jaga flash news

Friday, 20 November 2020

விளக்கெண்ணெய் பற்றிய மருத்துவ விளக்கம்:

விளக்கெண்ணெய் பற்றிய மருத்துவ விளக்கம்:

     தினமும் இரவு படுக்கைகுச் செல்லும்முன் இள வெந்நீரில் ஐந்து சொட்டு விளக்கெண்ணெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர, வலிப்பு நோய், குன்மம், குடலேற்றம், கண், காது மூக்கு, வாய் பற்றிய நோய்கள் மாயமாய் விலகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூடும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் போன்றவை குணமாகும். ஆமணக்கு எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வர தேக நிறம் பொன்போல் ஜொலிக்கும்.

     பிள்ளை பெற்ற பெண்களின் கருப்பை அழுக்கு வெளியேற ஆமணக்கு எண்ணெய்யை பேதி மருந்தாய்க் கொடுக்கலாம். வயிற்று வலி உள்ளவர், பிள்ளை பெற்றவர், கரு உண்டான பெண்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

     பெண்களுக்கு மார்புக் காம்புகளில் உண்டாகும் புண், வெடிப்பு போன்றவற்றுக்கு விளக்கெண்ணெய்யில் சிறிது மஞ்சள் சேர்த்துப் போட்டு வர, இரண்டே நாட்களில் ஆறிவிடும்.

பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தினமும் ஐந்து சொட்டு எண்ணெய்யை சாப்பிட்டு வந்தாலே போதும் வியத்தகு பலன் பெறலாம்.

No comments:

Post a Comment