jaga flash news

Saturday 12 October 2024

தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்..


தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்.. துண்டு பச்சை தேங்காய் போதுமே.. நீரிழிவு நோயாளி தேங்காய் சாப்பிடலாமா?
ஆரோக்கிய நன்மைகளையும், ஏராளமான சத்துக்களையும் தரும் தேங்காயை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? பச்சை தேங்காய் உடலுக்கு நல்லதா? யாரெல்லாம் பச்சை தேங்காய் சாப்பிடலாம்? தேங்காய் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.

தேங்காய்யில் வைட்டமின் C, E, B , தாதுக்களான இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் உணவு நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன.

coconut raw coconut diabetics
தெய்வத்துக்கே கேட்டிடுச்சு.. தேங்காய் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் 
"தெய்வத்துக்கே கேட்டிடுச்சு.. தேங்காய் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் "

பொட்டாசியம்: தேங்காயில் ஏராளமான பொட்டாசியம் உள்ளதால், உடலிலுள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.. மேலும், தேங்காயிலுள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், இதய ஆரோக்கியத்தை காக்கின்றன.

 
தினமும் 40-50 கிராம் பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில்லை. காரணம் தேங்காயிலுள்ள மாங்கனீசு, உடலிலுள்ள கால்சியத்தை முழுமையாக உறிஞ்சிக் கொள்ள உதவி செய்யும். இதனால், நாள் முழுவதும் ஆற்றலை தக்க வைத்திருக்கும்.

பச்சை தேங்காய்: தேங்காயில் உள்ள லாரிக் அமிலம், ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு நன்மை தரக்கூடியது.. பாக்டீரியா, வைரஸ்கள் பூஞ்சைகளுக்கு எதிராக போராடவும் உதவி செய்கிறது.. தேங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அல்சைமர் பாதிப்புகள் அண்டாது.. அனீமியா உள்ளவர்களுக்கு பச்சை தேங்காய்கள் வரப்பிரசாதம் எனலாம்.. இரும்புச்சத்து, தாமிரச்சத்துக்கள் தேங்காயில் உள்ளதால், உடலுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதுடன், ரத்த சிவப்பு அணுக்களையும் உடலில் அதிகரிக்க செய்கிறது.

 "தேங்காய்""

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு தேங்காய் பெஸ்ட் சான்ஸ்.. தேங்காய் சாப்பிடும்போது பசி கட்டுப்படுகிறது.. உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தேங்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் நிறைய உள்ளன.. தேங்காயை தவறாமல் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய்களின் அபாயத்தை தடுக்கும்..

சர்க்கரை நோயாளி: சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சாப்பிட்டால் , சர்க்கரை அதிகரித்துவிடுமோ என்ற ஒருவித பயம் இருக்கவே செய்கிறது.. தேங்காயில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் உள்ளன. கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், இன்னும் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், யாருமே தேங்காயை தவிர்க்கக்கூடாதாம்..


முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான நார்ச்சத்தும், கார்போஹைட்டுகளும்தான். இவை இரண்டுமே தேங்காயில் இருப்பதால், ரத்த சர்க்கரை அதிகரிப்பதும் தடுக்கப்படுகின்றன. ஆனால், தேங்காயிலிருந்து பால் எடுத்து சாப்பிடாமல், தேங்காயுடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.. ஆனால், எவ்வளவு தேங்காயை சாப்பிடுகிறோம் என்ற அளவுகோலும் சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியம்.

வெறும் தேங்காய்: 100 கிராம் தேங்காயில் 444 கலோரிகள் உள்ளன.. அதேபோல, 4.5 கிராம் புரோட்டீனும் நார்ச்சத்தும் உள்ளன.. இதுவே கொப்பரை தேங்காயில் 660 கலோரிகள் இருக்கின்றன, எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போல சமையலில் சேர்க்காமல், பொரியல்களில் துருவிப்போட்டு சாப்பிடலாம். வெறும் தேங்காயை அப்படியே சாப்பிட கூடாது.


No comments:

Post a Comment