jaga flash news

Saturday, 24 October 2020

திதி சூன்யமும்

திதி சூன்யமும் விதிவிலக்கும்

குழுவினர் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

கடந்த சில நாட்களாக பல வாசகர்களினதும் ஜோதிட ஆர்வாளர்களதும் கேள்வியாக இருந்தது தான் இந்த திதி சூன்யம். 

திதியை மையமாகக் கொண்டு கணிப்பிடப்படும் திதி சூன்யம் ராசியையும் ராசி நாதனையும் வைத்து கணிப்பிடபடுகிறது. 

திதிகளும் சூன்ய ராசிகளும் ராசி நாதனும்

பிரதமை திதியில் மகரம், துலா ராசி சூன்யமடையும் ராசி நாதனான சனி, சுக்கிரன் சூன்ய கிரகமும் ஆவார்.

துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசியான தனுசு, மீனம் ராசி நாதன் குரு சூன்ய கிரகமும் ஆவார்.

திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசிகான மகரம், சிம்மம் சூன்ய கிரகம் சனி, சூரியன் ஆவார்கள்.

சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசியாக கும்பம், ரிஷபம், உள்ளது. சனி, சுக்கிரன் சூன்ய கிரகமாவார்.

பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி மிதுனம், கன்னி சூன்ய கிரகம் புதன் ஆகும்.

சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் ஆகும். சூன்ய நாதர்களாக செவ்வாய், சூரியன் உள்ளனர்

சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசியான தனுசு, கடகம் ஆகும். குரு, சந்திரன் சூன்ய நாதனுமாவர்.

அஷ்டமி திதியில் மிதுனம், கன்னி சூன்யமாகும். புதன் சூன்ய கிரகமும் ஆகும்.

நவமி திதியில் சிம்மம், விருச்சிகம்,  சூன்யமாக சூரியன், செவ்வாய் சூன்ய நாதர்களாவர்

தசமி திதியில் சூன்யம் பெறும் ராசியாக சிம்மம், விருச்சிகம் உள்ளது. சூரியன், செவ்வாய் சூன்யநாதர்.

ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசிகளாக தனுசு, மீனம் உள்ளது. சூன்ய நாதன் குரு.

துவாதசி திதியில் மகரம், துலாமும் சூன்யமடையும். சனி, சுக்கிரன் சூன்ய கிரகமாவர்.

திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசியாக ரிஷபம், சிம்மம் இருக்கின்றன. சுக்கிரன், சூரியன் சூன்ய கிரகமுமாவர்.

சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசிகளாக மிதுனம், கன்னி உள்ளது. புதன் சூன்ய நாதரும் ஆவார்.

அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை. 

இத்தகைய சூன்ய தோஷத்தை போக்கும் திதி சூன்ய விதி விலக்குகள்.

* திதிசூன்யம் தோஷம் பெற்ற ராசிகளில் ராகு ,கேது இருப்பது அல்லது திதிசூன்ய தோசம் பெற்ற கிரகங்கள் ராகு கேதுவுடன் இணைவு அல்லது சாரத்தில் இருப்பது தோஷபங்கமாகும்.

* திதிசூன்ய ராசிகள் லக்ன ராசிக்கு 6,8,12 ஆக வருவோ, சூன்ய ராசிகளில் லக்ன ராசிக்கு 6,8,12 ஆம் அதிபதி இருப்பது தோஷபங்கமடையும்.

* திதிசூன்ய தோசம் பெற்ற கிரகங்கள் லக்ன ராசிகளின் 6,8,12 ஆம் அதிபதி நட்சத்திர சாரங்களில் இருப்பது.

* திதிசூன்ய ராசிகளில் இயற்கை பாவிகள் இருப்பதும் நல்லது. 

* திதிசூன்ய தோஷமடைந்த கிரகங்கள் வக்கிரம், அஸ்தங்கமடைவது தோஷ நிவர்த்தி.

