jaga flash news

Saturday, 24 October 2020

ஜனன ஜாதகத்தையும் கோச்சாரத்தையும் ஒப்பிட்டு தாரா பலன் அறிதல்

ஜனன ஜாதகத்தையும் கோச்சாரத்தையும் ஒப்பிட்டு தாரா பலன் அறிதல்.

ஒரு ஜாதகன் ஜெனித்த நட்சத்திரமும் அந்த நட்சத்திர நாதனின் ஏனைய இரண்டு நட்சத்திரங்கள் உட்பட்ட மூன்று நட்சத்திரமும் ஜென்ம தாரை ஆகும். (ஜென்ம நட்சத்திர நாதன்) ஜென்ம தாரையில் மனக்குழப்பமும் தொழில் தொடங்கினால் குழப்பமும் தரும் என்பதால் ஜென்ம தாரை சுபகாரியம் செய்யலாகாது. 

உதாரணம்: ஜாதகர் அஸ்வினி நட்சத்திரம் எனின் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று கேதுவின் நட்சத்திரமும் ஜாதகரிற்கு ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

ஜென்ம நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பந்து தாரை ஆகும். (சம்பந்து நாதன்) அந்த நட்சத்திர நாதனின் ஏனைய நட்சத்திரங்கள் உட்பட மூன்றும் சம்பந்து தாரைகளாகும். சம்பந்து தாரை நாட்களில்  தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம். இந்த நாட்களில் செய்யும் காரியங்கள் நல்ல பலன்களை தரும். 

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் ஆகிய சுக்கிரனின் மூன்று நட்சத்திரமும் சம்பந்து தாரைகளாகும்.

ஜென்ம நட்சத்திரத்திற்கு மூன்றாவது நட்சத்திரமும் நட்சத்திர நாதனின் ஏனைய இரண்டும் உட்பட மூன்று நட்சத்திரமும் விபத்து தாரை ஆகும்.(விபத்து நாதன்) இது  தவிர்க்கப்பட வேண்டிய தாரையாகும்.
சுப காரியங்கள், தூர பயணங்கள் தவிர்ப்பது நல்லது.

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் விபத்து தாரை கருதப்படுகிறது. 

ஜென்ம நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரமும் நட்சத்திர நாதனின் ஏனைய இரண்டும் ஷேம தாரை எனப்படும். (ஷேம நாதன்) இந்த ஷேம தாரை நன்மை தரக்கூடியது. சுபகாரியம் செய்ய உகந்த காலம்.

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் நான்காவது நட்சத்திரமான ரோகிணி,அஸ்தம்,திருவோணம் ஷேம தாரை ஆகும்.

ஜென்ம நட்சத்திற்கு ஐந்தாவது நட்சத்திரமும் நட்சத்திர நாதனின் ஏனைய நட்சத்திரங்கள் உட்பட மூன்றும் பிரத்யக தாரை. (பிரத்யக நாதன்) இந்த பிரத்ய தாரை வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும். சுபகாரியம் செய்யலாகாது.

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் ஐந்தாவது நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை,அவிட்டம் பிரத்ய தாரை கருதப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரத்தின் ஆறாவது நட்சத்திரமும் ஏனைய இரண்டு நட்சத்திரம் அடங்கலாக மூன்றும் சாதக தாரை ஆகின்றன. (சாதக நாதன்) புதிய முயற்சி, செயல்களுக்கு
சாதகமானது. எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் ஆறாவது நட்சத்திரமான திருவாதிரை,சுவாதி,சதயம் சாதக தாரையாக கருதப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரத்தின் ஏழாவது தாரையும் நட்சத்திராதிபதியின் ஏனைய இரு நட்சத்திரம் உட்பட மூன்றும் வதை தாரை ஆகும். (வதை நாதன்) கடுமையான தீமை தரக்கூடியது, வாக்கு பண்ண கூடாத நாட்கள். 

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் ஏழாவது நட்சத்திரமான புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி வதை தாரையாக கருதப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரமும் இனைய இரண்டும் உட்பட மூன்றும் மைத்ர தாரை  ஆகும். மைத்ர நாதன் புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது. எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் எட்டாவது நட்சத்திரமான பூசம்,அனுஷம், உத்திரட்டாதி மைத்ர தாரையாக கருதப்படுகிறது.

ஜென்ம நட்சத்திரத்திற்கு ஓன்பதாவதும் ஏனைய இரண்டும் உட்பட மூன்றும் பரம மைத்ர தாரை ஆகும். (பரம மைத்ர நாதன்)  அதி நட்பு நாள், அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கருதுவர்.

உதாரணம்: அஸ்வினி நட்சத்திரத்தின் ஓன்பதாவது நட்சத்திரமான ஆயில்யம்,கேகருதப்படுகிறது மைத்ர தாரையாக கருதப்படுகிறது.

கோச்சார சந்திர பலன் கணிப்பது.
ஜென்ம ராசிக்கு கோச்சார சந்திரன் நிற்கும் இடத்தின் நட்பு பலனை மையமாகக் கொண்டும், ராசி நாதனுக்கும்  கோச்சார ராசி நாதனுக்குமான தொடர்பை கொண்டு கணிப்பிடப்பட வேண்டும். லக்னத்தையும் வைத்து கணிப்பிட்டால் தினசரி பலனை கணிக்க இலகுவாக இருக்கும். கோச்சாரத்தில் உள்ள ஏனைய கிரக நிலவரங்களையும் ஆராய்ந்து பலன் காண வேண்டும்.

ராசியில் - சுறுசுறுப்பாக இருக்கும், மனகவலை, எண்ணங்கள் அதிகரிக்கும்.

ராசிக்கு 2ல் - தனவிரயம், செலவு, குடும்பத்தில் பிரச்சினை, காரிய தடை

ராசிக்கு 3ல் - முகப்பொலிவு, மகிழ்ச்சி, லாபம், வெற்றி உண்டு.

ராசிக்கு 4ல் - விரோயம், வியாதி, நீரினால் பிரச்சினை, அவநம்பிக்கை ஓங்கும், தனவிரயம்.

ராசிக்கு 5ல் - காரிய விரயம், இழப்பு, சஞ்சல நாள்.

ராசிக்கு 6ல் - மகிழ்ச்சி, தனலாபம், எதிரிகளை வெல்லலாம், மருந்து உண்ண ஏற்ற நாள், வியாதி குணமாகும்.

ராசிக்கு 7ல் - தனலாபம், நிம்மதி, அயன சயன போக சுகம் கிடைக்கும்.

ராசிக்கு 8ல் - சந்திராஷ்டமம், விஷகண்டம், கவலை, பிரச்சினை வருவது,வியாதி தாக்கும், பயண நஷ்டம்.

ராசிக்கு 9ல் - அச்சம், வியாதி வளர்வது, காரிய தடை

ராசிக்கு 10ல் - தொழில் வெற்றி, முயற்சி உண்டான பலன், சந்தோஷம், சுகம்படும் நாள்.

ராசிக்கு 11ல் - தனலாபம், வெற்றி, வருவிய் கிடைக்கும் நாள், தடைப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு தேடினால் கிடைக்கும்.

ராசிக்கு 12ல் - காரிய தடையும் தன நஷ்டமும் துன்பமும் வரும் நாள்.

தாரையையும் கோச்சாரத்தையும் சரியாக கணிப்பிட்டு ஒரு காரியத்தில் இறங்கினால் வெற்றி கிட்டும். 


No comments:

Post a Comment