jaga flash news

Sunday, 13 October 2024

துளசி செடிகளை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் ஆன்மீக பலன்கள்


பால்கனியில் துளசி.. இந்த திசையில் மட்டும் துளசி செடியை வைக்காதீங்க.. ஆன்மீக பலன் தரும் துளசி இலைகள்

சென்னை: துளசி செடிகளை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் ஆன்மீக பலன்கள் என்னென்ன தெரியுமா? துளசி செடிகள் எந்த திசையில் வைத்து வளர்க்கலாம்? வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் என்னென்ன தெரியுமா?


ஏராளமானோர் தங்களது வீடுகளின் பால்கனிகள், மொட்டை மாடிகள், தோட்டங்களில் துளசிச்செடிகளை வளர்க்கிறார்கள்... இப்படி வீட்டில் துளசி செடியை வைப்பதால், சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. சுற்றுப்புறம் தூய்மையாகிறது..

tulsi

வீட்டில் நீங்கள் வைக்காமலேயே! துளசி செடி திடீரென வளர்ந்துவிட்டதா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 
"வீட்டில் நீங்கள் வைக்காமலேயே! துளசி செடி திடீரென வளர்ந்துவிட்டதா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "
துளசி செடிகள்: துளசி இருந்தாலே, அங்கு அமைதி, செல்வம், தழைத்தோடும் என்பது நம்பிக்கை. யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைந்து காணப்படுகிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலமாக கருதப்படுகிறது.. துளசி நிறைந்துள்ள இடத்தில், அகால மரணம், வியாதி எதுவுமே நெருங்காது.


வீட்டில் துளசிமாடம் கட்டி, துளசியை அம்மனாக கருதி வழிபடுபவர்களும் உண்டு.. குறிப்பாக, வரலட்சுமி விரதத்தில் அம்மன் முகம் வைத்து வழிபடுவதுபோல், துளசி மாடத்திலும் அம்மன் முகத்தை பதிய வைத்து வழிபடுவார்கள்.. துளசி மாடம் வைத்திருப்பவர்கள் தவறாமல் விளக்கேற்றி, காலை மாலை துளசி பூஜை செய்து, துளசி மாடத்தை வலம் வந்தால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி விடுகின்றன.. எதிலும் வெற்றி கிடைக்கும்.

துளசி இலைகள்: எப்போதுமே தன்னுடனிருக்கும் எந்தப்பொருளின் மதிப்பையும், பல மடங்கு கூட்டும் தன்மை துளசிக்கு உண்டு.. அதாவது தன்னை சேர்ந்த எதையும் தோஷங்களை நீக்கிப் புனிதப்படுத்திவிடும் ஆற்றலுடையது துளசி. திருமாலின் மார்பில் நீங்காது நின்றாடுவது இந்த துளசி செடிதான்.. எனவே, துளசி செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்ய வேண்டும்.




துளசி இலைகளை இரவு நேரத்தில் பறிக்கக் கூடாது என்பார்கள். முடிந்தால் அதிகாலையிலேயே பறித்துவிட வேண்டும்.. புனித நாட்களிலும் துளசியைப் பறிக்கும் வழக்கமில்லை. துளசியை எப்போதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளியில் பறிக்கக்கூடாது என்பார்கள்.. அதேபோல, சதுர்த்தி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி நாட்களிலும் துளசியை பறிக்கக்கூடாது..

திருநாமம்: பூஜைகளில், துளசியை மட்டுமே பயன்படுத்தாமல், இதன் விதை, தண்டு, வேர், இலைகள் போன்றவற்றையும் சேர்த்தே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். துளசியை பறிக்கும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே பறிக்க வேண்டுமாம்.

துளசிச்செடியை கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.. மிகச்சிறந்த கிருமிநாசினியான துளசியின்மீது, சூரியக்கதிர்கள் படும்போது, ஏராளமான நன்மைகள் அந்த இடத்தை சுற்றி படர்கிறது.. நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறது.. ஒருவேளை, கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்க முடியாவிட்டால் வடகிழக்கு திசையில் வைக்கலாம். வடகிழக்கிலும் வளர்க்க முடியாவிட்டால் வடதிசையில் துளசிச்செடியை வளர்க்கலாம். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது.

 உங்கள் வீட்டில் துளசிச் செடியை வைத்துள்ளீர்களா? அதை எந்த திசையில் வைக்கணும் தெரியுமா? 
" உங்கள் வீட்டில் துளசிச் செடியை வைத்துள்ளீர்களா? அதை எந்த திசையில் வைக்கணும் தெரியுமா? "

துளசி மாடம்: துளசி மாடத்தை ஈசானிய திசையில் வடகிழக்கில் வைக்கலாம்.. அப்படி அமையாவிட்டால் வீட்டின் முற்றத்திலோ மற்ற தோஷம் இல்லாத இடத்திலோ வைக்கலாம். ஆனால், கழிவறைக்கு பக்கத்தில் வைக்கவே கூடாது.

சமையலறை. உஷ்ணமான, புகை வரும் இடங்கள், தூசி வெளியேறும் இடங்களில் துளசி செடியை வைக்கக் கூடாது. அதேபோல, படிக்கட்டுகளுக்கு கீழே, தாழ்வான இடங்களில் ஒரு போதும் துளசியை வைக்கக் கூடாது. இது வளர்ச்சியை தடுத்துவிடும்.

சிலசமயம், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட துளசி செடிகளை வைக்கலாமா? நல்லதா கெட்டதா? என்ற சந்தேகம் எழும்.. ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வீட்டில் தாராளமாக வளர்க்கலாம்... ஆனால் ஒருசில விதிகள் இருக்கின்றன.. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை நட வேண்டும் என்றால் 3, 5, 7 என்ற ஒற்றைப்படை எண்களில்தான் நட வேண்டுமாம். அப்படி வைத்தால், எந்த காரியம் செய்தாலும் அது சுபமாக முடியும் என்பது நம்பிக்கையாகும்.



 
மகாலட்சுமி வசிக்கும் துளசி.. கிருஷ்ணருக்கு பிடித்த துளசியை வணங்கினால்  செல்வம் வீடு தேடி வரும் 
மகாலட்சுமி வசிக்கும் துளசி.. கிருஷ்ணருக்கு பிடித்த துளசியை வணங்கினால் செல்வம் வீடு தேடி வரும்
 
வாஸ்து டிப்ஸ்.. பண வருமானத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்ட செடி..எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா? 
வாஸ்து டிப்ஸ்.. பண வருமானத்தை அள்ளித்தரும் அதிர்ஷ்ட செடி..எந்த திசையில் நட வேண்டும் தெரியுமா?
 
தெய்வீக மூலிகை செடிகளை இப்படி வணங்குங்களேன்... நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும் 
தெய்வீக மூலிகை செடிகளை இப்படி வணங்குங்களேன்... நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்
 
வில்வம்  துளசியை பார்த்தாலே புண்ணியம் - அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது  
வில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் - அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது
 
துளசியின் மகிமை: ஏழை வியாபாரியை தீண்ட வந்த நாகம்... தப்பிய உயிர் 



No comments:

Post a Comment