Saturday, 31 October 2020
ஆரோக்கிய_குறிப்புகள்
சனி பெயர்ச்சி27.12.20.6.29am
சனி பகவான் தரும் கர்மயோகம்»
யோனிப்பொருத்தம்
பயண விரும்பி
பரிகாரம் பற்றிய சிறிய விளக்கம்
சுக்ரன்+கேது சேர்க்கை பாசான யோகம் ஆகும்
அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு
எண்டார்பின், செரோடோனின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் இந்த நான்கும்தான் நம் உடலினுள்ளேயே இருக்கும் ‘மகிழ்ச்சி’ ஹார்மோன்கள்
எண்டோர்பின்
எண்டார்பின்கள்(Endorphins) உடலின் வலியை கட்டுப்படுத்துபவை. இயற்கையாகவே உடலில் வலி நிவாரணிகளாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை. காட்டுவாசியாக ஆரம்பத்தில் மனிதன் இருந்தபோது நம் முன்னோர்கள் மிருகங்களிடமிருந்து தப்பிக்க ஓடும்போது எண்டார்பின்கள் உடலில் தானாகவே உற்பத்தியாகின்றன. இன்றோ, நாம் உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமே காற்றோட்ட மண்டலங்களில் எண்டார்பின்களை உற்பத்தி செய்யும் நிலையில் இருக்கிறோம்.
வலி தரும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், எண்டார்பின் உற்பத்தி காரணமாக பயிற்சிக்குப்பின் ஃப்ஷ்ஷாக உணர்கிறோம்.எப்படி எண்டார்பின் உற்பத்தியை அதிகரிக்கலாம்?
கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும்போது, நம் உடலின் இயல்பான வலி நிவாரணிகளான எண்டார்பின்களை தூண்டுவதன் மூலம் நாட்பட்ட வலியை சமாளிக்க உதவுகிறது. எண்டார்பின்கள் வலியைப் போக்குவதில்லை. மாறாக வலி தெரியாமல் செய்கிறது அவ்வளவே. அடுத்து காரமான உணவை சாப்பிடும்போது, நாக்கிலுள்ள ரிசப்டார்கள், வலியை ஒத்த சமிக்ஞைகளை நமது மூளைக்கு அனுப்பி எண்டார்பின் உற்பத்தியை தூண்டுகிறது.
செரோடோனின்
செரோடோனின்(Serotonin) பற்றாக்குறையால் எரிச்சல், மன அழுத்தம் ஏற்படலாம். செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நல்ல மன நிலையை பெற முடியும்.
எப்படி செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்?
நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். நமக்கு நடக்கும் கெடுதல்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருந்துவதை விடுத்து, கடந்த காலங்களில் நடந்த நல்ல நிகழ்வுகளை அசைபோடுவது அல்லது நிகழ்காலத்தில் கிடைக்கும் மகிழ்ச்சித் தருணங்களுக்கு நன்றி செலுத்துவது போன்ற நேர்மறையான எண்ணங்கள் நம் மூளையில் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெட்டவெளியில் தோலில் சூரிய ஒளி படுமாறு நிற்பதால், உடலுக்கு கிடைக்கும் ‘டி’ வைட்டமின் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரியும் என்கிறது அறிவியல். இதனால்தான் மனம் சோர்வாக இருக்கும்போது வெளியில் சென்றால் நம் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.
கடுமையான பயிற்சிகள் எப்படி எண்டார்பின் உற்பத்திக்குத் தேவைப்படுவதைப்போல ஏரோபிக் பயிற்சிகள் போன்ற மிதமான உடற்பயிற்சிகள் செரோட்டோனின் உற்பத்தியைத் தூண்டுவதோடு பயிற்சிக்குப்பிறகும் மன அமைதி நீடித்து இருக்கும்.
டோபமைன்
எப்படி டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கலாம்?
