jaga flash news

Monday, 30 November 2020

வீட்டை கோயிலைப் போல் மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது, உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது, துளசி செடி வாடிப்போவது, அழுக்கு துணிகளை துவைக்காமல் இருப்பது, மாலை 5 மணிக்கு மேல் துணி துவைத்து காயப்போடுவது, வீட்டின் நுழைவாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை வைப்பது, சூரிய ஒளி உள்ளே வராதபடி ஜன்னல்களையும் கதவையும் மூடி வைத்திருப்பது, ஒட்டடை படிவது, அழுக்கு சேர்வது, கெட்ட வாடை வருவது, நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பது, கெட்ட கனவுகள் வருவது, வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்க தோன்றுவது, மிதமிஞ்சிய தூக்கம், சோம்பல், கடவுளை வணங்க தோன்றாதது, வீட்டில் விளக்கு ஏற்ற தோன்றாதது இது போன்ற விஷயங்கள் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் தெய்வசக்தி குறைந்திருக்கிறது என்று பொருள். வீட்டில் தெய்வசக்தி குறைந்தால், சந்தோஷம் இருக்காது, பிரச்சனைகள் உருவாகும், தொழில், வேலையில் தடைகள் வரும், திருமணம், குழந்தை பிறப்பு, போன்ற சுப நிகழ்வுகள் தடைபடும், செல்வம் சேராது. 
வீட்டை கோயிலைப் போல் மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

No comments:

Post a Comment