jaga flash news

Saturday, 24 October 2020

சூரியன்_குரு_சேர்க்கையும்_சிவராஜ_யோகமும்

#சூரியன்_குரு_சேர்க்கையும்_சிவராஜ_யோகமும்

நவகிரகங்களின் முதன்மையானவரும் அதிக ஒளி பொருந்திய கிரகமான சூரிய பகவான் ஒரு ஜாதகரின் ஆளுமை திறன், தலைமைத்துவம், சுயகௌரவம் தந்தை மற்றும் ஒரு நாட்டின் அரசாங்கத்தை குறிகாட்டுபவர். மனித உடலின் இருதயம் மூளை கண் என முக்கிய உறுப்புகளிற்கும் அங்கம் வகிக்கின்றார். 

நவகிரகங்கள் பெரிய கிரகமும் பிரகாசமானவருமான பிரகஸ்பதி எனும் தேவர்களின் குருவான குரு பகவான் ஒருவரின் நன்னடத்தை தெய்வீக எண்ணம் அறிவு தனநிலை, குழந்தைகள் என அனைத்து விதமான புறசந்தோஷங்களுக்கும் காரகம் வகிக்கிறார். 

இப்படி ஒளி பொருந்திய சூரியனும் பிரகாச மிகுந்த குரு பகவானும் ராசிக்கட்டத்தில் சேர்க்கை பெற்று அல்லது  சமசப்தமாக அமர்ந்து அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணமாக அமர்ந்து, ஆட்சி உச்ச சம நட்பு வீடுகளில் நிற்கும் போது அதி உன்னதமான பலன்களை தருகின்றது.

அரசனை குறிக்கும் சூரியன் சிவனையும், தனத்திற்கு காரகரான குரு தட்சிணாமூர்த்தியாக விளங்கும் சிவனையும் குறித்து நிற்பதால் இவ்வமைப்பு #சிவராஜ_யோகம் என்று குறிப்பிடபடுகிறது.

இத்தகைய அமைப்பை பாப கிரகங்கள் தொடர்புபடாத பட்சத்தில் இந்த அமைப்பால் அதிக நல்ல பலன்களை செய்யும். 

இச்சேர்க்கையுள்ளோர் சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பார்கள். எந்நேரமும் கையில் தனம் புரளும். சமூகத்தினரால் மதிக்கப்படுபவராகவும் நினைத்ததை தெய்வ அருளால் அடையும் நிலையும் இருக்கும். சிவன் மீது பக்தி கொண்டு ஆன்மீக சேவை செய்வது ஜாதகரின் இயல்பாக இருக்கும். கை ராசி முகராசி காரர்கள் என்றே சொல்லலாம். 



No comments:

Post a Comment