அவ்வப்போது எளிதில் அடையக்கூடிய சின்னச்சின்ன இலக்குகளை வகுத்துக்கொள்வது, டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். உடற்பயிற்சிகள் செய்வதால் செரோடோனினுடன் டோபமைன் அளவுகளும் உயரும். இலக்கை அடைவதோடு டோபமைன் தொடர்புடையதாக இருப்பதால் மூளை விளையாட்டுக்களை தொலைவு அல்லது கால இலக்குகள் நிர்ணயித்து விளையாடும்போது டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
ஆக்சிடோசின்
‘காதல் ஹார்மோன்’ என்ற பெருமையைப் பெற்ற ஆக்சிடோசின்(Oxytocin) ஹார்மோன் உடல் தொடர்பின் மூலமாக வெளிப்படுகிறது. ஹைபோதலாமஸால் மூலம் உற்பத்தியாகும் ஆக்சிடோசின் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி மூலம் சுரக்கிறது. உறவில் நீடித்த அன்பையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள ஆக்சிடோசின் முக்கியம்.
இந்த ஹார்மோன் பிரசவத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதோடு, ஆண் இனப்பெருக்கத்துடனும் தொடர்புடையது. பிரசவ வலியில் இருக்கும் பெண்களுக்கு கருப்பை தசைகளை சுருங்கச்செய்து பிரசவ வலியைத் தூண்டச் செய்கிறது. குழந்தை பிறந்தபின் தாய்ப்பாலை சுரக்கச் செய்வதும் இந்த ஆக்சிடோசினின் வேலை. இதனால்தான் பிறந்த குழந்தையை தாயின் மார்போடு அணைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்
மருத்துவர்கள்.
ஆக்சிடோசினை எப்படி அதிகரிக்கச் செய்யலாம்?
தசைகளுக்கு மசாஜ் செய்வது உடல் தளர்விற்கு உதவுவதோடு நம் உடலமைப்பில் ஒரு நீடித்த நல் உணர்வை கொடுக்கக்கூடிய ஆக்சிடோசினை அதிகரிக்கவும் செய்கிறது. இருக்கவே இருக்கு ‘கட்டிப்பிடி வைத்தியம்’. குடும்பத்தில் பிள்ளைகள், மனைவி, கணவன் மட்டுமில்லை நண்பர்களையும் அப்பப்போ கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். அவர்களையும் சந்தோஷப்படுத்தி, நாமும் சந்தோஷமடையலாமே. ‘ஆக்சிடோசின்’ உறவுப்பாலத்தை வலிமையாக்கும் பொக்கிஷம் என்பதை மறந்துவிடாதீர்கள்!
நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்
ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.
உணவு, பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல. விருந்தாகவோ, மருந்தாகவோகூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. உடலுக்குத் திறனை உருவாக்க உதவும். கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. ஆறிய கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாக இருந்தாலும், உணவும் நம் மனித வாழ்வின் அடித்தளம். எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இன்றைக்கு உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகிவிட்டது. கொஞ்சம் கவனமாக நம் பாரம்பர்ய உணவு விஷயங்களை, நவீன அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில், தலைவாழை இலையில், பச்சை கலர் மாத்திரைகள் பதினைந்தைப் போட்டு, வைட்டமின் சிரப் ஊற்றிப் பிசைந்து, வேண்டுமானால் தொட்டுக்கொள்ள லேகியம், தாகத்துக்கு கஷாயம் என உணவு வாழ்க்கை, தலைகீழாக மாறிவிடும். எனவே, காய், கனி, கீரைகளைக் காதலிப்போம். தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன் அலங்காரமாகச் செய்து ஆரவாரமாகப் பரிமாறிடுவோம்.
நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்... பார்க்கலாமா?
* கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
* நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது.
* இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும்.
* தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.
* நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.
* வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.
* ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்
ஹோரை
ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவான் என்பது சித்தர் வாக்கு. சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிருகப்பிரவேசம், வீடு குடித்தனம் செல்ல, சீமந்தம், பொருள் வாங்க விற்க, பெண் பார்ப்பது, பதவியேற்பது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல், இல்லற சம்பந்தமான காரியங்களை ஜாதகரின் லக்னத்திற்கு, ராசிக்கு அடுத்து சுபஹோரை என்கிற ஒருமணி நேரம் மிக முக்கியமானதாகும்.*
குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நல்ல ஹோரைகள் மற்ற சூரியன், செவ்வாய், சனி நல்ல ஹோரைகள் அல்ல. ஒவ்வொரு ஓரையில் என்ன என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
சூரிய ஓரை*
சுபகாரியங்கள் செய்ய மற்றும் புதிதாக எந்த அலுவல்களையோ செயல்களை இந்த சூரியன் ஓரை ஏற்றதல்ல. ஆனால் இந்த ஓரையில் உயில் சாசனம் எழுத, பெரியோர்கள் ஆசிபெற, மற்றவரின் சிபாரிசு பெற, மற்றவர்களிடம் ஆலோசனை பெற, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷங்களை மேற்கொள்ளச் சிறப்பானதாக இருக்கும். இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.
