jaga flash news

Friday, 16 January 2026

கோயிலுக்கு இதை மட்டும் தானமாக கொடுத்துப் பாருங்கள்.! வாழ்க்கையே மாறுமாம்.!

கோயிலுக்கு இதை மட்டும் தானமாக கொடுத்துப் பாருங்கள்.! வாழ்க்கையே மாறுமாம்.!

சாஸ்திரப்படி துடைப்பத்தை யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.

ஆனால் மகாலட்சுமி வாசம் செய்யும் துடைப்பத்தை கோயிலுக்கு தானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையே மாற்றுமாம்.

எனவே அருகிலுள்ள கோயிலுக்கு க்கு ஒரு துடைப்பம் அல்லது ஒட்டடை கொம்பு வாங்கி கொடுங்கள். இந்த சிறிய தானம் மூலம் வீட்டில் லட்சுமி கலை தங்கி, சுத்தமும் சாந்தியும் நிலைத்து இருக்கும்.

மேலும், நீங்கள் மனதிலும் அமைதியுடனும், பொறுப்புடனும் மாறுவீர்கள்.



LG

11 comments:

  1. Tue. 27, Jan. 2026 at 1.23 pm.

    *ஆத்மஷ்டகம் :*

    ந மே ம்ருத்யுஸங்கா ந மே ஜாதி பேத:
    பிதா நைவ மே நைவ மாதா ந ஜந்ம
    ந பந்துர்ந மித்ரம் குருர்நைவ விஷ்ய:
    சிநத்த ரூப: சிவோ ஹம் சிவோ ஹம்

    எனக்கு மரண பயம் இல்லை.
    எனக்கு ஜாதி பேதமும் இல்லை.
    எனக்கு தந்தையோ தாயோ பிறப்போ உற்றாரோ நண்பனோ ஆசானோ சீடனோ கிடையாது.

    நான் மங்களகரமான மற்றும் ஆனந்தரூபமான சிவன். நானே சிவன்.

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  2. Wed. 28, Jan. 2026 at 5.35 am.

    *சிவராத்திரி விரத விழா :*

    * சிவராத்திரி விரத விழா - மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் நடைபெறும்.

    அன்று சிவாலயங்களில் 4-கால பூஜை நடைபெறும்.

    இதனை விழாநிசி அதாவது இன்ப ராத்திரி, பிரம்ம சொரூபம், மகாதபசு, பிரகாசம், யச்சு, சகலபவனம், சத்தியம் என்றெல்லாம் பல பெயர்களால் கூறுவர்.

    த்ரயோதசி என்பது அம்பிகையைக் குறிக்கும்.

    சதுர்த்தசி என்பது சிவனைக் குறிக்கும்.

    * சிவராத்திரி என்பது - பஞ்ச பூதங்களை மாயையில் இருந்து ஒடுக்கி அனைவரும் இல்லாதபடி சம்ஹரிப்பது.

    * சம்ஹாரம் செய்த சிவன்... நர்த்தனம் ஆடுகையில் சவகாமி அம்மையார் உயிர்களின் மேல் கொண்ட கருணையினிமித்தம் சிவனை பூஜித்ததால், சிவன் சிவகாமியோடு ஒன்றி மீண்டும் உலகைப் படைத்தான்.

    *உயிர்களுக்கு தனு, கரண, புவன போகமளித்தான்.

    *முதல் யாமம் - அபிஷேகம் - பஞ்சகவ்யம் - பச்சு - சந்தனம் - மலர் - வில்வம் அல்லது தாமரை - நிவேதனம் - பச்சை பயிறு, பொங்கல்.

    *2-ஆம் யாமம் - அபிஷேகம் - ரஸ பஞ்சாமிர்தம், - பூச்சு - அகில் - மலர் - துளசி, தாமரை - நிவேதனம் - பாயாசம்.

    *3-ஆம் யாமம் - அபிஷேகம் - கொம்புத் தேன் - பூச்சு - பச்சை கற்பூரம் - மலர் - ஜாதிமல்லி, வில்வம் - நிவேதனம் - எள் அன்னம்.

    *4-ஆம் யாமம் - அபிஷேகம் - கருப்பஞ் சாறு - பூச்சு - குங்குமப் பூ - மலர் நந்தியாவர்த்தம், நிலோற்பவம் - நிவேதனம் - சுத்த அன்னம்.

