jaga flash news

Tuesday, 24 September 2024

முளைகட்டிய பயிர்கள் அள்ளி கொடுக்கும் நன்மைகள்.. என்னென்ன தெரியுமா?


முளைகட்டிய பயிர்கள் அள்ளி கொடுக்கும் நன்மைகள்.. என்னென்ன தெரியுமா?

பயிர் வகைகளை உணவுகளில் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதே பயிர்களை முளைகட்ட வைத்து பின்னர் உண்ணும்போது இன்னும் அதிக சத்துக்கள் கிடைக்கின்றன.
நார்சத்து: முளைகட்டிய பயிர்களில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உடல் எடை பருமன் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது.
sprouts

நோய் எதிர்ப்பு சக்தி: உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாகவும் நோயை எதிர்த்து போராடும் சக்தியை இந்த பயிர்கள் கொடுக்கின்றன. இதில் உள்ள கிளோரோபில் செல்களில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகின்றன.

தலை முடி: பயிர்களை முளைகட்டி உண்பதால் அதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி உதிர்தல் மற்றும் உடைதலை கட்டுப்படுத்தி வலுவான தலை முடியை கொடுக்கிறது.

கொழுப்பின் அளவு: பயிர்களை முளைக்கட்டுவதால் இயற்கையாகவே கொழுப்பு குறைந்த உணவாக மாறுகிறது. மேலும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் கொழுப்பை சீராக வைத்திருக்கிறது.

உடல் எடை: முளைகட்டிய பயிர்களில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் எடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும். மேலும் இது வயிறை நிரப்பி வைப்பதால் அதிக பசி எடுக்காமல் தடுக்கிறது

No comments:

Post a Comment