சந்திர ஓரை*
சந்திர ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் தொடர்புகொண்ட சுப விசேஷங்கள் மிகவும் ஏற்ற காலம் இது. இந்த ஓரைகளில் புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, வியாபார விஷயமாகவோ பிரயாணம் மேற்கொள்ளலாம், ஆன்மீக யாத்திரை செய்யலாம், பெண் பார்ப்பது மற்றும் திருமணம் விழாக்கள், சீமந்தம், மொட்டையடிப்பது, காது குத்துதல், வெளிநாடு செல்ல, பதவி ஏற்பது, பேச்சுவார்த்தை செய்யலாம், வேலை விண்ணப்பிப்பது, சேமிப்பு துவங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
செவ்வாய் ஓரை*
இந்த செவ்வாய் அசுப கிரகம், எல்லாக் கிழமையில் வரும் இந்த ஓரை எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. செவ்வாய் ஓரையானது யுத்தம், பொருள் அழிவு, நோய், விபத்து, ஆகியவற்றை உண்டாக்கும். இருப்பினும் இந்த ஓரையில் நிலம் வாங்குவது விற்பது பற்றிய பேச்சு வார்த்தை, ஒப்பந்தம் போடுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது, ஆயுதப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுத்தம் செய்யலாம். பல போர்கள் முற்காலத்தில் இந்த ஓரையில் செய்வார்கள். செவ்வாய் பெரிய அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தைப் பிரயோகம் செய்து சமாதான கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இந்த ஓரையில் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, முருகரை அம்பாளை வழிபடலாம். இந்த ஓரை நேரத்தில் பொருள்கள்
காணாமல் போனால் சீக்கிரம் முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.
புதன் ஓரை*
புதன் என்றவுடன் அனைவரும் புத்தி என்று தெரியும். இந்த ஓரையில் புத்தியைப் பலப்படுத்தும் கல்வி சேர்க்கை, தகவல் தொடர்பு, நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம், ஜோதிடம் பார்க்க மற்றும் பேச, கதை கட்டுரைகள் மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும், நற்காரியங்கள் ஆரம்பிக்க, வாங்கி சேமிப்பு, வழக்குப் பதிவு ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம் ஆகும். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஓரையில் காணாமல்போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும். திருமணம் விஷயமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.
குரு ஓரை*
குரு ஓரையில் தொடங்கும் எல்லாவித நற்காரியம் முக்கிய வெற்றியில் முடியும், நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் சந்தோஷம் ஏற்படுத்தும். இந்த ஓரையில் எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், திருமணம், குரு உபதேசம் ஆசீர்வாதம் பெற, புது வேலைக்குச் சேர, வியாபாரம், மருத்துவம் பார்க்க, விவசாயம் செய்ய நல்லது. ஆடை மற்றும் பொருள்கள் வாங்கவும், தங்கம் வாங்க, சட்டத்திற்கும் ஏற்ற காரியங்கள், வீடு மனை வாங்கச் சரியான முழு சுப ஓரை ஆகும். இந்த நேரத்தில் காணாமல்போன பொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் உடனே கிடைத்துவிடும்.
சுக்கிர ஓரை*
சுக்கிர என்பவன் போகக் காரகன் அதனால் ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தேவையான அடுக்குமாடி அல்லது கட்டிய வீடு, புது வாகனம், ஆடை, வெள்ளி ஆபரணம் மற்றும் வீட்டிற்கு வேண்டிய அலங்கார பொருள்கள், நட்பு, காதல் புரிவதற்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள், பெண்கள் தொடர்பான சகல காரியங்களிலும், விவசாயத்திற்கும், பயணங்கள் செய்ய, பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்கு மிக முக்கிய ஓரையாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
சனி ஓரை*
இது ஒரு அசுப கிரக ஓரை அதனால் இந்த ஓரையில் தான் சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும். எந்தவித சுபகாரியங்களும், அறுவைச்சிகிச்சை செய்தல் மற்றும் புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் பொருள் சேர்க்கை பற்றிப் பேசவோ, கடனை அடைப்பதற்கு முயற்சியோ, பழைய வீடு, வாகனம் மற்றும் இயந்திரம் வாங்க, பூர்வ ஜென்ம பாவம் தீர்க்க, உழைப்பு பற்றிய பேச்சு வார்த்தையோ, சட்டப்பூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ, மரம் செடி நடுதல், நடைப்பயணம் துவங்க நல்லது. இந்த ஓரையில் காணாமல்போன பொருள் கிடைக்காது கிடைத்தாலும் பல வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். சனிக்கிழமை அன்று சந்திர ஓரை தவற்றை ஏற்படுத்தும்…..
ஜோதிடர்களுக்கு ஹோரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிடவே முடியும். இன்னும் ஓரை பற்றிச் சொல்லவேண்டுமானால் வெள்ளிக்கிழமை, குரு ஹோரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. சிலநேரங்களில் ஹோரை தோஷத்தினால் பாதிப்பு ஏற்படும். நம்மை அறியாமலே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும் அதற்கேற்ப முற்காலத்தில் “கட்டளைக் கலித்துறையில்” எந்தெந்த ஓரையில் பிறந்தால் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஹோரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்துவைத்துச் செயல்பட்டால் நல்லது. ஒருவருக்கு இந்த சுப ஹோரைகள் மிக மோசமான தசை, புத்தி காலத்திலும் நமக்கு உதவ முற்படும், இதனால் நற்பலனையும் மற்றும் சந்தோஷத்தையும், அள்ளித்தரும் என்பது முன்னோர்கள் வாக்கு
எந்த திதியில் எந்த வேலை செய்யலாம் ?
பிரதமை் திதிக்கு அதிபதி அக்னி பகவான்.உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல்,போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும் நல்லது.
துதியை திதிக்கு அதிபதி துவஷ்டா தேவதை.விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், வீடு கட்டுதல் நல்லது.
திருதியை திதிக்கு அதிபதி பார்வதி.வீடு கட்டுதல், கிரஹ பிரவேசம்,பெண் பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும்.
சதுர்த்தி திதியின் அதிபதி விநாயகர். வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்ய ஏற்ற திதி. சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் அது பின்னமாகும், ஆனால் சங்கடகர சதுர்த்தியும் ,ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதியும் இதற்கு விதி விலக்கு.
பஞ்சமி திதியின் அதிபதி சர்ப்பம். இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் என்பதால்,அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம்.
சஷ்டி திதியின் அதிபதி முருகன். வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நல்லது.
சப்தமி திதியின் அதிபதி சூரியன்.வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது.
அஷ்டமி திதியின் அதிபதி சிவபெருமான்.யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது.
நவமி திதியின் அதிபதி பாராசக்தி.பகைவரை சிறைபிடிக்க, பகைவரை அழிக்க உகந்தது.
தசமி திதியின் அதிபதி ஆதிசேஷன்.தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம் செய்ய உகந்தது இந்த திதி.
ஏகாதசி திதியின் அதிபதி தர்ம தேவதை.பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதியில்,விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்.
துவாதசி திதியின் அதிபதி விஷ்ணு.சுபசெலவுகள், தர்ம காரியம், அனைத்தும் செய்யலாம். திருவோணம் இணையும் துவாதசி மட்டும் விதி விலக்கு.
திரயோதசி திதியின் அதிபதி மன்மதன்.அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி செய்யலாம். நீண்ட கால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிகாரம் செய்ய உகந்த திதி ஆகும்.
சதுர்தசி திதியின் அதிபதி கலிபுருஷன்.பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை செல்ல உகந்தது.
வளர்பிறையில் நாராயணனை வணங்கி வர வேண்டும்.
தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்.
வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண்டும்.
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்ய வேண்டும்.
பௌர்ணமியில் செய்ய கடவுள் வழிபாடு மட்டும் செய்யலாம். யாகம் , மங்களகரமான காரியம், விருத்தி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.