jaga flash news

Monday, 28 October 2024

வாழைத்தண்டு திரி...

விளக்கேற்றுகிறீர்களா? வாழையடி வாழை! ஒரு முறையாவது வாழைத்தண்டு திரியை ஏற்றி பாருங்களேன்
சென்னை: தெய்வக் குற்றம், சிவன் அருள் கிடைக்கவும் பித்ரு சாபம் விலகவும் வாழைத்தண்டு திரியால் தீபம் ஏற்றினால் அதற்கான பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த வாழைத்தண்டு திரியால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Backfill Promotion
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றும் பலன்கள். பொதுவாக தீபம் ஏற்றும் பொழுது பஞ்சு அல்லது பருத்தி திரி தான் பயன்படுத்துவோம். பருத்தி திரி போட்டு தீபம் ஏற்றுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Backfill Promotion
spirtuality vazhaithandu thiri

கூரைய பிச்சிட்டு பணம் கொட்ட.. வசம்பு வாசம் போதுமே.. பானையில் கல் உப்பை அள்ளி போட்டு மேஜிக்கை பாருங்க
"கூரைய பிச்சிட்டு பணம் கொட்ட.. வசம்பு வாசம் போதுமே.. பானையில் கல் உப்பை அள்ளி போட்டு மேஜிக்கை பாருங்க"
பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவதால் பஞ்சபூதங்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். மற்ற திரிகளை போட்டு தீபம் ஏற்றுவது வெவ்வேறு பரிகாரங்களுக்கு பலன் தருவதாக இருக்கும். அந்த வகையில் தெய்வ குற்றம், பித்ரு சாபம் நீங்க, சிவ அருள் கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம் என்ன? இந்த தீபம் ஏற்றுவதால் உண்டாகக் கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

Diwali Shopping From T Nagar | Oneindia Arasiyal
குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வேண்டுதல் வைத்திருப்போம், ஆனால் அதை சில சமயங்களில் நிறைவேற்ற மறந்து விடுவதுண்டு. இது போல வேண்டுதல் வைத்து அதை நிறைவேற்ற மறந்து விட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடும் என்பார்கள். குலதெய்வத்தை வருடா வருடம் சென்று பொங்கல் வைத்து வழிபட வேண்டும். ஆனால் வருடம் தோறும் செல்வதற்கு முடியாதவர்கள், குலதெய்வத்தை மறந்தவர்கள் குலதெய்வ சாபத்திற்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட தெய்வ குத்தங்களையும் சரி செய்யக் கூடிய எளிய பரிகாரம் இதுவாகும்.

குழந்தை இல்லா தம்பதியர்கள் குழந்தை பிறக்கும் பாக்கியத்தை பெறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் சிவனுடைய அருள் கிடைக்க சிவ மந்திரத்தை உச்சரித்து இந்த தீபத்தை ஏற்றலாம். சாபத்திலேயே பல வகைகள் உண்டு. அந்த வகைகளில் பித்ரு சாபம் என்பது ரொம்பவும் கடினமானதாக இருக்கும். நம்முடைய முன்னோர்கள் தான் பித்ருக்களாக இருக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்க முடியுமா? இன்று பகல் 12 மணிக்கு ரிசல்ட்
"திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்க முடியுமா? இன்று பகல் 12 மணிக்கு ரிசல்ட் "

பித்ருக்கள் ஆகிய இவர்களுக்கு உரிய பூஜைகளையும், செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாது செய்தல் வேண்டும் இல்லாவிடில் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இருந்த போது பாதுகாக்க முடியாதவர்கள், இறந்த போது கடமைகளை ஆற்ற தவறியவர்கள் பெரிய பாவங்களை செய்தவர்களாக ஆகி விடுவார்கள், எனவே இருக்கும் பொழுதும், இறந்த பிறகும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட வேண்டும்.

அப்பொழுது தான் நம் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். பித்ரு சாபத்திற்கு ஆளாகியவர்கள் தொடர்ந்து வாழ்க்கையில் தோல்விகளையும், சறுக்கல்கள் காணுவார்கள். இந்த பித்ரு சாபம், குலதெய்வ சாபம், தெய்வ குற்றம் போன்றவற்றிலிருந்து எளிதாக விடுபடுவதற்கு வாழைத்தண்டினால் தீபம் ஏற்ற வேண்டும். இது பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், நாட்டு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கப் பெறும்.


உங்கள் வீட்டில் வாழைமரம் இருந்தாலும், வாழைத்தண்டு இருந்தாலும் வாழைத்தண்டை பிரித்து எடுத்து அதிலிருந்து கிடைக்கக் கூடிய நாரை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காய வைத்த நாரை கொண்டு அகல் தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போடுங்கள்.

திருப்பதி போகணும்னு பிளான் செய்தாலும் முடியலையா? அப்போ சனிக்கிழமைகளில் இதை செய்ங்க!
"திருப்பதி போகணும்னு பிளான் செய்தாலும் முடியலையா? அப்போ சனிக்கிழமைகளில் இதை செய்ங்க! "
இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமி திதி இரவு செய்ய வேண்டிய பரிகாரம் குறிப்பிட்ட தெய்வத்திற்கு போட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் நீங்கள் சாதாரணமாக விளக்கு ஏற்றும் பொழுது அகல் தீபம் ஒன்றை வைத்து வாழை தண்டு திரியால் தீபம் ஏற்றி வந்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சிவனுக்கு உகந்த திரி என்பதால் சிவனுடைய அருளும் கிடைக்கும்.

வாழையடி வாழையாய் வம்சம் தழைக்கவும் வாழைத்தண்டு திரியினால் தீபம் ஏற்றி வழிபடலாம். அறியாமலும், அறிந்தும் செய்யப்பட்ட தெய்வ குற்றங்கள் எதுவாகினும் இந்த வாழைத்தண்டு திரி தீபம் ஏற்றுவதால் நிவர்த்தி ஆகிவிடும் கவலைப்படாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment