jaga flash news

Sunday, 22 November 2020

பேரீட்சை தயிர் பச்சடி

பேரீட்சை தயிர் பச்சடி நம்மில் சிலருக்கு பேரீட்சையை தனியாக உண்பது பிடிக்காது. இதற்கு மாற்று வழி உண்டு. சுவையான, இனிப்பான தயிர்பச்சடி செய்து உண்ணலாம். பேரீச்சம்பழம் மற்றும் மாதுளை கலந்த தயிர் பச்சடியில் ஏராளமான புரதமும், இரும்புச்சத்தும் உள்ளடக்கியுள்ளன. தயிர் பச்சடி செய்வது எப்படி என்பது பற்றி இதில் காணலாம். தேவையான பொருட்கள் : புளிக்காத தயிர் – 2 கப், பேரீச்சம்பழம் (கொட்டை இல்லாதது) – 10, முந்திரி – 8 பருப்புகள், மாதுளை – கால் கப், மிளகுத்தூள்,உப்பு – தேவையான அளவு செய்முறை: சுத்தமான தயிரை எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் ஆடையை நீக்கிக் கொள்ளவும். முந்திரி மற்றும் பேரீச்சம்பழத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்பு இதை தயிரில் கலந்து கொள்ளலாம். நன்கு மிளகாய் பொடி மற்றும் உப்பு கரையும் வரை கலக்கிக் கொள்ளலாம். இதை உங்க குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி, ருசித்து உண்பார்கள்.

No comments:

Post a Comment