jaga flash news

Monday, 30 November 2020

புத்துணர்ச்சி நல்கும் அசோக மரத்தின் மருத்துவ குணங்களை அறிவோம்.

புத்துணர்ச்சி நல்கும் அசோக மரத்தின் மருத்துவ குணங்களை அறிவோம்.

1. கருப்பைக் கோளாறுகள் தீர...

ஒரு பெண்ணின் முழுமை நிலை என்பது அவள் கருத்தரித்து தாய்மையடைந்த பின்னரே உண்டாகிறது. பிள்ளைப் பேறில்லாப் பெண்களை சமூகம் எள்ளி நகையாடுகிறது. தாய்மையடையாத பெண்கள் மன உளைச்சல், வேதனைக்கு உட்பட்டு, நோய்வாய்ப்பட்டு, கடைசியில் மனம் 

பேதலித்து, வாழ்க்கையை வெறுத்து, யாருடனும் ஒட்டாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பேரமுதமாய் இறைவன் அளித்த மூலிகையே அசோக மரமாகும்.

அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம்- இரண்டையும் அரைத் துத் தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். இதனை காலை- மாலை இரு வேளையும் உண்டு வர வேண்டும்.

இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையை யும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத் தையும் ஓட விரட்டி, உங்கள் வயிற்றிலும் முத்தான பிள்ளைகள் அவதரிப்பார்கள்.

நீங்கள் ஆயிரம் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோகினை வழிபட்டு வணங்குங்கள்.

2. மாதவிலக்குக் கோளாறுகள் சீராக...

ஒரு பெண் தாய்மையடைய இயற்கை சில நியதிகளை வைத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை முறையாக மாதாந் திர ருது சுழற்சியாக வந்து கொண்டிருந்தால், அதுவே அவளின் ஆரோக்கியத்தின் அறிகுறி.

பல்வேறு வகையான உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் போகலாம். அதற்கெல்லாம் கண் கண்ட மருந்து அசோகுவேயன்றி வேறில்லை.

கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங் கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை- மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

3. மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி குணமாக...

100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும். இறையாய் பவனி வரும் இயற்கை மருந்தை விட்டொழித்து, நாகரீகம் என்ற பெயரில் கண்டதற்கெல்லாம் நவீன மருந்துகளைப் பயன்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மூலிகையும் இறையம்சம் கொண்டதே. நீங்கள்தான் உங்களின் நுண்ணறிவு கொண்டு, அவற்றின் தன்மையை உணர்ந்து மருந்தாக்கிக் கொள்ள வேண்டும்.

4. மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகிறதா?

கருப்பை புண்ணாகிப்போன நிலை, கருப்பையில் உண்டாகும் சில தொற்றுகள், கருப்பை சற்று கீழே இறங்கிவிடுதல், உடம்பில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய சத்துகள் குறைந்துவிடுதல், ரத்தப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

ஒரு பெண் என்பவள் செழிப்பான பயிர் களை விளைவிக்கும் வளமையான மண்ணைப் போல் இருக்க வேண்டும். உப்புப் பூத்த நிலத்தில் ஒரு பயிரும் விளைவதில்லை. அதேபோல் இயல்பான உடலமைப்பில் இருந்து ஒரு பெண் மாறி உப்பிப் போயிருந்தால், அவளின் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைந்துவிடும்.

உடம்பு உப்புதல் என்பது, உடல் பருத்தல் என்பதாகும். உடல் பருத்தல் என்பது, உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் தன் நிலையில் இருந்து மாறுபட்ட தன்மையாகும். இத்தகைய உடல் மாறுபாடு குழந்தையின்மைக்கு மிக முக்கிய காரணம்.

அதிக ரத்தப்போக்கினை அலட்சியப்படுத் தாமல் அசோகினை சரணடையுங்கள். ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, ரத்தப்போக்கு உடனே நிற்கும்.

நீங்கள் ஒன்றை மட்டும் கவனியுங்கள். மாதவிலக்கை முறைப்படுத்துவதற்கும், மாத விலக்கில் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மருந்து அசோகப் பட்டைதான். இதேபோல் முரண்பட்ட இரு பிரச்சினைகளுக்கு ஒரே மருந்தை எந்த மருத்துவ முறையாலும் தர இயலாது.

இது தவிர, பல்வேறு நோய்களைக் குணமாக்கும் தன்மை அசோக மரத்திற்கு உண்டு.

ரத்தபேதி, சீதபேதி, வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் அதிசயமாய் குணமாக்கும்.

அசோகப் பட்டையைத் தனியாகச் சாப்பிடும்பொழுது, மலச்சிக்கல் உண்டாவதாய் நீங்கள் உணர்ந்தால், அத்துடன் சம அளவு கடுக்காய் கலந்து சாப்பிட்டு வரவும்.

No comments:

Post a Comment