    இவ்வாறு முறையாக செய்து சிவபெருமான் அருள் பெறுக.

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  3. Sat. 31, Jan. 2026 at 10.15 pm.

    *சைவ சித்தாந்தம் :*

    *ஒன்றை உள்ளபடி உணருவதற்கு காரணம் எதுவோ அதுவே _ பிராமணம்.

    *பிராமணத்தின் வகைகள் : பிரத்யட்சம், அனுமானம், சப்தம்.

    *பிரத்தியட்சம் என்பது - ஊறு, ஓசை, ஒளி, சுவை, நாற்றம் போன்ற குணங்களையும், அதற்கு அடிப்படையான இந்திரியங்களைப் பற்றியும் அறிய உதவுவது - பிரத்யட்சம்.

    *அனுமானம் என்பது - ஓரிடத்தில் காணப்படும் இருபொருட்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைகண்டு, வேறொரு இடத்தில் காணப்படாத ஒன்றை கண்டது என ஊகிப்பது அனுமானம்.

    *சப்தம் என்பது - இந்திரியங்களாலும், அனுமானத்தாலும் உள்ளபடி உணரமுடியாத உயரிய பொருளை உணர்வதற்கான காரணமும், அட்சரங்களின் கூட்டமும் சப்தம் எனப்படும்.

    *சப்த பிராமணங்களுள் சிறந்ததாகக் கருதப்படுவது - சுருதி (ஸ்ருதி)

    *சுருதி என்பது - வேதங்கள்.

    *வேதங்கள் நான்கு வகைப்படும். அவை : ரிக், யஜூர், சாம, அதர்வணம்.

    *வேதத்தின் இரு பெரும் பிரிவுகள் - கர்ம காண்டம், பிரம்ம காண்டம்..

    *கர்ம காண்டம் என்பது - வேள்வி, தானம், தவம் முதலியவற்றையும், அவற்றைச் செய்யும் முறைமைகளைப் பற்றியும் கூறும் வேதப் பகுதி.

    *பிரம்ம காண்டம் என்பது - இறைவனின் திருமேனி, குணங்கள், இறைவனை அடைய உதவும் உபாயங்கள் ஆகியவற்றை விளக்குவது.

    மீண்டும் சந்திக்கலாம் !
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  4. Tue. 03, Feb. 2026 at 5.15 pm.

    *வித்தைகள் :*

    *பொதுவாக வித்தைகள் என்பது மொத்தம் 14- வகை உள்ளன.
    அவை : வேதங்கள் - 4,; வேதாங்கம் - 6; உபாங்கம் - 4 = ஆக மொத்தம் 14.

    *1.இவற்றில் வேதங்கள் என்பது :*
    ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்.

    1.ரிக் வேதமானது பல்வேறு சூக்தங்களைக் கொண்ட 10-மண்டலங்களாக அமைந்துள்ளன.

    இவ்வேதத்தில் 1017 ரிக்குகளும், 10548- மந்திரங்களும் உள்ளன.

    2.யஜூர் வேதமானது - சுக்ல யஜூர் வேதம், கிருஷ்ண யஜூர் வேதம் என்று இரு பிரிவுகளைக் கொண்டது. இது உரை நடை வடிவில் அமைந்துள்ளது.

    3.சாம வேதம் என்பது - இசைப் பாடல் வடிவில் உள்ளது.

    *வேதத்தில் சிறந்தது 'சாம வேதம்'.

    4.அதர்வண வேதம் என்பது - சாந்தி, பௌஷ்டிகம், அபிசாரிகம் போன்றவற்றை எடுத்து உரைப்பது.

    *2) வேதாகங்கள் என்பது :*
    சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம். என 6- வகை.

    *சிக்ஷை - பயற்சி
    *கல்பம் - செயல்படும் முறை
    *வியாகரணம் - இலக்கணம்
    *நிருக்தம் - பதம் பிரித்துப் பொருள் கூறுதல்
    *சந்தஸ் - வடமொழி யாப்பிலக்கணம்
    *சோதிடம் - வரும் பொருளுரைத்தல்.

    *3) உபாகங்கள் :*
    *மீமாம்சை, தருக்கம், புராணம், ஸ்மிருதி.

    *மீமாம்சை - வேதப் பொருளை உணர்த்துதல்.

    *தருக்கம் - மேம்படுத்தல்.

