jaga flash news

Thursday, 31 October 2024

பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாத பொருள்கள்


இந்த 5 தப்பை தப்பித்தவறி செய்யாதீங்க.. வீட்டில் செய்ய வேண்டிய டாப் 5 விஷயம்.. மணி பிளான்ட் கவனியுங்க
தீபாவளி உட்பட எந்தவித பண்டிகைகளாக இருந்தாலும், அன்றைய தினங்களில் செய்யக்கூடாத சில செயல்களை முன்னோர்கள் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதேபோல வீட்டிலுள்ள சில பொருட்கள் குறித்தும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனை சுருக்கமாக பார்ப்போம்.


எப்போதுமே நாள், கிழமை என்றால், அன்றைய தினங்களில் மகாலட்சுமியின் வாசம் வீடு முழுவதும் பரவச்செய்ய வேண்டும். எனவே, வீட்டிலுள்ள சில பொருட்கள் வெளியே யாருக்கும் பரிசாக தரக்கூடாது.. அதேபோல, பிறரிடமிருந்து சில பொருட்களை வீட்டுக்குள் பரிசாக பெற்று வரக்கூடாது.


அந்தவகையில், இதற்கு உலர்ந்த பழங்கள், இனிப்புகள், உடைகள், அழகான அலங்கார பொருட்கள், பானைகள், பாத்திரங்கள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தாராளமாக பிறருக்கு பரிசாக வழங்கலாம்.

ஆனால், பண்டிகை நாட்களில் வாட்ச் பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாது.. சென்ட் போன்ற வாசனை திரவியத்தையும் பரிசாக தரக்கூடாது.. காரணம், இது வீட்டிற்குள் துரதிர்ஷ்டத்தை தந்துவிடுமாம்.

பரிசு பொருட்கள்: அதேபோல, கருப்பு ஆடைகளை பரிசாக தரக்கூடாது.. அப்படி தந்தால், குடும்பத்தில் மனஅமைதி குலைந்துவிடும். அதேபோல பிறருக்கு செருப்புகளையும், ​​கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் பரிசாக தரவும் கூடாது, வாங்கவும் கூடாது.

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், வீட்டிலுள்ள சில பொருட்களையும் சுத்தம் செய்திருக்க வேண்டும்.. அந்தவகையில், மத புத்தகங்களை சரியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கடவுள்களின் சிலைகள், படங்களையும் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை உடைந்த சிலைகள் இருந்தால், அதை தீபாவளியன்று வெளியே தூக்கி போடக்கூடாது.


களிமண் விளக்குகள்: வீட்டில் பழைய வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் உள்ளிட்ட பாத்திரங்களையும், களிமண் விளக்குகளையும் சுத்தமாக வைக்க வேண்டும். இது நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் கொண்டுவரும்.. நீர் தொடர்பான பொருட்கள், அதாவது நீரூற்றுகள், மீன் தொட்டிகள் போன்றவைகள் சுத்தமாக இருந்தால் செழிப்பை வீட்டிற்குள் கொண்டுவரும். தங்கம், வெள்ளி நகைகள், நாணயங்கள், பழைய நாணயங்கள், வரலாற்று பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.



பச்சை செடிகள், துளசி, மணி பிளான்ட், கற்றாழை போன்றவை வீட்டிலிருந்து எறியக்கூடாது.அதேபோல உடைந்த கடிகாரத்தையும் வெளியே வீசக்கூடாது.


No comments:

Post a Comment