒருமுகப்படுத்தி சிந்திப்பது, ஓய்வெடுப்பது பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றது. மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மனதை அமைதிபடுத்தும் யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இது உங்கள் ஒற்றைத் தலைவலியை குறைக்கும். கழுத்து, நெற்றி மற்றும் தோள்பட்டை பகுதியில் மசாஜ் செய்யுங்கள். ஒற்றைத் தலைவலி ஏற்படும் சமயங்களில் மசாஜ் செய்வதும் நல்ல பலனைத் தரும். உங்கள் கழுத்து, தோள்பட்டை மற்றும் நெற்றி போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து விடுங்கள். இது உங்கள் டென்ஷனை மற்றும் பதட்டத்தைக் குறைத்து அதனால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.

No comments:

Post a Comment