    *புராணம் - முற்காலத்தில் நடந்தவற்றை கூறல்.

    *ஸ்மிருதி - தரும சாஸ்திரம்.

    இவையன்றி சாம, தான, பேத, தண்டங்களை அறிந்தவர்களை 'சதுர்வித்தகர்' என்று சொல்வதுண்டு.

    மீண்டும் சந்திக்கலாம் !
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  5. சதுர்வித்தைகள் என்பது - மேற்கண்ட நான்கு வேதங்களைக் குறிக்கும். இந்நான்கு வேதங்களையும் அறிந்தவர்கள் 'சதுர்வித்தகர்' ஆவர்.

    ReplyDelete
  6. Thi. 5, Feb. 2026 at 7.53 am.

    *சைவ சித்தாந்தம் :*

    நாம் காணும் இவ்வுலகம்..... பிரஞ்சங்களால் ஆனவை.

    இப் பிரபஞ்சமானது 5 - வஸ்துக்களால் ஆனவை. அவை :
    *பிருதிவி அதாவது மண்
    *அப்பு அதாவது நீர்
    *தேயு அதாவது தீ
    *வாயு அதாவது காற்று
    *ஆகாயம் அதாவது வெளி

    இவற்றில்...
    *பிருதிவி* அம்சமான மண் என்பது - அஸ்தி, தோல், மாமிசம், நரம்பு, உரோமம்.

    *அப்பு* பூதத்தின் அம்சமான நீர் என்பது - இரத்தம், சுக்கிலம், கொழுப்பு, மூளை, சிறுநீர்.

    *தேயு* பூதத்தின் அம்சமான தீ என்பது - பசி, சங்கமம், நித்திரை, ஆலசியம் பயம்.
    ஆலசியம் என்பது சோம்பல், தாமதம் என்று பொருள்.

    *வாயு* பூதத்தின் அம்சமான காற்று என்பது - கிடத்தல், இருத்தல், தத்தல், நடத்தல், ஓடல்.

    வெளியின் அம்சமான ஆகாயம் என்பது - ஆசை, துவேசம், வெட்கம், மோகம், பகை.

    துவேசம் என்றால் இங்கு வெறுப்பு என்று பொருள்.

    மேற்கண்ட 5 - கூறுகளும், 25-பிரிவுகளாகி, அவ் 25-ம் 96-தத்துவங்களாக மனிதனை இயக்குவிக்கும்.

    (குறிப்பு : தங்கள் ஞாபகத்திற்காக...நாடிப்பயிற்சி பதிவில் இவ்விளக்கத்தை அளித்துள்ளேன்.)

    இவ்வாறு ஐம்பூதக் கலப்புள்ள உயிர்ஜீவன வஸ்துக்கள் அனைத்தும் 4 - வழிகளில் தான் உற்பத்தி ஆகின்றன.

    எவ்வாறெனில்...
    *கருப்பை என்னும் யோனி பையிலிருந்து....

    *முட்டையிலிருந்து....

    *விதைகளிலிருந்து....

    *அழுக்கு முதலிய அசுத்தங்களிலிருந்து
    உற்பத்தி நிகழ்கின்றன.

    *உற்பத்தி ஆகும் அனைத்துமே, பஞ்ச பூத கலப்பு பெற்று... தேவர், மனிதர், விலங்குகள், பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரங்கள் என 7-வகையான வஸ்துக்களாக வேறுபடுகின்றன.

    (குறிப்பு : தங்கள் ஞாபகத்திற்காக.. *கடந்த பசு இலக்கணப் பதிவில்* அளித்துள்ளமையைக் காண்க.)

    நமது சரீரம் ஐம்பூதக் கலப்பால் உருவானது என்றாலும் அது 96-தத்துவங்களாகவும் மனிதனை இயக்கும்.

    அந்த 96-தத்துவங்களாவன....

    *ஆன்ம தத்துவம் - 24
    *தச நாடிகள் - 10
    *தச வாயுக்கள் - 10
    • நவ வாயில்கள் - 9
    • விகாரங்கள் - 8
    • தாதுக்கள் - 7
    • ஆதாரங்கள் - 6
    •பஞ்ச கோசங்கள் - 5
    *பஞ்ச அவஸ்தைகள் - 5
    *மும்மலங்கள் - 3
    *முக்குணங்கள் - 3
    *முப்பிணிகள் - 3
    *மும்மண்டலங்கள் - 3
    என மொத்தம் 96 தத்துவங்கள்.

    இதனை விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம் !

    Sivajansikannan@gmail.com.

    ReplyDelete
  7. Thu. 5, Feb. 2026 at 7.49 pm.

    *சைவ சித்தாந்தம் :*

    தொடர்ந்து 96- தத்துவங்களைப் பற்றி பார்க்கலாம்...!

    96- தத்துவங்களைப் பற்றி நாம் ஓரளவாவது அறிந்து கொண்டால் தான் நம் சரீரத்தின் பஞ்சீகரணத் தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    அவ்வகையில்..

    *ஆன்ம தத்துவங்கள் 24 :*

    *1) ஞானேந்திரியங்கள் = 5*

    ஞானேந்திரியங்கள் என்பது - அறிவு உறுப்புக்களான ஐம்பொறிகள்.
    தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம், சோத்திரம் என்பவை.

    *தொக்கு என்பது - மெய்
    *சிங்குவை என்பது - வாய்
    *சட்சு என்பது - கண்
    *ஆக்கிராணம் என்பது - மூக்கு
    *சோத்திரம் என்பது - செவி.


    *2) கன்மேந்திரியங்கள் = 5*

    கன்மேந்திரியங்கள் என்பது - தொழில் உறுப்புக்கள். பாணி, பாதம், வாக்கு, பாயிறு, உபத்தம் என்பன.

    *பாணி என்பது - கை
    *பாதம் என்பது - கால்
    *வாக்கு என்பது - வாய்
    *பாயிறு என்பது - எரு வாய் (மல வாய்)
    *உபத்தம் என்பது - கரு வாய்


    *3) தன்மாத்திரை = 5*

    தன்மாத்திரை என்பது - ஞானேந்திரியங்களால் அறியக்கூடிய நுண்ணியப் பொருட்கள். இரசம், ரூபம், ஸ்பரிசம், சத்தம், கந்தம் என்பன.

    *இரசம் என்பது - சுவை
    *ரூபம் என்பது - ஒளி
    *ஸ்பரிசம் என்பது - ஊறு
    *சத்தம் என்பது - ஓசை
    *கந்தம் என்பது - நாற்றம்

    *4) அந்தகரணங்கள் = 4*

    அந்தகரணங்கள் என்பது - அகக் கருவிகள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

    *மனம் என்பது - மனம்
    *புத்தி என்பது - அறிவு
    *சித்தம் என்பது நினைவு
    *அகங்காரம் என்பது - முனைப்பு

    *5) தசநாடிகள் = 10*
    1.இடகலை 2.பிங்கலை 3.சுழிமுனை 4.சிகுவை 5.புருடன் 6.காந்தாரி 7.அத்தி, 8.அலம்புடை 9. குரு 10.சங்கினி
    என்பன.

    தசவாயுக்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்..!
    Sivajansikannan@gmail.com.


    ReplyDelete
  8. Sun, 8, Feb. 2026 at 4.09 am

    *சைவ சித்தாந்தம் :*

    தொடர்ந்து....

    *தசவாயுக்கள் - 10 :*

    தசவாயுக்கள் அல்லது காற்றுகள் என்று பெயர். அதாவது பத்து வளிகள். வளி என்றால் வாயு என்று பொருள்.

    இந்த வளி ஒன்றாயிருப்பினும், தன் இடம், தொழில் முதலியவற்றால் பத்து வகைப்படும்.

    *அவை :*

    1.பிராணன் 2.வியானன் 3.அபானன் 4.உதானன் 5.,சமானன் 6.கிருகரன் 7.கூர்மன் 8.நாகன் 9.தேவதத்தன் 10.தனஞ்செயன்.

    இதனை சற்று விரிவாகக் காணலாம்..!

    *பிராணன் என்பது - உயிர்காற்று அல்லது உயிரக்கால்.* இதன் பணி இருதயத்தை இயங்கச் செய்து, பசி தாகங்களை உண்டாக்கும்.

    *வியானன் என்பது - தொழில் காற்று.* இரத்தத்தை எங்கும் பரவச் செய்து தேகத்தை தாங்கி நிற்கும். இது பால் நிறம்.

    *அபானன் என்பது - மலக் காற்று.* ஆசன வாயை சுருக்கும். அபானனை *கீழ் நோக்குங்கால் என்பர். சுவாதிட்டானத்திலிருந்து வெளிப்பட்டு மலசலத்தைத் தள்ளும். இது பச்சை நிறம்.

