jaga flash news

Saturday, 17 October 2020

மரணதத்துவமும் மோட்சமும்.....



               மரணதத்துவமும் மோட்சமும்.....

              வழக்கத்தில் நடக்கக்கூடிய விசியம் இது........

          அதாவது ஒருவர் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்யும் போது மழை வரும்.......

         அப்போது அங்குள்ளவர்கள் பேசிக்கொள்வார்கள் அது என்னவென்றால்.......

         "நல்ல மனுசன்யா இவரு"

    எத்தனை நல்லது பண்ணிருக்காரு" 

  "எத்தனை பேர வாழ வெச்சுருக்காரு" 

            "அவரு வாழ்கைல சாதிக்காத விசியமே இல்லை "
    
            அவருமாறி நல்லவர் இனி கிடைக்கறது கஷ்டம்" 

          நைரியா புண்ணியம் பண்ணிருக்காரு அதனால தான் சிவ சிவான்னு இந்த மழைல போய்ட்டாரு"

         மேற்குரிய விசியங்கள் அந்த புண்ணியவான் இறந்த பிறகு பேசிக்கொள்வார்கள்.....

        அதேபோல் அவர் கடந்தகாலத்தில் செய்த புண்ணியங்களை நினைவுப்படுத்தி பேசுவார்கள்......

         இதுவே மோட்சத்தை உணர்த்துகிறது........

         அதாவது இறந்த மனிதர் கர்மத்தின் அடிப்படையில்  எந்த நோக்கத்திற்காக இப்புவியில் பிறந்து அந்த கர்மத்தை கழித்தாரோ அவரது பிறந்தற்காக நோக்கத்தை நிறைவுசெய்து தனக்கென ஒரு அடையாளத்தை புண்ணியத்தின் மூலம் குறித்துவிட்டு விண்ணுலகிற்கு செல்வார்.........

         அதுவே இவரது மோட்சத்தை அந்த மழை உணர்த்துகிறது.......

        ஆனால் இந்த தருணம் எவருக்கும் அமைந்துவிடாது புண்ணியவான்களுக்கு மட்டுமே இது அமையப்பெரும்ங்க.........

        அன்றைய காலத்தில் பெரிய அரசர்கள், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் நலனை காத்து அவர்களை வாழவைத்த புண்ணியவான்கள் இறந்துவிட்டால் மழை வரும். இது பெரும்பாலும் நடக்கும்.......

        ஆனால் இன்று ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது ஏனென்றால் இங்கு அதர்மமும் பாவமும் சூழ்ந்துள்ள கலியுகம் அல்லவா?..........

        காலபுருஷ தத்துவப்படி மீனம் மோட்ச ஸ்தானத்தை குறிக்கும் அதேபோல் மரணத்தை உணர்த்துக்கூடிய ஸ்தானமும் கூட.........

       மீனம் நீர் ராசியாகும்  அதேபோல் இரண்டு கண்ங்களில் வரும் கண்ணீர் துளிகள் ஆகியவை குறிப்பதும் மீனமே. அதாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக கண்ணீர் விடும் தருணம் (அழுகை) மீனத்தை குறிக்கும்.........

      மீனத்திற்கு அதிபதி குருபகவான் ஆவார் அதாவது அவர் இறந்த பிறகு அவர் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் வைத்து மரணத்திற்கான அங்கீகாரத்தை தருவது குருபகவானே. அதனால் தான் அங்கே ஆட்சிபலம் பெருகிறார்.....

       மற்றொரு விசியம் என்னவென்றால் உயிர் காரகத்துவத்தை கொண்டவர் குருபகவான் அதனால் தான் அவரை ஜீவனகாரகன் என்று அழைக்கப்படுகிறார் அந்த ஜீவன் இயற்கை ஏய்தும் தருணத்தை 12ல் மறைவுபெற்று ஆட்சிபெற்ற குருபகவான் உணர்த்துகிறார்.......

