jaga flash news

Saturday, 21 September 2024

யூரிக் ஆசிட் சட்டுனு ஏறுதா.. யூரிக் அமிலத்தின் அறிகுறி இதுதான்.. இந்த 5 சூப்பர் உணவை மிஸ் பண்ணாதீங்க..


யூரிக் ஆசிட் சட்டுனு ஏறுதா.. யூரிக் அமிலத்தின் அறிகுறி இதுதான்.. இந்த 5 சூப்பர் உணவை மிஸ் பண்ணாதீங்க
நம்முடைய உடலில் யூரிக் அமிலம் அதிகமாகிவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? யூரிக் அமில பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?


நம்முடைய உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுதான் யூரிக் ஆசிட்டாகும்.. பெரும்பாலும், சிறுநீரின் மூலமே, இந்த யூரிக் அமிலம் வெளியேறுகிறது.. எப்போதுமே, நம்முடைய கல்லீரலில் சுரக்கும் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும் யூரிக் அமிலத்தின் அளவு சீரானதாக இருக்க வேண்டும்..


high uric acid uric acid level foods

யூரிக் அமிலம்: அதாவது, ஒரு நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டும். உடலில் உற்பத்தி செய்யும் அளவை விட, வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவு குறைவாகிவிட்டால், மூட்டுகளுக்கு இடையில் தேங்கி நின்று, வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்..

அதேசமயம், யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருந்தால் கீழ்வாத பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு, எலும்புகள் முறிவு, போன்ற உபாதைகள் ஏற்படும். எனவே, சீரான அளவை பராமரிக்க வேண்டும்.

ரெடிமேட் உணவு: ஆல்கஹால் எடுப்பவர்கள், அதிக இனிப்பு, அதிக பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக ரெடிமேட் உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் ப்யூரின் அளவு அதிகரிக்க செய்யலாம்... அதிக, அன்னாசி, அதிக சப்போட்டாப்பழம் போன்றவையும் யூரிக் அளவை அதிகரிக்க செய்துவிடும். வாத, பித்த, கபம் சமநிலையில் செயல்பட வைக்கக்கூடிய உணவுகளை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

பழங்களில், ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களும், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செள செள, வெண்டைக்காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் ஏதாவது ஒரு பருப்புகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.


கறிவேப்பிலை: பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளும், சிறுதானியங்கள், கறிவேப்பிலை, புதினா, பிரிஞ்சி இலை, கொத்தமல்லி போன்றவைகளையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும்போது, யூரிக் ஆசிட் அமில அளவு கட்டுக்குள் வரும். முக்கியமாக, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லியை துவையல் செய்து சாப்பிடலாம். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த வெந்தயம், பிரிஞ்சி இலைகள், வெற்றிலை பாக்கு இவைகளை உட்கொள்வதாலும், சிறுநீர் மூலம் யூரிக் அமிலம் வெளியேறும்.

எப்போதுமே யூரிக் அமில பாதிப்பை பொறுத்தவரை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு குணப்படுத்திவிடலாம்.. ஆனால், ஆரம்பத்திலேயே இதற்கான அறிகுறிகள் அவ்வளவாக தெரியாதாம்.. இந்த பாதிப்பு தீவிர நிலையை அடையும்போதுதான், அதன் அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும் என்கிறார்கள். எனினும், ஒருசில அறிகுறிகளை வைத்து, யூரிக் அமில பாதிப்பை பற்றி அறிந்து கொள்ளலாம்.


அறிகுறிகள்: முதலாவதாக, அதிக யூரிக் அமில அறிகுறிகள், குறைந்த யூரிக் அமில அறிகுறிகள் வைத்தே, ரத்த யூரிக் அமிலத்தின் அளவினை அறிந்து கொள்ள முடியும். அடுத்ததாக, சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் கழிக்கும்போது வலி, போன்றவையும் இதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.. பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

அதேபோல, கீல்வாதம் பாதிப்பு இருந்தாலும், யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.. சிறுநீரகத்தில் கற்கள் தேங்குவதும் அதிக யூரிக் அமில அறிகுறியாக பார்க்கப்படுகிறது..

யூரிக் அமிலம்: இப்படி யூரிக் அமிலம் அதிகமாகி, கீல்வாத பாதிப்பை தந்துவிட்டால், மூட்டுகளில் சிவத்தல், வீக்கம், விறைப்பு போன்றவையனைத்துமே ஏற்பட்டுவிடும்.. இதனால், மூட்டுகளை அசைக்கக்கூட முடியாது.. ஒருவித களைப்பும், அசதியும் உடலில் இருந்து கொண்டேயிருக்கும். எனவே இந்த அறிகுறிகள் தெரிந்தாலே உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிசை பெறுவது அவசியமாகும்.


No comments:

Post a Comment