jaga flash news

Friday 20 September 2024

திருப்பதி-க்கு லட்டு பிரசாதமாக உருவானது எப்படி தெரியுமா? யார் இந்த கல்யாணம் ஐயங்கார்!!

 திருப்பதி-க்கு லட்டு பிரசாதமாக உருவானது எப்படி தெரியுமா? யார் இந்த கல்யாணம் ஐயங்கார்!!  திருப்பதி செல்பவர்கள் லட்டு பிரசாதம் இல்லாமல் மலை இறங்கமாட்டார்கள். அந்த வகையில் திருப்பதி பெருமாள் கோயிலில் வழங்கப்படும் லட்டு நமது வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ளது. இப்படி திருப்பதி என்றாலே லட்டு என்பதை உருவாக்கியவர் யார் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். திருப்பதி பெருமாள் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கும் பழக்கம் 300 ஆண்டுகளுக்கு முன்னர் 1715 இல் இருந்து தொடங்கப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் பிரத்தியேக சமயலறை கூட நிறுவப்பட்டுள்ளது. சிறந்த திறன் கொண்ட நபர்கள் மட்டுமே இந்த லட்டு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் லட்டு விற்பனையில் மட்டும் இத்தனை கோடி சம்பாதிக்கிறதா? ஒரு நாளில் முதலில் தயாரிக்கப்படும் லட்டு பெருமாளுக்கு வைத்து படைக்கப்படுகிறது. இதன் பிறகுதான் பக்தர்களுக்கு அது விநியோகம் செய்யப்படும். திருப்பதிக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தர்களும் ஒரு லட்டினை இலவசமாகவும் பின்னர் 50 ரூபாய் கொடுத்து அவர்களுக்கு தேவையான அளவு லட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். 2015 ஆம் ஆண்டு வேர்ல்ட் வைடு என்ற இதழ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினம் தோறும் ஒரு டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ கிராம் முந்திரி, 150 கிலோ கிராம் ஏலக்காய் ,500 லிட்டர் நெய் ,500 கிலோ சர்க்கரைப்பாகு, 540 கிலோ திராட்சை ஆகியவற்றை கொண்டு சுமார் மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு லட்டினையும் தயாரிப்பதற்கு 40 ரூபாய் செலவாகிறது.  இந்த பக்திமனம் நிறைந்த லட்டினை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பவர் கல்யாணம் ஐயங்கார். அவர்தான் திருப்பதி தேவஸ்தானத்திற்கு என்றே பிரத்தியேகமான ருசி கொண்ட லட்டுவை தயாரித்தார். பின்னாளில் அவரது மகன், சகோதரர்கள் என பாரம்பரியமாக அவரது குடும்பமே இந்த லட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. திருப்பதி லட்டு விவகாரம்: தேசிய பால்வள அறிக்கையில் சொல்லப்படுவது என்ன..? - முழு விவரம் 2001 ஆம் ஆண்டில் இருந்து தான் திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள் லட்டு தயாரிப்பில் ஈடுபட தொடங்கினர். லட்டுக்கான டிமாண்ட் அதிகரித்ததே இதற்கு காரணம். அதற்கு முன்பு வரை கல்யாணம் ஐயங்கார் குடும்பம் மட்டுமே இதனை மேற்கொண்டது. கல்யாணம் ஐயங்கார் என்பவர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாச ராகவன் என பெயர் கொண்டவர். இவர் பூதேரி என்ற கிராமத்தில் பிறந்தவர். பின்னாலில் இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலேயே தன் குடும்பத்தினருடன் தங்கி கோயிலுக்கு சேவையாற்ற தொடங்கினார். Advertisement ஒருநாள் அதிக செல்வ வளம் கொண்ட ஒரு நபர் திருமலையில் தன்னுடைய கோரிக்கையை கடவுள் நிறைவேற்றினால் லட்டு தயாரித்து பெருமாளின் திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்குவதாக வேண்டிக் கொண்டார். அப்படி அவருடைய வேண்டுதல் நிறைவேறியதை எடுத்து கல்யாணம் ஐயங்கார் அவற்றை தயாரித்து வழங்கியதாக தெரிகிறது. திருப்பதி லட்டு: ஜெகன் மோகன் அரசு ஏன் நந்தினி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதலை நிறுத்தியது..? இப்படி பல பணக்காரர்களும் மிராசுதாரர்களும் திருப்பதி கோயிலில் தங்கள் வேண்டுதலை முன்வைத்து லட்டு பிரசாதமாக வழங்க தொடங்கினர். இப்படித்தான் லட்டு பிரசாதம் இங்கு புகழ் பெற்றது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் மூன்று வகையான லட்டுக்கள் வழங்கப்படுகின்றன. ஆஸ்தானம் லட்டு, கல்யாண உட்ஸ்வம் லட்டு , ப்ரோகதம் லட்டு. இதில் ஆஸ்தானம் லட்டு என்பது சிறப்பு பண்டிகை நாட்களில் தயாரிக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. பிரதமர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் , பிற நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோருக்கு இந்த ஆஸ்தானம் லட்டு வழங்கப்படுகிறது. இது பொதுவாக 750 கிராம் எடை கொண்டதாக இருக்கும். கல்யாண உட்ஸ்வம் லட்டு என்பது கல்யாண உட்ஸ்வ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ப்ரோகதம் லட்டு அன்றாடம் கோயிலுக்கு வரும் வழக்கமான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது . இப்படி பயபக்தியுடன் பெருமாள் பக்தர்கள் வாங்கி செல்லும் லட்டு பிரசாதத்தில் பன்றி கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் செய்யப்படும் நிறுவனம் மாற்றப்பட்டதே இதன் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

No comments:

Post a Comment