jaga flash news

Friday, 13 November 2020

குபேர_லக்ஷ்மி_விரதம்_அனுஷ்டிக்கும்_முறை





#குபேர_லக்ஷ்மி_விரதம்_அனுஷ்டிக்கும்_முறை
                         

 லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும்.

 சாதாரணமாக வீட்டில்  நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

 இப்படத்திற்கு  முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர்  நிரம்பிய நூல் சுற்றிய செப்பு குடம் வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன் மேல் ஓர்  தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு  மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.

ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை  பாடி பூஜையை செய்ய வேண்டும். 
செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் கணபதியை மனதாரத் துதியுங்கள்.
அடுத்து குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.

கலசத்திற்கு முன் ஒரு பலகையின் மீது படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். 

அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.

நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.

இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கோலத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.

தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!' என்று மனதார வேண்டி, அதன் பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய  நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும்  குபேரனுக்கு உகந்த மலர்.

பின் நெய்வேத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள்  வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும்  தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல  ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.

No comments:

Post a Comment