jaga flash news

Friday, 23 October 2020

நட்சத்திரங்களின் தோற்ற அமைப்பு


நட்சத்திரங்களின் தோற்ற அமைப்பு 

வானத்தில் அமைந்துள்ள நட்சத்திரங்களின் தோற்றத்தை சோதிட அறிஞர்கள் பல்வேறு வகையாக ஆராய்ந்து அவற்றின் தன்மை , தோற்றம் , ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உருவங்களாக அமைத்திருக்கிறார்கள் . இந்த உருவத் தோற்றம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது . 

அந்த விவரத்தை இப்பொழுது காண்போம் . 

விண்வெளியில் நட்சத்திரங்கள் அனைத்தும் கூட்டமாக இருக்கின்றன . அவற்றின் உருவ அமைப்பு ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக உள்ளன .

1.அசுவனி , மூன்று நட்சத்திரங்களுடன் குதிரைத் தலை போல இருக்கும் . 

2.பரணி மூன்று நட்சத்திரங்களுடன் கல் அடுப்புப் போல காட்சி தரும் . 

3.கார்த்திகை ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து சுற்றி , தீபம் போல காட்சி தரும் . 

4.ரோகிணி ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து சகடம் போல தோன்றும் .

5.மிருகசீரிடம் மூன்று நட்சத்திரங்கள் கூடி தேங்காய்க் கண் அல்லது மான் தலை போல காட்சி தரும்.

6.திருவாதிரை ஒரே ஒரு நட்சத்திரம் இரத்தினம் போல ஜொலிக்கும்

7.புனர்பூசம் ஐந்து நட்சத்திரங்கள் கூடி வில் , ஓடம் போல காட்சி தரும்

8.பூசம் மூன்று நட்சத்திரங்கள் இணைந்து புடலம் பூ போல தோற்றமளிக்கும்

9.ஆயில்யம் ஆறு நட்சத்திரங்கள் கூடி அம்மி அல்லது குயவன் சக்கரம் போல இருக்கும் . 

10.மகம் ஐந்து நட்சத்திரங்கள் வீடு போல கூடியிருக்கும் . 

11.பூரம் நான்கு நட்சத்திரங்கள் கட்டிலின் கால் போல இருக்கும் .
 
12.உத்திரம் நான்கு நட்சத்திரங்கள் கட்டிலின் கால் போல் அல்லது யானைக் கொம்பு போல் காட்சி தரும் . 

13.அஸ்தம் ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து கை தோற்றமளிகும் .

14.சித்திரை ஒரே ஒரு நட்சத்திரம் . முத்து அல்லது புலிக் கண் போல் இருக்கும் . 

15.சுவாதி ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் . மணி அல்லது பவளம் போல மின்னும் . 

16.விசாகம் ஐந்து நட்சத்திரங்கள் தோரணம் போல் காட்சி தரும் .

17.அனுஷம் நான்கு நட்சத்திரங்கள் கையில் பிடித்துள்ள குடை போல இருக்கும் . 

18.கேட்டை மூன்று நட்சத்திரங்கள் மோதிரம் போல இருக்கும் . 

19.மூலம் பதினொரு நட்சத்திரங்கள் சிங்கம் பாய்வது போல காட்சி தரும்.

20.பூராடம் நான்கு நட்சத்திரங்கள் கட்டிலின் கால் போல் இருக்கும் . 

21.உத்திராடம் நான்கு நட்சத்திரங்கள் கூடி கட்டில் கால் போல் காட்சி தரும் . 

22.திருவோணம் மூன்று நட்சத்திரங்கள் முழக் கோல் போல் இருக்கும் . 

23.அவிட்டம் நான்கு நட்சத்திரங்கள் மிருதங்கம் போல் இருக்கும் .

24.சதயம் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பூங்கொத்து போல காட்சி தரும் . 

25.பூரட்டாதி நான்கு நட்சத்திரங்கள் ஒன்று கூடி கட்டிலின் கால் போல தோன்றும் . 

26.உத்திரட்டாதியும் நான்கு நட்சத்திரங்கள் ஒன்று கூடி கட்டிலின் கால் போலத் தோன்றும் . 

27.ரேவதி முப்பத்திரண்டு நட்சத்திரங்களும் சேர்ந்து ஓடம் போல இருக்கும் .



No comments:

Post a Comment