jaga flash news

Saturday, 19 September 2020

ராகு/கேது நன்மை செய்யுமா

ராகு/கேது நன்மை செய்யுமா

பலர் என்னிடம் ராகு/கேது பதிவுகளில் தீமைகள் அதிகம் கூறுகிறீர்கள் ஆனால் நன்மை செய்யுமா என்பதை பற்றி கூறவே இல்லையே என்று கேட்பது உண்டு, ராகு/கேது நன்மையே செய்வதில்லையா?, இந்த கேள்வி பலருக்கு உண்டு அதனை தெளிவு படுத்தவே இந்த பதிவு மேற்கொண்டு படிக்கவும்..

ராகு/கேது இவ்விருவரும் நான் பல பதிவுகளில் கூறியபடி ஜாதகரின் கர்ம பலனை ஜாதகருக்கு வழங்கும் பொறுப்பை பெற்ற கிரகம், நல்லது செய்தால் நன்மையும், தீயவை செய்தால் தீமையும் தருவதற்க்கு கடமை பெற்ற கிரகம், இவர்கள் ஒருவரின் ஜாதகத்தில் நன்மை/தீமை செய்வது அந்த ஜாதகர் செய்த, செய்துகொண்டு இருக்கும், செய்யபோகிற நன்மை/தீமை பொருத்ததே..

ராகு/கேது இவ்விருவரும் வெவ்வேறு பணிகளை கர்மபலன் வழங்குவதில் கையாள்கின்றனர், ராகுவின் பணி சேர்த்த கர்மத்தை திருத்தவும், புதிதாக கர்மம் சேர்க்கவும் செய்வது, கேது நல்ல/தீய கர்ம பலனை ஜாதகருக்கு வழங்குவது..

ராகு/கேது எந்த நிலையில் இருந்தால் நன்மை செய்வார்கள், எவ்வாறு இருந்தால் நல்ல கர்மபலனை கேதுவும், ராகுவும் அனுபவிக்கவும்/சேர்க்கவும் செய்வார்கள் என்பதே பிரதானமாக எல்லோரிடமும் உள்ள கேள்வி, அதற்க்கு விடைகாண நான் முற்பட்டபோது எனக்கு பிரபஞ்சம் தெரியபடுத்தியை நான் உங்களிடம் பகிர்கிறேன்..

ராகு/கேது இருவரும் தரும் நல்ல பலன் என்பது 40% மட்டுமே, அந்த 40% பலனில் மனிதனுக்கு நன்மை செய்வது 20% பலன்களே இதுவே நிதர்சனம், இதனால் தான் இவ்விருவரையும் முழு இயற்க்கை பாபர் என்று கூறுவார்கள், இவர்கள் இருவரும் தரும் நன்மை கூட மனிதனுக்கு தீமை செய்ய தூண்டுவதாகவே இருக்கும், உதாரணமாக ராகுவின் காரகம் ஆசை மனிதனுக்கு உத்வேகத்தை தரும் மருப்பதற்க்கு இல்லை, ஆனால் அதே ஆசை மனிதனை அழிவிர்க்கு கொண்டுசெல்லும் என்றால் மிகையாகாது, அதே போல் கேது தரும் தோல்வி மனிதனுக்கு அதிக ஆசை படக்கூடாது என்பதை புரியவைத்தாலும், அந்த தோல்விகளே விரக்திக்கு வித்திட்டு தற்கொலை எண்ணங்களை தூண்டுகிறது என்றால் உங்களால் மறுக்க இயலுமா, அதனால் ராகு/கேது இருவரும் கர்ம கிரகங்கள் என்பதை உணர்ந்து தெளிவதே நன்மை..

ராகு/கேது இருவரும் நின்ற வீட்டை போல் செயல்படுவார்கள் என்கிற விதி நாம் அறிந்ததே, அதே நேரத்தில் இவர்களுக்கு வீடு கொடுத்தவன் லக்ன/ராசிக்கு சுபராக இருந்து வலு பெற்றால் ராகு/கேதுவால் நன்மை கிடைக்கும், இதிலும் லக்ன/ராசி அசுபர் தொடர்பு இல்லாமல் இருத்தல் வேண்டும், அதே போல் கேது நல்ல பலன்களை வழங்க பூர்வ புண்ணியாதிபதி 5 ம் வீடு, பாகியாதிபதி 9 ம் வீடு வலு பெற்று நல்ல நிலையில் இருத்தல் வேண்டும், அவ்வாறு இருந்தால் ஜாதகர் சஞ்சித கர்மத்தில் தீய பலன்களை விட நல்ல பலன்களை அதிகம் சேர்த்துள்ளார் என்று பொருள், அதே போல் 5/9 க்கு உரியவன் லக்ன/ராசிக்கு சுபராகி அசுபர் தொடர்பின்றி வலு பெற்று ராகு/கேதுவை பார்வை செய்வதும் நன்மையே,  இதே போல் ராகுவுக்கு வீடு கொடுத்தவன் லக்ன/ராசிக்கு சுபர் என்றாகி நல்ல வலுவில் நின்றால் ஜாதகர் தீய கர்மங்களை அதிகம் சேர்க்க மாட்டார் எனலாம், அதே போல் சூரியன்/குரு லக்ன/ராசிக்கு சுபர் என்றாகி வலுத்தாலும் மேலே கூறிய நல்ல நிலைகளே, ராகு/கேது இருவரும் உபஜெய ஸ்தானங்கள் எனபடும் 3,6,10,11 ம் வீடுகளில் நின்றால் நன்மை என்று கூறபடுகிறது இந்த விதி பெரும்பான்மையான ஜாதகத்துக்கு பொருந்துவாதில்லை என்பதே உண்மை, ராகு/கேது எந்த வீடுகளில் நின்றாலும் அவர்கள் நின்ற வீட்டில் சஞ்சித கர்மம்/ கர்ம சேர்க்கை உள்ளது என்றே பொருள், ராகு தனக்கு மித்திரன் சுக்கிரன்/புதன்/சனி வீடுகளில் சுதந்திரமாக செயல்படுவார், கேது தனக்கு மித்திரன் குரு, புதன், செவ்வாய் வீடுகளில் சுதந்திரமாக செயல்படுவார்கள், எவ்வாறு பார்த்தாலும் இவர்கள் இருவரும் லக்ன/ராசிக்கு மறைந்து சுபத்துவம் பெறுவதே சிறந்தது என்பது என் கருத்து..

No comments:

Post a Comment