jaga flash news

Friday, 4 October 2024

எல் நினோ மற்றும் லா நினா என்றால் என்ன?

எல் நினோ மற்றும் லா நினா என்றால் என்ன? 'எல் நினோ' மற்றும் 'லா நினா' ஆகியவை ஸ்பானிய வார்த்தைகள். எல் நினோ என்றால் சிறுவன் என்றும் லா நினா என்றால் சிறுமி என்றும் பொருள். 
எல் நினோ என்பது எந்த கடல் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றம்?
”எல் நீனோ” என்பது புவி வெப்பமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது எல்நினோ விளைவு என்கிறோம்.
பசிபிக் பெருங்கடல் பூமியின் மிகப்பெரிய கடல்


இந்தியாவில் எல் நினோ, லா நினோவால் என்ன பாதிப்பு? சுட்டெரிக்கும் வெயிலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு?
எல்நினோ, லா நினோ


பசிபிக் பெருங்கடலில் நிலவிய எல் நினோ வானிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், எல் நினோ மற்றும் லா நினா என்றால் என்ன, அது இந்தியாவின் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது?

எல் நினோ மற்றும் லா நினா என்ற வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி பருவமழையின் தொடக்கத்திலோ அல்லது குளிர்காலத்தின் தொடக்கத்திலோ கேட்டிருப்பீர்கள்.

இரண்டும் உலக வெப்பநிலை மற்றும் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. எல் நினோவின் போது, 2023-2024 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையை நீங்கள் பார்த்திருக்கலாம்.

எனவே, மானுடவியல் காலநிலை மாற்றம் இன்னும் வலுவாக உணரப்பட்டபோது அதன் விளைவுகளை நீங்கள் ஏற்கனவே அனுபவித்திருக்கலாம்.



எல் நினோ மற்றும் லா நினா என்றால் என்ன?
'எல் நினோ' மற்றும் 'லா நினா' ஆகியவை ஸ்பானிய வார்த்தைகள். எல் நினோ என்றால் சிறுவன் என்றும் லா நினா என்றால் சிறுமி என்றும் பொருள்.

பசிபிக் பெருங்கடல் பூமியின் மிகப்பெரிய கடல். பசிபிக் பெருங்கடலில் நிகழும் காற்று மற்றும் நீரோட்டங்கள் உலகில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், தெற்கு அரைக்கோளத்தில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதால், பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் வெப்பநிலை உலகின் பார்வையில் முக்கியமானது.

இது தெற்கு அலைவு எனப்படும். எல் நினோ மற்றும் தெற்கு அலைவு ஆகியவை கூட்டாக ENSO என அழைக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் கிழக்குக் காற்றின் (Trade wind - பூமத்திய ரேகைக்கு வடக்கு மற்றும் தெற்கே நம்பத்தகுந்த வகையில் கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று) காரணமாக நடக்கிறது. இந்த காற்று வடக்கு அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தெற்கு அரைக்கோளத்தில் தென்கிழக்கிலிருந்தும் வீசுகிறது. இந்த காற்று பசிபிக் பெருங்கடலில் உள்ள கடல் நீரோட்டங்களை பாதிக்கிறது.

சாதாரண சூழல்களில், பசிபிக் பெருங்கடலின் மேல் அடுக்கில் உள்ள நீர் வெப்பமடையும் போது, அது ஆசியாவை நோக்கி பாயத் தொடங்குகிறது. மேலும், கீழ் அடுக்கில் குளிர்ந்த நீர் அதன் இடத்தைப் பிடிக்கிறது. மறுபுறம், பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள நீர் கிழக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவும், ஆசியாவிற்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் வெப்பமாகவும் இருக்கிறது.


கிழக்குக் காற்று மெதுவாக அல்லது எதிர் திசையில் வீசத் தொடங்கினால், மேற்பரப்பு நீரின் வெப்பநிலையும் அதிகரித்து, சூடான நீர் கிழக்கு நோக்கி தென் அமெரிக்காவை நோக்கி நகரும். இந்த நிலை எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், இந்த கிழக்குக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் போது, சூடான நீரும் காற்றின் நீராவியும் முதலில் ஆசியாவை நோக்கி நகர்ந்து, பின்னர் இந்த குளிர்ந்த நீரும் மேற்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. இது லா நினா என்று அழைக்கப்படுகிறது.

கடல் நீரோட்டங்களின் இந்த நிலை முதன்முதலில் பதினேழாம் நூற்றாண்டில் பெருவில் உள்ள மீனவர்களால் கவனிக்கப்பட்டது.

தென் அமெரிக்காவின் கடற்கரைக்கு அருகில், டிசம்பர் மாதத்தில் நீரின் வெப்பநிலை உயர்வதை அவர்கள் கவனித்தனர். இந்த நீரோட்டத்திற்கு 'எல் நினோ டி நவிடாட்' என பெயரிட்டனர். இதற்கு ‘கிறிஸ்துமஸின் சிறுவன்’ என பொருள்.

மாறாக, இந்த நிலை 'லா நினா' என்று அறியப்பட்டது.



எல் நினோ எவ்வாறு அளவிடப்படுகிறது?
எல் நினோ மற்றும் லா நினா நிலைகள் தோராயமாக இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் இடைவெளியில் நிகழும். ஆனால், உண்மை நிலை என்ன? அது எவ்வாறு அளவிடப்படுகிறது?

எல் நினோ நிலையை அறிவிப்பதற்கு முன் பல்வேறு காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

கிழக்கு பசிபிக் பகுதியில் பூமத்திய ரேகைக்கு அருகில் சாதாரண கடல் மேற்பரப்பு வெப்பநிலைக்கு மேல் இருத்தல்
மேற்கு பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலியாவின் டார்வினில் இயல்பான வளிமண்டல அழுத்தம் நிலவுதல்
மத்திய பசிபிக் பகுதியில் உள்ள டஹிடி தீவுகளுக்கு அருகில் வளிமண்டல அழுத்தம் சாதாரண அளவை விட குறைவாக இருத்தல்

லா நினாவின் போது, ஆஸ்திரேலியா சமீபத்தில் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
எல் நினோ மற்றும் லா நினாவின் விளைவுகள் என்ன?
எல் நினோ மற்றும் லா நினா ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக உலகின் காலநிலையை பாதிக்காது. மழை மற்றும் வெப்பநிலை நாட்டில் நிலவும் காலநிலையை பொறுத்து பாதிக்கப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகள் சில பொதுவான தாக்கங்களையும் கவனித்துள்ளனர்.

வெப்பநிலை
எல் நினோவின் போது, உலகளாவிய வெப்பநிலை சராசரியை விட உயர்கிறது. அதேநேரத்தில், லா நினாவின் போது அது குறைகிறது.

எல் நினோவின் போது, வெதுவெதுப்பான நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் பரவி, கடல் மேற்பரப்பில் நீண்ட நேரம் தங்கியிருப்பது ஏன்? இது தண்ணீருக்கு அருகில் உள்ள காற்றை வெப்பமாக்குகிறது, வளிமண்டலத்தில் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. லா நினாவின் போது இது நேர் எதிராக நிகழுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஏற்கனவே மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரித்துள்ளது. எல் நினோவின் தாக்கத்தால் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2023 மாறியுள்ளது. இந்த விளைவு 2024-ம் ஆண்டிலும் உணரப்படுகிறது.

அதற்கு முன், 2020 மற்றும் 2022-ல் மூன்று எதிர்பாராத லா நினா ஆண்டுகள் இருந்தன. இந்த காலகட்டத்தில், லா நினா உலக வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகத் தோன்றியது.

மழைப்பொழிவில் பாதிப்பு
எல் நினோவின் போது, பசிபிக் பெருங்கடலின் மேல் உள்ள ‘ஜெட் ஸ்ட்ரீம்’ (மேல் வளிமண்டலத்தில் அதிவேக காற்று) தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் அதிக மழை பொழிகிறது. அதேநேரத்தில், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா ஆகியவை ஒப்பீட்டளவில் வறண்ட காற்றைக் கொண்டுள்ளன.

லா நினாவின் போது இதற்கு நேர்மாறாக நடக்கிறது.



புயல்கள்
எல் நினோ வளிமண்டலத்தில் காற்றின் நீரோட்டங்களை பாதிக்கிறது மற்றும் இந்த காலகட்டத்தில் பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் அதிக புயல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலில் குறைவான புயல்கள் ஏற்படுகின்றன. லா நினாவின் போது இது தலைகீழாக நடக்கின்றன.