    *உதானன் என்பது - ஒலிக்காற்று.* இது மேல்நோக்கும் கால் எனப்படும். நிறம் மின்னல் நிறம்.

    பிருதிவியின் கூறாகையால் . அதாவது மண்ணின் கூறானபடியால் மார்பையே இடமாகக் கொண்டு, கொப்பூழ், கழுத்து, மூக்கு இம் மூவிடங்களிலும் வாழ்ந்து பேச்சுக்கு முதற்காரணமாய் இருக்கும்.

    அதுமட்டுமின்றி... முயற்சி, மனதிடம், உடல் வன்மை, உடல் நிறம், உடல் ஒளி, நினைப்பு ஆகிய இவற்றையும் உணடாக்கும்.

    சுருக்கமாகக் கூறின்..... *உசுவாசம், நிசுவாசம்* செய்யும்.

    உசுவாசம் என்பது - மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

    நிசுவாசம் என்பது - மூச்சுக் காற்றை வெளிவிடுதல்.


    *சமானன் என்பது - நிரவு காற்று.* இதனை *நடுக்கால்* என்பர். அன்ன ஆகாரங்களை சமானம் செய்யும். இதனது நிறம் புட்பராகம்.


    *கிருகரன் என்பது - கொட்டாவி காற்று.* தேகத்தை முறுக்கி கொட்டாவி விடச் செய்யும்.

    மேலும், இது நாவிலிருந்து நாவின் கசிவையும், நாசியில் கசிவையும் உண்டாக்கும். தும்மல், இருமல் ஆகியவற்றை உண்டாக்கும். மிகுந்த பசியை உண்டாக்கச் செய்யும்.


    *கூர்மன் என்பது - விழிக்காற்று.* இது மனதிலிருந்துக் கிளம்பி கண்ணில் நின்று இமையைக் கொட்டுவிக்கும்.

    கொட்டாவி விடவும், வாயை மூடவும் செய்யும். மேலும், வாயு ஏற்ற இறக்கத்தால் விக்கல், ஏப்பம் உண்டாக்கும்.


    *நாகன் என்பது - தும்மல் காற்று.* தும்மலை உண்டாக்கும். இதனது நிறம் பொன்னிறம்.


    *தேவதத்தன் என்பது - இமைக் காற்று.* சிரிப்பு, சோகம் முதலியன உண்டாக்கும். குதம், குய்யம் எனும் இடங்களில் இருக்கும். இதன் நிறம் படிகம்.


    *தனஞ்செயன் என்பது - வீங்குங் காற்று.* உயிர் நீங்கியபின் காற்றெல்லாம் வெளிப்பட்ட பின்னர் மூன்றாவது நாளில் தலை வெடித்தபின்தான் போகும். இது மூக்கிலிருந்து தடித்து உடம்பு முழுமையும் வீங்கப் பண்ணும். இதனது நிறம் நீலம்.

    மீண்டும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

    Sivajansikannan@gmail.com.

    ReplyDelete
  9. Tue. 17, Feb. 2026 at 10.19 pm.



    *நிரந்தரமானது - அடிப்படையானது :*


    1 ) மூல இ ய ந் த ர ம்
    ________________________

    1 2 3 4
    ________________________

    12 13 14 5
    ________________________

    11 16 15 6
    ________________________

    10 9 8 7
    ________________________



    __________________________

    விபரம் -16 - முதல் அறை
    __________________________

    16 - 3 - 13 - 2 - 7 - 14 - 11 - 8 -
    10 - 5 - 4 - 9 - 8 - 12- 1 - 15

    இந்த எண்களால் மூலங்கள் - ஜீவன்கள் அறியலாம்.
    _________________________________