திதி சூன்ய பரிகார தெய்வங்களும் நித்தியா தேவிகளும்

சுக்கிலபட்சம்
1. பிரதமை - குபேரன் - ஸ்ரீ காமேஸ்வரி
2. துதியை - பிரம்மா - ஸ்ரீ பகமாலினி
3. திரிதியை - சிவனும் பார்வதியும் - ஸ்ரீ நித்யக்லின்னா
4. சதுர்த்தி - எமன், விநாயகர் - ஸ்ரீ பேருண்டா
5. பஞ்சமி - திரிபுரசுந்தரி - ஸ்ரீ வஹ்னி
6. சஷ்டி - செவ்வாய் - ஸ்ரீ வஜ்ரேஸ்வரி
7. சப்தமி - ரிஷி, இந்திரன் - ஸ்ரீ சிவதூதி
8. அஷ்டமி - காலபைரவர் - ஸ்ரீ த்வரிதா
9. நவமி - சரஸ்வதி - ஸ்ரீ லஸீந்தரி
10. தசமி - வீரபத்திரர், தர்ம தேவன் - ஸ்ரீ நித்யா
11. ஏகாதசி - மகா ருத்ரன், மகாவிஷ்ணு - ஶ்ரீநீலபதாகா 
12. துவாதசி - மகா விஷ்ணு - ஸ்ரீ விஜயா
13. திரயோதசி - மன்மதன் - ஸ்ரீ ஸர்வமங்களா
14. சதுர்த்தசி - காளி - ஶ்ரீஜ்வாலாமாலினி

கிருஷ்ணபட்சம் 
1. பிரதமை - துர்க்கை - ஸ்ரீ சித்ரா
2. துவதியை - வாயு - ஸ்ரீ ஜ்வாலாமாலினி
3. திரிதியை - அக்னி - ஸ்ரீ ஸர்வமங்களா
4. சதுர்த்தி - எமன், விநாயகர் - ஸ்ரீ விஜயா
5. பஞ்சமி - நாகதேவதை - ஸ்ரீ நீலபாதகா
6. சஷ்டி - முருகன் - ஸ்ரீ நித்யா
7. சப்தமி - சூரியன் - ஸ்ரீ லஸீந்தரி
8. அஷ்டமி - பைரவர் - ஸ்ரீ த்வரிதா
9. நவமி - சரஸ்வதி - ஸ்ரீ சிவதூதி
10. தசமி - எமன் - ஸ்ரீ வஜ்ரச்வேரி
11. ஏகாதசி - மகாருத்ரன், மகாவிஷ்ணு - ஸ்ரீ வாஹ்னி
12. துவாதசி - சுக்ரன் - ஸ்ரீ பேருண்டா
13. திரயோதசி - நந்தி - ஸ்ரீ நித்தியக்லின்னா
14. சதுர்த்தசி - ருத்ரர் - ஸ்ரீ பகமாலினி

இத்தகைய திதி சூன்ய கணிதங்கள் புராண காலத்தில் கணிக்கப்படவில்லை. 

அஷ்டமியில் பிறந்த கிருஷ்ணனிற்கு கன்னியில் புதன் உச்சமாய் தனித்து இருந்தது. 

நவமியில் பிறந்த ராமரிற்கு சிம்மமும் விருச்சிகத்திலும் கிரகமில்லை. இருந்தாலும் அரசனை ஏறுவதற்கு சிம்ம பாவகம் முக்கியம். பல தடைகளை கடந்த அரியணை ஏறினார். இங்கு அவர் அடைந்த அத்தனை பிரச்சினைக்கும் முக்கிய காரணம் சூரியனையும் லக்னத்தையும் உச்ச சனி செவ்வாய் பார்வை செய்தமையே தவிர திதி சூன்யமல்ல.
திதி சூன்யத்தை பெரிதாக கருத வேண்டாம்.


No comments:

Post a Comment