jaga flash news

Tuesday, 22 October 2024

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவதால் சாமானியருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு டாலருக்கு ரூ.63 ஆக இருந்த மாற்று விகிதம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று, ரூ.84.07 என்னும் மதிப்பில் உள்ளது. இது ரூபாயின் மதிப்பில் இதுவரை கண்டிராத சரிவு.

ரூபாய் மதிப்பின் சரிவு, சாமானியர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்ற போதிலும், நிச்சயமாக அனைத்து இந்தியர்களின் வாழ்விலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்..

ரவி, சுரேஷ் இருவரும் சகோதரர்கள். ரவி இந்தியாவில் இருக்கிறார். சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு குடியேறினார். சுரேஷ் டாலரில் சம்பாதிப்பதால், ரவியை விட அவருக்கு சிறந்த பேங்க் பேலன்ஸ் இருக்கிறது. ரவியும் இந்தியாவில் பணத்தைச் சேமித்து நலமுடன் இருக்கிறார்.

அமெரிக்காவில் தங்கியுள்ள அண்ணன் சுரேஷ், சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாத போதிலும், இந்தியாவில் சொத்துகளை வாங்கி வருகிறார். முதலில் அவர் தங்கள் தாய்வழி தாத்தாவின் பெயரில் ஒரு வீட்டையும், பின்னர் தங்கள் உறவினர்களின் பெயரில் பண்ணைகளையும் வாங்குகிறார். ரியல் எஸ்டேட்டிலும் கவனம் செலுத்துகிறார்.

ஏன் இப்படி நடக்கிறது என்று ரவிக்கு வெகு காலமாகப் புரியவில்லை. ஆனால், சமீபத்தில்தான் ரவி உண்மையை உணர்கிறார். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது தன் மூத்த சகோதரருக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. அதனால் ரவியை விட சுரேஷ் பலமடங்கு சொத்துகளுக்கு அதிபதியாக மாறுகிறார். ஆனால் ரவி அப்படியே இருக்கிறார்.

ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

ஏற்றுமதி, இறக்குமதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பண வீக்கம், அந்நியச் செலாவணி கையிருப்பு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை முடிவுகள், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வட்டி விகிதங்கள், உலக நாடுகளின் நிச்சயமற்ற தன்மை என இவைதான் பொதுவாக நாட்டின் பண மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு முக்கியக் காரணம்

No comments:

Post a Comment