jaga flash news

Saturday, 24 October 2020

சூரியன்_சுக்கிரன்_சேர்க்கை

#சூரியன்_சுக்கிரன்_சேர்க்கை

அதிகாரம், தலைமைத்துவம், நிர்வாகம், தந்தை, தலைவர், புகழ், வலது கண், அரசியல், பதவி ஆகியவற்றிற்கு சூரியன் காரகத்துவம் வகிக்கின்றார்.

மனைவி, ஆடம்பரம், போக சுகம், கவர்ச்சி, கலை, வாத்தியம், நடனம் என பல ரசனைகளுக்கு சுக்கிரன் காரக வகிக்கின்றார். 

இவ் இருக்கிரகங்களும் 75% வீதமானோர்களுக்கு இணைந்தே காணப்படுகின்றன. 

சூரியனுடன் மிக நெருங்கி அல்லது சிம்மத்தில் சுக்கிரன் அமர்ந்த ஜாதகர்கள் ஆடம்பர பிரியர்களாகவும் சொகுசு பிரியர்களாகவுமே உள்ளனர். அழகிய கவர்ச்சியான கண்கள், மனைவியின் தலைமை, மனைவியின் அதிகாரம், நிர்வாக திறமை, ஆடம்பர போகம், பொன் பெண் பொருள் மோகம் அதிகம். 

பலம் பெற்ற சூரியனுடன் சுக்கிரன் இருப்பது அரசியல் பிரவேசமும் ஆடம்பரத்தை அனுபவிப்பதுடன் எல்லா வித சந்தோஷங்களையும் ஜாதகர்  அனுபவிப்பார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது. மனைவியை (பெண்களை) அடிமையாக நடாத்துவர். 

பலம் பெற்ற சுக்கிரனுடன் சூரியன் இணைவது மனைவி வழியில் சுக போகங்களை ஜாதகர் அனுபவிப்பார். மனைவியின் தலைமை, நிர்வாகம், மனைவிக்கு பணிந்து நடக்கும் நிலைமை உருவாகும். ஜாதகர் மனைவியை நேசிப்பவராக இருப்பர். இதனால் மனைவியின் நிர்வாகத்தை மதிப்பவராகவும் இருப்பார். 

இச்சேர்க்கையில் சூரியனை சுக்கிரன் மிக நெருக்கி காணப்பட்டால் அதாவது அஸ்தங்கம் அடைவது களத்திர தோஷமாகக் கருதப்படும். திருமணம் தடைப்படுவது, திருமண வாழ்வில் நிம்மதி இல்லாத நிலை இருக்கும். 

சூரியனை மிகவும் நெருங்கியுள்ள சுக்கிரன் நீர்சத்தினை இழந்து ஆணின் வீரியத்தினை இல்லாது அல்லது இயக்க ஆற்றல் குறைந்து போகிறது. விந்தணு குறைபாடு, சுக்கிலத்தில் உயிர் அணுக்களை  இல்லாமை போன்ற பிரச்சினைகள் இருக்கும். 

பரிகாரம் : ஸ்ரீ ரங்கநாதரை சுக்கிர வாரத்தில் நெய்தீபம் இட்டு வழிபட வேண்டும். கற்கண்டு நெய்வேத்தியம் செய்யவும். 

No comments:

Post a Comment