jaga flash news

Saturday, 21 September 2024

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?


ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி ஆகிய சிட்ரிக் பழங்கள் அதன் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கும் அதிக ஊட்டச்சத்திற்கும் பெயர் போனவையாகும். இந்த இரண்டு பழங்களுமே அதிக சாறு நிறைந்த பழங்களாகும். இருப்பினும், இரண்டுமே வெவ்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. வைட்டமின் சி: ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் சி சத்து இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்த உதவுகிறது. சாத்துக்குடியிலும் வைட்டமின் சி சத்து இருந்தாலும் ஆரஞ்சை காட்டிலும் குறைவாகும். எனினும், இதில் இருக்கும் வைட்டமின் சியின் அளவு நம் உடலுக்கு போதுமான அளவு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், கொலாஜென் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

2. கலோரி: ஆரஞ்சு பழத்தில் அதிக கலோரிகள் இருக்கின்றன. ஏனெனில், அதில் இயற்கையாகவே சர்க்கரையின் அளவும் அதிகமாக உள்ளது என்பதாலாகும். ஆரஞ்சை ஒப்பிடுகையில் சாத்துக்குடியில் குறைந்த அளவிலேயே சர்க்கரை இருப்பதால் கலோரியும் குறைவாக இருக்கிறது. எனவே, உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரஞ்சை விட, சாத்துக்குடியை எடுத்துக்கொள்வது சிறந்தது.


3. அசிடிட்டி: ஆரஞ்சு அதன் புளிப்பு சுவைக்கு பெயர் போனதாகும். இதில் அசிடிட்டி அதிகமாக உள்ளது. ஆரஞ்சில் உள்ள அசிடிட்டி புத்துணர்ச்சியை தந்தாலும் சென்சிட்டிவான வயிறு உள்ளவர்களுக்கு இதை உண்பதற்கு சற்று கடினமாக இருக்கும். இதுவே சாத்துக்குடியில் குறைவான அசிடிட்டி மற்றும் புளிப்புத்தன்மை உள்ளதால், அமிலப்பின்னோட்ட நோய் மற்றும் குடற்பாதையில் இருக்கும் நுண்உணர் பிரச்னைகள் ஏற்படாது.

 
4. ஊட்டச்சத்து: ஆரஞ்சில் அதிகமாக பொட்டாசியம் மற்றும் மினரல் இருக்கிறது. இது இதய பாதுகாப்பிற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், ஆரஞ்சில் குறிப்பிட்ட அளவு ஃபோலேட், தையாமின், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சாத்துக்குடியில் பொட்டாசியம், ஃபோலேட், ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆரஞ்சை காட்டிலும் குறைந்த அளவிலே உள்ளது. ஆரஞ்சில் ஊட்டச்சத்து, சர்க்கரை, வைட்டமின் சி, அசிடிட்டி அனைத்தும் அதிக அளவிலும், சாத்துக்குடியில் சற்று குறைவான அளவிலும் உள்ளது. எனவே, Sensitive ஆன வயிறு உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாத்துக்குடியையும். அதிக சுவை,  சர்க்கரை, அசிடிட்டி வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆரஞ்சையும் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.


No comments:

Post a Comment