jaga flash news

Thursday, 19 November 2020

சாபங்கள்

சாபங்கள்.
.........


மனுஷ்ய ஜீவிதத்தை துக்க கரமாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது சாபங்கள்.

ஸ்திரீ சாபம்.

ஸ்த்ரீமார்களை ஸ்நேக ப்ரணயம் காட்டி., அவர்களை லலிதமான சௌந்தரியம் கூடிய வார்த்தைகள் கொடுத்து, விவாஹ 
உறுதி கொடுத்து ஸரீர லைங்கீக உறவு கொண்டு, அவர்களை கெர்ப்பிணி ஸ்திரீக்களாக்கி கை ஒழிந்து போகுதல்,

சொந்தம் சகோதரிகளை வஞ்சித்தல். அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நில அவகாசங்களை கபடபித்து வஞ்சகம் செய்யும் சகோதரன்மார்கள்,

புருஷத்தியை ஸம்ரக்ஷணம் கொடுக்காமல், வேறு ஒரு ஸ்திரீயோடு கள்ளக்காதல் கொண்டு, கெட்டுதாலி கெட்டிய புருஷத்தியை விவாஹமோசனம் (Divorce) நல்கி துன்படுத்துதல் போன்றவற்றை செய்தால் பிறகு,
இவர்கள் குடும்பத்தில் வம்ஸநாஸம், உண்டாகும்,

ப்ரேதஸாபம்.
................
மரித்துபோன ஸரீரத்தை வைத்துகொண்டு, அவர்கள் முன்பு செய்த குற்றங்களை   தரம் தாழ்த்தி சொல்லுதல், மேலும் ஸவஸரீரத்தை தாண்டுதல்.
புத்திரர்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஸவஸம்ஸ்ஹாரங்கள் செய்வதை தடை செய்தல்,
அதேபோல் மற்றவர்களை, குடும்ப வைராக்கியம் கொண்டு, இறந்தவரின் ஸவஸரீரத்தை காண அனுவாதம் கொடுக்காமலிருப்பது, இவைகள் ப்ரேதஸாபம் ஆகும்,
இந்த ஸாபம் ஏற்றால் ஆயுள் குறையும்,

ப்ரம்மஸாபம்.
...........
நமக்கு வித்யாப்யாஸம் கற்று கொடுத்த, வித்யாகுருவை மறத்தல், கற்றுகொடுத்ததை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்காமலிருத்தல்,, தவறான மார்க்கத்தில் கற்ற வித்தயை ஈடுபடுத்துதல்,

புத்திரர்களுக்கு வித்யாப்யாஸ யோக்கியதை இல்லாமல் போகும்,

ஸர்ப்ப சாபம்.
...............
ஸர்ப்பங்களை கொல்லுதல்,
அவைகள் வஸிக்கும் ஸ்தலங்களை நசிப்பித்தல். ஸர்ப்ப முட்டைகளை அழித்தல் போன்ற காரணங்களால் ஸர்ப்பஸாபம் ஏற்பட்டு விவாஹ தடைகள் உண்டாக்கும்,

பித்ருசாபம்.
...........
பித்ருக்களுக்கு செய்யவேண்டிய திதி கர்ம்மங்கள் செய்யாமல் போவது.
பிதாமகன், பிதாமகியை உபத்திரவம் செய்தல்,
இதனால் வம்ஸங்களில் ஆண் சந்நதிகளால் குலநாஸம் உண்டாகும்,

கோ சாபம்,
............
பசுவை மாம்ஸங்களுக்கு கொல்லுதல், கன்றுகுட்டியையும் தாயையும் பிரித்தல், பசுவிற்கு வேண்டிய பக்ஷண பதார்த்தங்கள் கொடுக்காதிருத்தல் போன்றவற்றால் குடும்பத்தில் அபிவிருத்தி கிட்டாது,

பூமி சாபம்.
............
மற்றவர்கள் நிலங்களை அபகரித்தல்,
தேவையில்லாமல் பூமியில், குழி குத்துதல் போன்றவை செய்தால், கிரகங்களில் சந்தோஷம், இருக்காது 

ஜல சாபம்.
........
பலர்களுக்கு உபயோகப்படும், ஜல நதிகளை நசிப்பித்தல், விஷம் கலக்குதல் தாகித்தவர்களுக்கு நீர் கொடுக்காதிருத்தல் போன்றவைகள் செய்தால், அவர்களுடைய நிலத்தில் நீருக்காகக குழி குத்தினால் நீர் கிட்டாது,

வ்ருக்ஷ சாபம்.
..............

பச்சைமரம் வெட்டுவது, மரத்தை எரிப்பது, மரங்கள் அனுவாதம் வாங்காமல் மரங்கள் வெட்டி வீடு கட்டுதல், இவைகள் கொண்டு ஸரீர ரோகங்கள் உண்டாகும்,

தேவசாபம்.
.............
மதசண்டை, ஜாதிவேறுபாடுகள், போன்ற காரணங்களால் க்ஷேத்ரங்களில் பூஜா கர்ம்மங்கள் நிறுத்தி வைத்தல், க்ஷேத்ர ஸ்தலங்களை கையப்படுத்துதல் போன்ற காரணங்களால் வம்ஸநாஸம் சம்பவிக்கும்,

ப்ராம்ண சாபம்.
..........

அப் ப்ராமணன்மார்களை, உபத்திரவம் செய்தல், அவர்களின் பூணூல் அறுத்தல், ஸரீர உபத்ரவங்கள் செய்தல், போன்றவற்றால் ப்ராம்ண ஸாபம் கொண்டு  வம்ஸநாஸம் சம்பவிக்கும்,

குலதெய்வம் சாபம்.
............
நம் முன்னோர்கள் பூஜித்து கொண்டிருந்த குலதெய்வத்தை பூஜிக்காமல் விட்டு விடுதல்,,
இப்படி பூஜிக்காமல் இருந்தால் வம்ஸத்தில் விவாஹம் தடைகள், புத்ரநாஸம் போன்றவை சம்பவிக்கும்,

No comments:

Post a Comment