jaga flash news

Saturday, 24 October 2020

சன்னியாச , ஆன்மீகம் தரும் அமைப்பு

சன்னியாச அமைப்பும் ஆன்மீக ஈடுபாட்டை தரும் அமைப்பும்.

லக்ன ராசிகளிற்கு,
ஐந்தாம் இடம், பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். இந்த ஸ்தானம் தெய்வ பக்தியையும் ஆன்மீக செயற்பாடுகளையும் ஜாதகரின் எண்ணங்களையும் குலதெய்வம் பற்றியும் சொல்லும்.

ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் இஷ்ட தெய்வத்தையும் நாம் இந்த பிறவியில் சேர்த்த புண்ணிய பலன்களையும் சொல்லும்.

அதே போல கிரகங்களின் ஆன்மீகக்கிரகங்களாக கருதப்படும் குரு சனி கேது ஒருவரிற்கு ஒருவர் பரஸ்பர தொடர்பு கொள்ளும் போது ஆன்மீகத்தில் அளவுகடந்த ஈடுபாடு உண்டாகிறது.

குரு என்னும் இயற்கை சுபர் வேத நூல்களை கற்றறிந்து அதனால் ஆன்மீகத்தில் பிரவேசிக்கும். குரு பலம் பெற்றவர்களிடம் இந்த இயல்பு இருக்கும்.

சனி என்னும் இயற்கை பாபர் தன் கடமைகளை சரிவர செய்வதன் மூலம் ஆன்மீகத்தில் பிரவேசிக்கும். கடமையை செய் பலனை எதிர்பாராதே! - கீதையில் கிருஷ்ணன் கூறியதன் சூட்சுமம் இதுவே. தன் வறுமையினால் இறைவனை அடைய முற்படுவதும் சனி பலம் பெற்றவர்களே.

கேது எனும் சாயா கிரகம். தன் தன் கற்ற வேதத்தின் உதவி இன்றியும் கடமைகளின் உதவி இன்றியும் ஞானத்தினால் இறைவனை அடைய முற்படும். அனுபவ ஞானிகளாக இருப்பர்.

ஆன்மீக ராசியான தனுசு கும்பத்தில் குரு, சனி, கேது சேர்க்கைபட்டலோ, தொடர்புபட்டாலோ,

ஐந்து, ஒன்பது, பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தாலோ ஜாதகர் சன்னியாச போல வாழ்வார்.

இந்த ஸ்தானாதிபதியின் வலுவை பொறுத்து தான் இல்லறம் அமையும்.

3,5,9ம் பதி சேர்ந்து குரு சூரியன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றாலோ, சார தொடர்புபட்டாலோ ஒருவரிற்கு ஒருவர் 1,4,5,7,9 ஆக இருந்தாலும் ஜாதகர் சிவபக்தராக இருப்பார்.

ஐந்து ஓன்பதில் சூரியன் ஆட்சி உச்சமானாலோ நட்பு ராசியில் நின்றாலும் சிவபக்தராக இருப்பார்.

3,5,9ம் பதி சேர்ந்து குரு புதன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றாலோ, சார தொடர்புபட்டாலோ ஒருவரிற்கு ஒருவர் 1,4,5,7,9 ஆக இருந்தாலும் ஜாதகர் விஷ்ணு பக்தராக இருப்பார்.

ஐந்து ஓன்பதில் புதன் ஆட்சி உச்சமாகியோ நட்பு ராசியில் நின்றாலோ விஷ்ணு பக்தர்.

இந்த கிரகங்களுடன் சனி குரு கேது முதலான ஆன்மீக கிரகங்கள் தொடர்புபட்டால் சன்னியாசியாக வாழ்வார். இத்தகைய ஜாதகர்களின் களத்திர வாழ்க்கை தடைப்படுவது, தொழில் தடை என்று லௌகீக வாழ்க்கையில் ஈடுபட தடை பண்ணும்.

எந்த பாவகத்திலேனும் மூன்றுக்கு மேற்பட்ட கிரக இணைவு இருக்கும் பட்சத்தில் ஜாதகத்தை கவனமாக ஆராயப்பட வேண்டும்.

கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்க
கெதியுள்ள சந்நியாசி யோகம்
ஆளப்பா அத்தலத்தில் இருகோள் நிற்கில்
அப்பனே தபசியடா யோகிஞானி
கூளப்பா ஒரு கோளும் குணமாய் நிற்கில்
குவலயத்தில் புனிதனடா ஞானி யோகி
வீளப்பா விண்ணுலகத் தேவரோடு
விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே.
-புலிப்பாணி

பொருள்: லக்ன ராசிக்கு பத்தாமிடமான ஜீவகர்ம ஸ்தானத்தில் மூன்று கோள்கள் நின்றால் அந்த ஜாதகருக்கு சன்னியாசி யோகம் உண்டாகும். இரண்டு கிரகங்கள் நின்றால் ஞானியாகவும் யோகியாகவும் இருப்பார். ஒரு கிரகம் மட்டும் பலமுடன் இருப்பின் ஜாதகன் புனிதனாகவும் ஞானியாகவும் இருப்பான்.

No comments:

Post a Comment