jaga flash news

Friday, 11 October 2024

வெந்தயக்கீரை

கீரைகள் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தவை என்றாலும், வெந்தயக்கீரை சற்று கூடுதல் ஸ்பெஷலாக உள்ளது.. இதற்கு காரணம், வேறு கீரைகளில் இல்லாத சில சத்துக்கள் இந்த வெந்தயக்கீரையில் உள்ளதுதான்.


வெந்தய விதைகளின் கருவில் காலக்டோமன் அதிகமாக உள்ளது. சிறுநீர் ஆரோக்கியத்தை காக்க இந்த விதைகள் பயன்படுகின்றன.. உடலுக்கு குளிர்ச்சியை தந்து சிறுநீர் பெருக்கத்தையும் அதிகப்படுத்துகிறது.


venthaya keerai colon cancer fenugreek leaves
விதைகள்: சர்க்கரை நோயை மட்டுமல்லாமல், ரத்தசோகை, மாதவிடாய் தொந்தரவு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயு கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ் என பல்வேறு நோய்களை குணமாக்க வெந்தய விதைகள் உதவு செய்கின்றன.

அந்தவகையில், உடல் உறுப்புகள் அனைத்துக்குமே பலத்தையும், சக்தியையும் தரக்கூடியது இந்த வெந்தயக்கீரை.. வெந்தயக்கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் நோய்கள் நெருங்குவதில்லை. குளிர்ச்சி நிறைந்த கீரை என்பதால், உடலிலுள்ள உஷ்ணங்களை போக்குகிறது.

உடல் உஷ்ணம்: அதாவது தீக்காயங்களையும் ஆற்றிவிடும் குளிர்ச்சி நிறைந்தது இந்த கீரை.. வெறுமனே இந்த இலைகளை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு பற்று போட்டால், காயம் குணமாகும்.. எரிச்சலும் அகலும்.. சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கு இந்த கீரையை அரைத்து பற்று போடலாம். உஷ்ணத்தால் தலைமுடி உதிர்தல் இருந்தாலும், இந்த கீரை சரிசெய்துவிடும்.


வயிற்றில் புண்கள், குடல் புண், வாய்ப்புண்கள் இருந்தாலும் அதையும் இந்த கீரை குணமாக்கிவிடும். இதற்கு வெந்தயக்கீரையை தேனுடன் கலந்து கடைந்து சாப்பிட்டால் போதும்.

கொழுப்புச்சத்து: 100 கிராம் வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்துக்கள், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்து, 0.9சதவீதம் கொழுப்புச்சத்து அடங்கியிருக்கிறது. வைட்டமின் A, மற்றும் சுண்ணாம்புச்சத்து உள்ளதால், உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கிறது. உடல் சோர்வு நிறைந்திருப்பவர்கள் வெந்தயக்கீரையை தவறவிடக்கூடாது.

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், வெந்தயக்கீரையை விடக்கூடாது.. காரணம், இதில், கலோரிகள் குறைவு என்பதுடன், நார்ச்சத்துக்களும் அதிகம் ஆகும்.. பெருங்குடல் புற்றுநோயையும் வராமல் தடுக்கும் சக்தி இந்த வெந்தயக்கீரைக்கு உள்ளதாம்.


மினுமினுப்பு: தோல் பராமரிப்புக்கு இந்த கீரையின் பயன் கொஞ்சநஞ்சமல்ல.. உடலுக்கு அழகையும், மினுமினுப்பையும் தரக்கூடியது இந்த கீரை.. வெறும் வயிற்றில் வெந்தயத்துடன், கறிவேப்பிலை, வெந்தயக்கீரை இரண்டையும் உப்பு சேர்த்த தயிரில் கலந்து ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள் நெருங்காது.. உடலிலும் பளபளப்பு கூடும்.

லேசான கசப்புதன்மை வாய்ந்த இந்த கீரையை 40 நாட்களுக்கு நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை கட்டுக்குள் அடங்கும் என்கிறார்கள்.. அதேபோல, நரம்பு தளர்ச்சி பாதிப்பு உள்ளவர்கள், காச நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த கீரையை தவறவிடக்கூடாது.

வயிறு பிரச்சனைகள்: வயிறு உபாதைகள் இருப்பவர்கள், இந்த கீரையை கழுவி சுத்தம் செய்து, வெண்ணையில் வதக்கி சாப்பிட்டு வரவேண்டும். ஆனால், இந்த கீரையுடன் அதன் தண்டுகளையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதன் தண்டுகள் இளசாக இருக்கும். எனவே, இந்த தண்டை விழுதாக அரைத்து, மோருடன் கலந்து குடித்தால் வயிறு உபாதைகள், செரிமான கோளாறுகள் நீங்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு பால் உற்பத்தி அதிகரிக்க இந்த கீரையை சமைத்து தருவார்கள். சிலர் கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தருவார்கள். இதனால் அனீமியா பிரச்சனையும் தீரும்.

வெந்தயக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாகிறதாம். வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலமும், உடலும் சுத்தமாகும். மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் இந்த வெந்தயக்கீரை குணப்படுத்துவதாக கூறுகிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக்கீரையுடன் கோழி முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.


No comments:

Post a Comment