jaga flash news
Monday, 19 October 2020
தேங்காய் சகுணம்
தேங்காய் சகுணம்:- ----------------------------------- (1) தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும் (2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும். (3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும். (4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும். (5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும். (6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் & பொருள் இழப்பு ஏற்படும். (7) நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும். (8) முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம். (9) முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும். (10) சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் உண்டாகும். (11) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும். - மஹா மந்திர போதிணி நூலில் இருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment