jaga flash news

Wednesday 9 October 2024

curd making....

curd making
உறை மோர் இல்லாமல் கெட்டித் தயிர் செய்ய 3 வழிகள் இருக்கிறது. உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.


உங்கள் வீட்டில் தயிர் செய்ய உறை ஊற்றுவதற்கு உறை மோர் இல்லையே என்ன செய்யலாம் என்று யோசித்திக்கொண்டிருக்கிறீர்களா? கவலையே பட வேண்டாம். உங்களுக்காக கொஞ்சம்கூட உறை மோர் இல்லாமல் கெட்டித் தயிர் செய்வது எப்படி என்று கூறுகிறோம். உறை மோர் இல்லாமல் கெட்டித் தயிர் செய்ய 3 வழிகள் இருக்கிறது. உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.


நீங்கள் தயிர் செய்ய உள்ள பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பால் காய்ச்சுவதற்கு என்று தனியாக ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள்.

பாலில் கொஞ்சம்கூட தண்ணீர் கலக்காமல் அதற்கான ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, ஸ்டவ்வில் வைத்து பாலைக் காய்ச்சுங்கள். பாலை நன்றாகக் காய்ச்சுங்கள். ஆடை வராமல் நன்றாகக் கலக்கி விடுங்கள். ஸ்டவ்வை அளவான தீயில் வைத்து பால் நன்றாக திக் ஆகும் வரை, நுரை வரும் வரை காய்ச்சுங்கள். பால் நன்றாகக் கொதிக்கும்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள்.

அடுத்து, பாலை ஒரு மிதமான சூடு இருக்கும் விதமாக ஆர வைக்க வேண்டும். அதாவது, நாம் குடிக்கும் அளவைவிட சற்று குறைவான அளவு சூடாக இருக்க வேண்டு. பால் ஆறியவுடன், இப்போது கெட்டித் தயிர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உறை மோர் இல்லாமல் கெட்டித் தயிர் செய்ய 3 விதமாகன முறையில் உங்களுக்கு டிப்ஸ் தருகிறோம்.

ஒரு அகலமான தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 3 கப்களை (Bowl) எடுத்து வையுங்கள். 3 கப்களிலும் காய்ச்சி ஆர வைத்த பாலை சரி சமமாக ஊற்றுங்கள். இப்போது காம்பு கிள்ளாத 2 பச்சை மிளகாயை எடுத்து ஒரு கப்பில் போடுங்கள். இன்னொரு கப் பாலில், காம்பு கிள்ளாத 2 காய்ந்த மிளகாயை எடுத்து போடுங்கள். காய்ந்த மிளகாய் நன்றாக மூன்றாவது கப் பாலில், நீங்கள் என்ன போடப் போகிறீர்கள் என்றால், உங்களிடம் வெள்ளி கொலுசு அல்லது வெள்ளி கம்மல் ஏதாவது வெள்ளியில் பொருள் இருந்தால், அதை பாலில் போடுங்கள். இப்போது, மூன்று கப்களையும் நன்றாக மூடி வைத்துவிடுங்கள்.

இரவும் முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எடுத்துப் பாருங்கள், பாலில் உறை மோர் ஊற்றாமலே கெட்டித் தயிராக மாறியிருக்கும். அதாவது, ஒரு 5-6 மணி நேரத்திலேயே கெட்டித் தயிர் கிடைத்துவிடும்.

உங்கள் இனிமேல் உறை மோர் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த 3 முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, கெட்டித் தயிர் செய்யலாம். உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள்.


No comments:

Post a Comment