jaga flash news

Wednesday, 25 September 2024

விளக்கேற்றும்போது, சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க சொல்கிறார்கள்..

வீடுகளில் நாம் விளக்கேற்றும்போது, சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க சொல்கிறார்கள்.. விளக்கேற்றும் நேரம் மட்டும் முக்கியமல்ல, தீபம் ஏற்றும் விளக்குகள், தீபத்துக்கு உதவும் திரிகள் இவை அனைத்தையும் நன்றாக கவனித்து பயன்படுத்த வேண்டுமாம்.

வீட்டில் விளக்கேற்றுவதானால், பெரும்பாலும், பூஜையறையில் மட்டுமே ஏற்றுவது வழக்கம். ஆனால், பூஜையறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றி வைக்கலாம்.


அதிலும் மாலை நேரங்களில், நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் , குடும்பத்தை பீடித்திருக்கும் வறுமை நீங்கிவிடுமாம்.


நல்லெண்ணெய்: எப்போதுமே விளக்கேற்றும் எண்ணெய்கள், கலப்படமில்லாததாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் நல்லெண்ணெய் சிறந்த சாய்ஸ் ஆகும்.. சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு என்றால், நெய் ஊற்றி ஏற்றலாம். தாம்பத்தியம் சிறக்க வேண்டுமானால், விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டுமாம்..


விளக்கேற்றும்போது, கிழக்கு திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால், துன்பம் தீரும் என்பார்கள்.. மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால், கடன் தொல்லை தீரும்.. வட திசையில் உள்ள முகத்தை ஏற்றினால் எல்லா செல்வமும் கிடைக்கும்.. ஆனால், தென் திசையில் உள்ள முகத்தை எப்போதுமே ஏற்றக்கூடாது. இதனால், கட்டுக்கடங்காத கடன் தொல்லைகள், பிரச்சனைகள் வந்துவிடுமாம்.


தூய்மையான பஞ்சு: திரிகளை கூட சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.. தூய பஞ்சினால் திரியில் விளக்கேற்றினால், குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.. மஞ்சள் நிறத்தில் திரியை ஏற்றினால், மன தைரியம் கூடும். சிவப்பு நிறத்தில் திரி ஏற்றினால் திருமண தடை நீங்குமாம்.. வாழைத்தண்டு திரி ஏற்றினால் குழந்தைப்பேறு உண்டாகும்.




வெள்ளெருக்கு பட்டையில் திரி தயாரித்து விளக்கேற்றினால், செல்வம் பெருகும்.. தாமரைத் தண்டின் நாரில் திரியை ஏற்றும்போது, தீய சக்திகள் விலகும்..

விளக்குகள்: அதேபோல, விளக்கேற்றும்போது, எண்ணெய் முழுவதும் தீர்ந்துவிடக்கூடாது.. எண்ணெய் இல்லாமல் திரியும் கருகிவிடக்கூடாது.. விளக்கு தானாக அணைந்து விடவும் கூடாது. விளக்கை எப்போதுமே கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது.. பூக்களால் தீபத்தை அணைத்துவிடலாம்.. இதற்கெனவே பித்தளை குச்சிகள் கடைகளில் விற்கப்படுகின்றன.




அதேபோல தீபத்தின் திரியின் அடிப்பகுதியை "ஓம் சாந்த ஸ்ரூபிணே நம" என்று சொல்லியே பின்பக்கமாக இழுக்க வேண்டும். இதனால் தீச்சுடரானது, மெல்ல மெல்ல குறைந்து, எண்ணெய்யில் அணைந்துவிடும்.

தவிர்க்கலாம்: விளக்கை ஏற்றும்போது நேரடியாக தீப்பெட்டியில் ஏற்றாமல், ஊதுபத்தியை பற்ற வைத்து, அதிலிருந்து விளக்கில் சுடரை பற்ற வைக்கலாம். அல்லது அகல் விளக்கை ஏற்றிக்கொண்டு, அதை வைத்து, தீபத்தை ஏற்றலாம். ஏனென்றால், தீப்பெட்டியை நல்லதிற்கும் ஏற்றுவார்கள், கெட்டதுக்கும் ஏற்றுவார்கள் என்பதால், நேரடியாக தீப்பெட்டி வைத்து, கடவுளுக்கு விளக்கு ஏற்றுவதை தவிர்க்கலாம்.

அதேபோல, ஒரு விளக்கிற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மற்றொரு விளக்கிற்கோ அல்லது பயன்படுத்திய எண்ணெய்யை கொண்டு, விளக்கை சுத்தம் செய்து விட்டு மறுபடியும் பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.. எப்போதுமே, விளக்கை சுத்தம் செய்த பிறகு புதிதாக எண்ணெய் ஊற்றி, அதற்கு பிறகு திரி போட்டுவிட்டுத்தான் விளக்கேற்ற வேண்டும். ஏற்கனவே ஏற்றிய திரியிலும் விளக்கேற்றலாம். ஆனால், எரிந்த பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, விளக்கேற்றலாம். எக்காரணம் கொண்டும் திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது.


No comments:

Post a Comment