jaga flash news

Monday 30 September 2024

தயிர் பச்சடி...



உணவு
தயிர் பச்சடி... ஜெர்மனி ஆய்வாளர் கூறிய உணவை விட இது பெஸ்ட்: மருத்துவர் சிவராமன்
"பன்மடங்கு அதிகமான சல்ஃபோரில் சத்தும், அதிக ஆன்டி அக்சினேடு நிரம்பிய உணவு இருப்பதை கண்டறிந்தேன். அந்த உணவு நம்முடைய வீடுகளில் அன்றாட தயார் செய்யப்படும் 'தயிர் பச்சடி' உணவு தான்." என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
 
சித்த மருத்துவர் சிவராமன், தயிர் பச்சடியில் இருக்கும் அற்புத நன்மைகள் குறித்து தெரிவித்துள்ளார்.


சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், நம்முடைய தயிர் பச்சடியில் இருக்கும் அற்புத நன்மைகள் குறித்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "1950-களில் சர்க்கரை, இரத்த கொதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு இருக்கும் சிறந்த உணவு எது? என்கிற ஆய்வு நடந்தது. அப்போது ஜெர்மனியைச் சேந்த பெண் ஆய்வாளர் ஒருவர், சிறந்த உணவு எனக் குறிப்பிட்டு ஒரு உணவை முன் நிறுத்தினார். அந்த உணவை இன்றும் நிறைய புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்கொண்டு வருகிறார்கள். 

அந்த உணவு என்னவென்றால், 'காட்டேஜ் சீஸ் வித் பிளாக் சீட்ஸ்'. அதுபற்றி அவர் எழுதிய விளக்கத்தில், காட்டேஜ் சீஸில் சல்ஃபோரில் இருப்பதாகவும், பிளாக் சீட்ஸில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இருப்பதாகவும், இவை இரண்டும் மிகச்சிறந்த ஓர் உணவு என்று குறிப்பிட்டு இருந்தார். 

அதற்கு இணையாக நம்மிடம் என்ன உணவு இருக்கிறது என்று நான் தேடிய போது, அந்த உணவை விட பன்மடங்கு அதிகமான சல்ஃபோரில் சத்தும், அதிக ஆன்டி அக்சினேடு நிரம்பிய உணவு இருப்பதை கண்டறிந்தேன். அந்த உணவு நம்முடைய வீடுகளில் அன்றாட தயார் செய்யப்படும் 'தயிர் பச்சடி' உணவு தான்.  


இது அவ்வளவு சிறப்பான உணவு எனலாம். பெரிய வெங்காயத்துடன் மோர் சேர்த்து செய்யப்படும் தயிர் பச்சடியில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. வெங்காயத்தில் இருக்கும் பீனாலிக் அமிலங்கள் போன்று வேறு எந்த உணவிலும் இல்லை. தயிரில் இருந்து எடுக்கப்படும் மோரில் சல்ஃபோரில் சத்து அதிகம் இருக்கிறது." என்று அவர் கூறினார். 



No comments:

Post a Comment