       எந்த ஒரு மனிதன் இறந்தாலும் அது இயற்கை மரணமாக இருக்கவேண்டும் அவர் பாவமே செய்தாலும் அவர் செய்த புண்ணியங்கள் அங்கு பேசும் அதனால் தான் குருபகவான் சொந்த வீட்டில் சுயசாரம் (பூரட்டாதி) பெற்று ஆட்சிபலம் பெறுகிறார்........

         போதுவாக இறந்தவரின் உடல் மற்றும் கர்ம காரியம், மற்றும் கூட்டம் ஆகியவை குறிப்பது சனிபகவான் அதேநேரத்தில் கர்மபலனை கழப்பதையும் அதற்கான முடிவையும் குறிப்பவர் சனிபகவானே உடல் அடக்கம் மற்றும் இறந்த உடலில் உள்ள ஆன்மாவை பிரித்தெடுக்கும் அதிகாரம் சனிபகவானுக்கு மட்டுமே உண்டு அதேநேரத்தில் சனிபகவானின் அனுமதியில்லாமல் எமதூதர்கள் பூத உடலில் இருக்கும் ஆன்மாவை இழுத்துசெல்ல இயலாது அதனால் தான் சனிபகவானின் அங்கே சாரம் பெறுகிறார் (உத்திரட்டாதி).........

         நகைச்சுவைக்கு அதிபதியான அங்கே நீசம் பெறுகிறார் நீசம் பெற்ற புதன் அழுகையை குறிக்கும். இறந்த உடலின் ஒட்டுமொத்த இயக்கம் முடங்கும் அதாவது இறந்த உடலை என்ன செய்தாலும் அதற்கு வலிக்காது அதேநேரத்தில் அதனை அடக்கம் செய்தாலோ அல்லது எரித்தாலொ அதற்கு ஒன்றும் வலிக்காது ஆகாது இவைகள் எல்லாம் நீச புதன் குறிக்கிறார் அதேநேரத்தில் புண்ணியம் செய்த அந்த ஆன்மாவிற்கு முக்தியை தந்து பரமாத்மாவுடன் இணக்கம்பெறும் வேலையை புதனே செய்கிறார் அதனால் தான் அங்கே புதன் சாரம் பெறுகிறார் (ரேவதி)

          பொதுவாக அந்த புண்ணியவான் இறந்த பிறகு அந்த புண்ணிய ஆத்மா மோட்சத்தை நாடி விண்ணுலகை சென்றடையும் அப்போது அந்த மோட்சத்தை உணர்த்துவதற்காக இறந்தவர் வசித்த பகுதியில் மழைப்பெயும் அந்த மழையை குறிப்பவர் சுக்கிரன் ஏனென்றால் மழைக்கு அதிபதி சுக்கிரன் அல்லவா........

          அதேநேரத்தில் பொதுவாக இறப்பே ஒர் சுகம் தான் அதேநேரத்தில் கர்மங்கள் முடியபெற்று அந்த புண்ணிய ஆத்மா சுதந்திரமாக சொர்கத்தில் சுகம் காணப்பது அனைத்தும் சுக்கிரனை குறிக்கும் அதேநேரத்தில் சுதந்திரத்திற்கு அதிபதி சுக்கிரனே ஆதனால் அங்கே சுக்கிரன் உச்சம் அடைகிறார்........

            மேற்குரிய விசியங்கள் அனைத்தும் மரண சாஸ்திரம் எடுத்துரைக்கும் இதுவே மோட்சத்திற்கான தர்மமும் கூட........

       "தர்மம் தலைகாக்கும்" ஒருவன் செய்த தர்மம் அவனை தலைகாக்கும் என்பார்கள் அவன் அழிந்தாலும் அவன் செய்த தர்மம் அழியாது" "புண்ணியம் செய்தவனே புனிதன்" என்கிற வாக்கின் படி ஒருவன் செய்த புண்ணியமே அவனையும் அவனது ஆன்மாவையும் புனிதனாக்குகிறது......

         

No comments:

Post a Comment