பராசரா ஜோதிடம்
இரண்டாம் அதிபதி + எட்டாம் அதிபதி அல்லது ஆறாம் அதிபதி இணைந்தாலோ. தொடர்பு பெற்றாலோ, அவர்கள் அரசியல்+ உணவு+ மருத்துவம்+ கெமிக்கல்+இன்ஷீரன்ஸ் வக்கீல் இதை சார்ந்த துறையில் இருப்பார்கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள்.
இதற்கு காரணம் வாக்குஸ்தான அதிபதியே வருமானம் + குடும்பம் அதிபதியாக வருவதால்தான்.
இந்த அமைப்பு குடும்பத்தில் நேரத்தை செலவிட அனுமதிப்பதில்லை
2ம் அதிபதி கெட்டால் 90% குடும்பத்தோடு இருக்க முடியாது, பெரும்பாலும் தனிமையை தந்து விடும். பலருக்கு 2 திருமணத்தை தருகின்றது வருமான ப் பிரச்சினையிலேயே பாதி வாழ்க்கை கழிந்து விடும்.
பொதுவாகவே எல்லோரும் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். யாருக்கும் யாரும் சாபம் தரக்கூடாது. அவதூறாக பேசக்கூடாது. ஏனெனில் ஜாதகத்தில் 2ம் அதிபதி- வாக்கு + வருமானம் +குடும்பம் நீங்கள் கெட்டதை பேசினால் வாக்கு அதிபதி வருமானம் + குடும்பம் இவற்றில் கை வைத்து விடுவார்.
No comments:
Post a Comment