கார்பன் டை ஆக்சைடின் அளவு
எல் நினோவின் போது காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பூமத்திய ரேகைப் பகுதிகளில் வறண்ட காற்று தாவரங்களின் வளர்ச்சியைக் குறைப்பதால், குறைந்த கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உறிஞ்சப்படுகிறது. வெப்பம் தீயை எரித்து, அதிக கார்பன் டை ஆக்சைடு காற்றில் வெளியிடப்படுகிறது.



எல் நினோவின் போது, இந்தியாவிலும் வெப்பநிலை அதிகரிக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, லா நினாவின் போது சாதாரண அல்லது சராசரிக்கு மேல் மழை பெய்யும்.

1954 மற்றும் 2022-க்கு இடையில் 22 ஆண்டுகள் லா நினா விளைவுகள் இருந்தன. 1974 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளைத் தவிர, சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு இருந்தது.

ஆனால், எல் நினோவைப் போலவே, இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியப் பெருங்கடல் இருமுனையமும் (IOD) பருவமழையைப் பாதிக்கலாம்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் IOD நடுநிலையானது என்றும், பருவமழை தொடங்கிய பிறகு நேர்மறையாக மாறும் என்றும், இதன் விளைவாக இந்தியாவில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

லா நினாவின் போது, பொதுவாக இந்தியாவில் குளிரின் அளவு சற்று அதிகரிக்கும்.

பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தில் காலநிலை குறித்து ஆய்வு செய்யும் அக்சய் தேவராஸ், பிபிசியிடம், "காலநிலை வாரியாக, கடலும் காலநிலையும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. லா நினா சூழ்நிலை இருக்கும் ஆண்டுகளில், குளிர்கால மாதங்கள் இந்தியாவிலும் மகாராஷ்டிராவிலும் சராசரிக்கும் குறைவாக இருக்கும். வளிமண்டலத்தில் உள்ள மற்ற காரணிகளும் வானிலையை பாதிக்கின்றன” என்றார்.




எல் நினோ மற்றும் லா நினா ஆகியவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உணவு, பயன்பாடுகள் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக, எல் நினோவின் போது வெப்பநிலை தென் அமெரிக்காவிற்கு அருகிலுள்ள கடல்களில் உள்ள மீன் மற்றும் பிற உயிரினங்களை பாதிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பின் அறிக்கையின்படி, 2015-16 ஆம் ஆண்டில் எல் நினோவால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியால் உலகளவில் 60 மில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பு நேரடியாக அச்சுறுத்தப்பட்டது.

இது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

எல் நினோ மற்றும் லா நினா நிலைகள் தோராயமாக இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் இடைவெளியில் நிகழும்.

இருப்பினும், இந்த இரண்டும் எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததில்லை. சில சமயங்களில் எல் நினோ தொடர்ச்சியாகவும், சில சமயங்களில் லா நினாவை தொடர்ச்சியாகவும் இருக்கும். ஆனால், லா நினா நிலைமை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

2020-2022 இல், லா நினா நிலை தொடர்ச்சியாக மூன்று முறை ஏற்பட்டது.


13 ஜனவரி 2024
தமிழ்நாட்டில் ஜனவரி மாதமும் தொடரும் கனமழை - 'லா நினோ' காரணமா?
8 ஜனவரி 2024
எல் நினோ மற்றும் லா நினா இந்தியாவின் வானிலையை எவ்வாறு பாதிக்கிறது?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,எல் நினோ மீன்பிடித்தலையும் மோசமாக பாதிக்கும்.
காலநிலை மாற்றம் எல் நினோ, லா நினாவை பாதிக்கிறதா?
1850 மற்றும் 1950-க்கு இடையில் காணப்பட்ட என்சோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், 1950 ஆம் ஆண்டிலிருந்து எல் நினோ மற்றும் லா நினா வலுப்பெற்றதாகத் தோன்றுவதாக 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் ஐபிசிசி (காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு) அறிவித்தது.

ஆனால், வரலாற்று ஆவணங்கள் பற்றிய ஆய்வுகள் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து என்சோவின் தாக்கமும் மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

எனவே, காலநிலை மாற்றம் எல் நினோ மற்றும் லா நினாவை பாதிக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.

ஆனால், புவி வெப்பமடைதலின் விளைவாக எல் நினோ அடிக்கடி நிகழும் என்றும் அதன் தாக்கம் பரவலாக இருக்கும் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை.

No comments:

Post a Comment