லக்கினம் முதல்
12 ஸ்தானங்களின்
பலன்கள்
லக்கினம் - (இப்பிறவி ) உயிர், தேகம், தோற்றம்
2ம் இடம் - (வாக்குஸ்தானம்), குடும்பம், தனம் , கண
3ம் இடம் -(சகோதர ஸ்தானம் ), பேச்சு வல்லமை, தைரியம், காது, அணிகலன், தம்பி
4ம் இடம் -(சுகஸ்தானம்), வீடு, வாகனம், தாய், நிலம், உறவினர்கள்,கல்வி
5ம் இடம் -(புத்திர ஸ்தானம் ) வாரிசு, புகழ், குலத்தெய்வம்
6.ம் இடம் - (ரோக ஸ்தானம்) விரோதி, கடன், வழக்கு
7ம் இடம் -(களத்திரம் ஸ்தானம்) மனைவி, கூட்டாளிகள்
8.ம் இடம் -(ஆயுள் ஸ்தானம்) ஆயுள், மரணம்
9ம் இடம் -(பாக்கிய ஸ்தானம் ) தந்தை இஷ்ட தெய்வம், தர்மம்
10ம் இடம் -(தொழில் ஸ்தானம் ) கர்மம், தொழில்
11ம் இடம் (லாப ஸ்தானம் ) அண்ணன், லாபம்
12ம் இடம் -(விரய ஸ்தானம் ) செலவ, உறக்கம், மோட்சம்
அய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். சகுனம் பற்றியும் ஒரு பதிவு தனியாக அளித்தால் நலமாக இருக்கும். சகுனம் பார்க்க கூடாது என சோதிடத்தில் கூறப்படவில்லைதானே.
ReplyDeleteசகுனம் என்பது நிமித்த சாஸ்திரம் அப்படித்தானே. பறவை, மிருகம், குறிப்பிட்ட மனிதர்கள் எதிர்படுவதால், சத்தங்களைக் கேட்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி சற்று கூறுகிறேன்.
வலியன், கருடன், கழுகு, காடை, ஆந்தை, உடும்பு, கீரி, குரங்கு இவைகள் இடமாக வந்தால் நன்மை தரும்.
காக்கை, செம்போத்து, கொக்கு, கிளி, மயில், நாரை, கோழி, ஓணான், புனுகு பூனை, நரி, புள்ளிமான் இவைகள் வலமாக வந்தால் நன்மை.
பாம்பு, முயல், பூனை குறுக்கே வருதல் ஆகாது.
கொடி, குடை, சாமரம், கரும்பு, பால், தயிர், கள், தேன், பொரி, மலர்,, சலவை வஸ்திரம், பட்சிக் கூட்டம், மங்கள வாத்தியம், மணக்கோலம், சுமங்கலி, நிறை குடம், பழங்கள் எதிர்பட்டால் நன்மை தரும்.
மங்கல வாத்தியம், மூஞ்சூரின் சத்தம், வேத ஓசை, கழுதை, குதிரைகள் கனைத்தல் நன்மை தரும்.
அழுகுரல், பன்றி உறுமுதல், கொக்கரித்தல், கால் இடறுவது, தலை தட்டுவது, போகாதே.. என்ற குரல் ஆகாது.
பைத்தியக்காரர், குருடர், நொண்டி, விறகுக் கட்டு, மொட்டைத் தலை, நோயாளி, எண்ணெய் குடம், தட்டான், வாணியன், அம்பட்டன், அமங்கலை, பயங்கர வேஷதாரி, சன்யாசி, சடாமுடி உடையவர், அலி,, ஒற்றைப் பிராமணர், இரட்டை மனிதர்கள், நெருப்பு எதிரில் வருவது ஆகாது.
மீண்டும் அடுத்த பதவிலே சந்திக்கலாம்.