jaga flash news

Monday 30 September 2024

வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா?


வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா? சிவலிங்கம் வைத்து பூஜிப்பதானால் இதுதான் ரூல்ஸ்.. அடேங்கப்பா
சிவலிங்கத்தை வீட்டில் வைக்கலாமா? வைத்திருக்கக் கூடாதா? என்பது பற்றின குழப்பங்கள் பலருக்கும் உள்ளது.. ஆனால், இதுகுறித்து ஆன்மீகத்தில் தெளிவாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளது. அவைகளை சுருக்கமாக இங்கே நாம் பார்க்கலாம்.

பொதுவாக, சிவலிங்கத்தை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்பார்கள்.. அப்படி வீட்டில் வைத்திருப்பது அபசகுனம் என்றும் சொல்வார்கள்.. ஆனால், சிவலிங்கத்தை தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால், அதற்குரிய சில விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே, சிவலிங்கத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும். அந்த விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

spirituality shivalingam shivlinga
எப்போதுமே சிவலிங்கத்தை கிழக்கு பக்கம் பார்த்தவாறே திறந்த, காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்... கிழக்கு பக்கம் சிவலிங்கம் என்றால், வணங்குபவர்கள் தெற்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு நின்றுகொண்டு வணங்க வேண்டும்.

தங்கம், வெள்ளி: இந்த சிவலிங்கம் எப்போதுமே கல்லால் ஆனதாக இருக்க வேண்டும்... உலோகமாக இருந்தால், அது தங்கம், வெள்ளி, செம்பினால் ஆன சிவலிங்கமாக இருக்கலாம்.. ஆனால், இந்த சிவலிங்கத்தின் கழுத்தை சுற்றிலும் பாம்பின் அமைப்பு செயற்கையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிலும் தண்ணீர் விழும் படியான அமைப்பில், லிங்கத்தை வைக்கலாம்.

ஒரே ஒரு சிவலிங்கத்தை மட்டுமே வைக்கலாம்.. வேறு கடவுள்களை வைக்கக்கூடாது.. ஏனென்றால், சிவனுக்குள்ளேயே அனைத்து கடவுள்களும் ஐக்கியமாகிவிடுவர்.. சிறிய அளவில் அதாவது, உள்ளங்கையில் வைத்து விரல்களை மூடினால் வெளியே தெரியக்கூடாதாம்.. பெரிய அளவு லிங்கம் கோயில்களில் மட்டுமே வைத்து வழிபடவேண்டும்.

தினமும் காலையில் குளித்ததுமே, சிவலிங்கத்துக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேம் செய்ய வேண்டும்.. பிறகு, பால், தண்ணீர், கங்கை தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் மட்டும் வைக்க வேண்டும். வெள்ளை நிற பூக்களை மட்டுமே படைக்க வேண்டும்.. தினமும் 2 வேளை பூஜை செய்ய வேண்டும்.. தினமும் ஏதாவது நைவேத்தியம் செய்யலாம். அல்லது வாழைப்பழம் அல்லது கற்கண்டு படைத்தாவது வழிபட வேண்டும்.

ஓரிரு நாட்கள் வெளியூர் செல்வதானால், ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டுச் செல்லலாம். நீண்ட நாட்கள் ஊருக்கு செல்ல நேர்ந்தால், தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்வதற்கு கட்டாயம் யாராவது ஒருவரை நியமிக்க வேண்டும்..

அல்லது கையோடு சிவலிங்கத்தை வெளியூருக்கு கொண்டு சென்றுவிடலாம். நீங்கள் எங்கே தங்கி இருக்க போகிறீர்களோ, அங்கேயே வைத்து உரிய பூஜைகளை செய்யலாம்.. இதெல்லாம் சாத்தியம் என்றால் மட்டுமே, வீட்டில் லிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.


1 comment:

  1. அய்யா...வெ.சாமி அவர்களே ! அருமை.

    ReplyDelete