jaga flash news

Monday, 16 November 2020

கந்தசஷ்டி தாரை ரகசியம்

கந்தசஷ்டி தாரை ரகசியம்
======================

ஷஷ்ட என்றால் ஆறு என்று பொருள். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் இருந்து வரும் ஆறாவது நாள் என்று அர்த்தம்.

முருகனின் நட்சத்திரம் விசாகம். அதன் சாதக தாரைகள் உத்திராடம் உத்திரம் மற்றும் கார்த்திகை. சாதக தாரை என்பது ஒருவருக்கு தோஷம் போக்கும் தாரை என்று அழைக்கப்படுகிறது.

அதுபோல எதிரிகளை வெல்ல சாதகமான சூழலை உருவாக்கி தருவதற்கும் சாதக தாரை உபயோகப்படும். விசாகத்தின் சாதக தாரை உத்திராடம். ஆகவே சூரபத்மனை வெல்ல முருகன் சாதக தாரை வரும் நாளான சஷ்டியை தேர்ந்தெடுக்கிறார். மேலும் உத்திராடம் என்பது அபிஜித் நட்சத்திரத்தின் ஆரம்பப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. முருகவேல் மறுபிரதிபலிப்பாக அபிஜித் நட்சத்திரம் அமைந்திருப்பதை நாம் வானத்தில் காண முடியும். Vega என்று லத்தீன் மொழியில் அழைக்கப்படும் அபிஜித் நட்சத்திரம் முருகனின் வேலை கீழ்நோக்கி பிடித்தார் போல காட்சியளிக்கும். இது சூரனை வதம் செய்யும் காட்சியை உருவகப் படுத்துகிறது. 

அழிப்பதற்கரிதான அரக்கர்களை அழிக்க தெய்வங்கள் அபிஜித் முகூர்த்தத்தில் அபிஜித் வடிவான பிரம்மாஸ்திரத்தை உபயோகித்து இருப்பதை நாம் புராண இதிகாசங்களில் காண முடியும். முருகன் கையில் இருக்கும் வேல் பிரம்மாஸ்திரத்தை மறு பிரதிபலிப்பு. பிரம்மாஸ்திரம் பெரும்பாலும் அரக்கர்களை அழிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது இருந்தாலும் முருகன் கையில் இருக்கும் வேல் எதிரிகளை அழிக்காமல், வேறு விதமான வடிவங்களுக்கு மாற்றி அமைக்கிறது. பூசம் என்பது முருக வேலின் வடிவம் கொண்டது. அங்கே குரு உச்சம் என்பதால் அரக்கர்களின் உயிரை எடுக்காமல் வேறு விதத்தில் மாற்றி அமைத்து அவர்களுக்கு புத்தி புகட்டுகிறது.


No comments:

Post a Comment