    _____________________________

    மூ ல ம் - 16 க்கு
    ___________________________

    1.பொற்றலைக் கையான்

    2.சீதாதேவி செங்கழுநீர்

    3.மயிர்ச்சிகைப் பூண்டு

    4.ஆடையொட்டி

    5.வெண்கொழுஞ்சி

    6.சிரியாநங்கை

    7.அழுகண்ணி

    8.சத்திச் சாட்டரணை

    9.முத்தெருக்கன் செவி

    10.ஆண்கழற்சி

    11.வெள்ளெருக்கு

    12.ஆணை வணங்கி

    13.தாளி

    14.பேய்த் தும்மட்டி

    15.பிரமதண்டி

    16.வாழை
    _________________________



    _________________________
    சீ வ ன் - 16 க்கு
    _________________________

    1. குழியானை

    2. கருநாயின் நாக்கு

    3. மயில்பிச்சு

    4. சுழல் வண்டு

    5. அண்டங் காக்கைத் தலை

    6. கோரோசனை

    7. கரும்பூனைப்பஞ்சாங்கம்

    8. ஆதிக் கொடி

    9. புறா எச்சம்

    10. மனிதர் பிச்சு

    11. பச்சோந்தி

    12. காட்டட்டை

    13. ஆறுபுள்ளி வண்டு

    14. இந்திரக் கோபப் பூச்சி

    15. வெள்ளாட்டு நாக்கு

    16. தேவாங்கு
    _________________________________



    _____________________________

    இயந்தரம் எண்களுக்கு
    _____________________________

    16 3 13 2 = 34

    9 6 12 7 "

    4 15 1 14 "

    5 10 8 11 - 34
    ________________________


    இந் நான்கு அறைகளில்... 1-மூலம். 2.சீவன் 3. மூலம் 4.சீவனாக சேர்த்து.. யொதொரு தொழில்கட்கும் கூட்டு.


    நல்லதொரு பொருத்தமான நாளில் மூலிகைகளிடம் போய் சுத்தம் செய்து பூசித்து காப்புகட்டி மந்திரத்தைச் செபித்து வேரைக்கெல்லி ஆணிவேர் அறாமல் பிடுங்கி செய்தால் யாதொரு மூலிகையும் நல்ல பலனைத் தரும்.

    _____________________________
    *மூலமந்திரம் :*
    _____________________________

    ஓம் நம : மூலரூபிணி,
    அங்கிஷ : இங் இங்,
    உங் உங், ரீங் திஷ்ட திஷ்ட,
    மாமாட்சர, ஓம் சுவாஹா -
    என்று 108 உருகொடுத்து
    பிடுங்கி வந்து உபயோகிக்கவும்.
    ___________________________________



    _________________________________
    ஐம்மல விபரம்
    _________________________________

    வாய் நீர், மூக்குச் சளி, கண்பீளை, காது குறும்பி, இந்திரியம். இந்திரியம் வெளிப்படாவிடில் 'தலைப் பேனை" சேர்த்துக் கொண்டு செய்யலாம்..

    *உதாரணமாக - லோக வசியம் :*

    16 - 3 - 13 - 2 (வாழை - மயிர்ச்சிகை பூண்டு - தாளி - சீதாதேவி செங்கழுநீர்))
    இவற்றைப் பொடித்து, திரியாக்கி, பசு நெய்யில் விளக்கேற்றி, புதிய பனை ஓலையில் மை பற்ற வைத்து, மைபிடித்து, அதைக் காராவின் நெய்யிலிழைத்து கண்களில் தீட்டிச் செல்ல யாவரும் வசியமாவார்கள்.

    *உதாரணம் - 2 :*

    8 - 9 - 3 - 14-ல் பொன்னூமந்தை வேர் சமமாகச் சேர்த்து,, குங்குமச் சாந்து, ஐம்மலமும் சேர்த்து, வெண்ணையில் குழைத்து உடம்பில் பூசிச் செல்ல 3-லோகத்திலுள்ளவர்களும் வசியமாவார்கள்.

    அனைத்தும் இவ்வாறு இவ்வாறு இவ்வாறே....

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  10. Wed. 18, Feb. 2026 at 7.57 pm.

    5, 15, 3, 11 - இவைகளை நல்ல யோகத்தில் அரைத்து, உருண்டை செய்து... எவ்வித வழக்குகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் வாயில் அடக்கிக் கொண்டு பேச எல்லாம் கெலிக்கும். *எதிரிகள் தோல்வி அடைவர்.*

    Sivajansikannan@gmail.com

    *****"""*****

    ReplyDelete
  11. 13, 11, 2, 8 - இதனை அரைத்தாகினும் அல்லது சும்மாவாகலும் தனது மடியில் வைத்துக் கொண்டு, பகைவரின் எதிரே செல்ல, வழக்கு வென்று எதிரிகள் வணங்கி வருவார்கள்.
    *****-*****

    ReplyDelete